தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து என்னாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா கமலா சனத்தாளே காரடி பெற்றவளே என்-குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே என்னாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா மாரியம்மன் தன்கதையை மணமகிழ்ந்து நான்பாட சரியாக என்னாவில் தங்கிகுடி யிருஅம்மா கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட பின்ன மில்லாமல் பிறகிருந்து காருமம்மா |