கல்வியில் நினைவாற்றல் பெருக
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளையின்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொரு ளாவாள் மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். - பாரதியார் |