கற்ற கல்வியினால் பலன் பெற
சரஸ்வதி என் தலையைக் காக்க வாக்கின் தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க விரசு பகவதி கண்ணைக் காக்க நாசி விமலைவாக் வாதினியாள் காக்க வித்தைக்(கு) உரியதனித் தேவதைகள் என் உதடு காக்க உயர்புகழ் பிராம்மிபல் வரிசை காக்க மருவும் ஐம் என்றிடுமனு கண்டம் காக்க வாழ் ஹ்ரீமாம் எழுதது என்றன் பிடரைக்காக்க
எழுத்தான சிரீம் என்தோள் காக்க வித்யா திருஷ்டாத்மா என்மார்பில் இருந்து காக்க வழுத்துவித்யா ரூபிணிஎன் நாபி காக்க வாணிகரம் காக்க எல்லா எழுத்தின் தேவி விழுத்தகஎன் அடிகாக்க வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதை தான் என்றன் மழுத்தஉறுப் பெவற்றினையும் காக்க காக்க முள் கிழக்கில் சர்வகண்ட நாசிகாக்க
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட் சரிகாக்க மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க காக்க புகல்மூன்றக்கர வருவாள் நிருதி திக்கில் தங்கியெனைப் புரந்தருள்க மேற்குத் திக்கில் சாற்றுநா நுனியுறையும் அன்னை காக்க துங்கமிகு சர்வாம்பிகை தான் வாயு துன்னுதிசையினின் என்னைக் காக்க காக்க
கத்திய வாகினி வடக்கில் காக்க எல்லாக் கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க நத்துசர்வ பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருத்து காத்தருள்க அகோமுகத்தில் புத்தகவா இனியாகும் தேவி காக்க புகழ்கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள் எத்திசைகளிலும் இருந்து காக்க காக்க எளியேனைக் கலைமகள் தான் என்றும். |