SS தட்சிணாமூர்த்தி போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தட்சிணாமூர்த்தி போற்றி
தட்சிணாமூர்த்தி போற்றி
தட்சிணாமூர்த்தி போற்றி

ஓம் தென்திசை நோக்கியிருப்பவனே போற்றி
ஓம் தேசப்பளிங்கின் திரனே போற்றி
ஓம் மன்னிய திருவருள்மலையே போற்றி
ஓம் சென்னையில் வைத்த சேவகா போற்றி
ஓம் என்னையு மொருவனாக்கி யிருகழற் போற்றி
ஓம் முழுவது மறிந்த முதல்வா போற்றி
ஓம் சீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் தீயமை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
ஓம் இன்றெனக் காரமுது ஆனாய் போற்றி
ஓம் கன்னாகுரித்த கனியே போற்றி

ஓம் காவாய் என்றனக்கு அருள்வாய் போற்றி
ஓம் இடரினைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் ஆதி போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் இன்பா போற்றி

ஓம் இறைவா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் நினைவே போற்றி

ஓம் வேதியா போற்றி
ஓம் விமலா போற்றி
ஓம் வானோர்க்கு அறிய மருந்தே போற்றி
ஓம் விரிகடல் உலகின் வினைவே போற்றி
ஓம் அழிவது மாவதும் கடந்தாய் போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் அருமுகிலாகிய கண்ணே போற்றி
ஓம் கருணையே இருக்கை ஆக்கினாய் போற்றி
ஓம் கண்டத்தில் நஞ்சை வைத்தாய் போற்றி
ஓம் கனவிலும் கண்ணாமுதக் கடலே போற்றி

ஓம் அண்ணாமலையெம் அண்ணா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய கடம்பா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் பாகம் ஒரு பெண் ஆனாய் போற்றி
ஓம் சிராப்பள்ளி சிவனே போற்றி
ஓம் தாயாகி வந்தமர்ந்தா போற்றி
ஓம் மருத்துவம் பார்த்தமருந்தே போற்றி
ஓம் மகிமையுனக்கே யுகந்தாய் போற்றி

ஓம் மயான துர்க்காவாய் ஆனாய் போற்றி
ஓம் மயிலையின் மஞ்சமும் நீயானாய் போற்றி
ஓம் மக்கள் குறைகளை களைவாய் போற்றி
ஓம் மந்திரமும் தந்திரமும் நீயே போற்றி
ஓம் மங்கையைச் சடையில் வைத்தாய் போற்றி
ஓம் சந்திரனையும் ஆட்கொண்டாய் போற்றி
ஓம் சந்தான பாக்கியம் அருள்வாய் போற்றி
ஓம் மண்சுமந்து மன்னன் அடிபெற்றாய் போற்றி
ஓம் அகார உகார மகாரம் ஆனாய் போற்றி
ஓம் பரம்பரஞ்சோதிபரனே போற்றி

ஓம் பரகதி பாண்டியர்க்கு அருளினாய் போற்றி
ஓம் ஆராவமுதே அருளே போற்றி
ஓம் பேராயிரமுடைய பெம்மான் போற்றி
ஓம் ஓராயிரம்பேர் உனக்கே போற்றி
ஓம் கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் குவைப்பதிமலிந்த கோவே போற்றி
ஓம் திருக்கழுக் குன்றச் செல்வா போற்றி
ஓம் பொறுப்பவர் பூவணத்தானே போற்றி
ஓம் தெறவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தோளாமுக்கம் சுடரே போற்றி

ஓம் கருங்குருவிக்கன்று அருளினை போற்றி
ஓம் காலனை வென்ற கங்காளனே போற்றி
ஓம் காராம் பசும்பாலைக் கரந்தனை போற்றி
ஓம் கற்பக மரத்தடி அமர்ந்தனை போற்றி
ஓம் வேராகி விண்ணனாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாத யென்னை ஆட்கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் ஆற்றாராகியங்கே அமர்ந்தோய் போற்றி
ஓம் ஆரங்க நால்வேதமானாய் போற்றி

ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி
ஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றி
ஓம் வைச்சாடனன்று முகந்தாய் போற்றி
ஓம் மறுவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேச பேரவப்படு வாய் போற்றி

ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் தேத்தை வார்த்த தெளிவே போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
ஓம் என் சிந்தை நீங்காத இறைவா போற்றி
ஓம் கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
ஓம் கதிர்ஒளிச்சுடர் காட்சி அளித்தாய் போற்றி
ஓம் கல்லுயுராகி நின்ற கனலே போற்றி

ஓம் கானத்தை மெச்சி ஆடினாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் ஓங்காரத்தின் பொருளை உகந்தனை போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் யாவருக்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொரு கண்ணே போற்றி
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
ஓம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar