SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநீற்றுப் பதிகம் - ஆசிரிய விருத்தம்1. கொண்ட கொண் டிட்டவெகுசொரூபங்களுக்கழகு கொடுக்கச் சமைந்த நீறுகொடிய வெண்ணாயிரஞ் சமணரைக் கழுவினிற்கொலை செய்து கண்ட நீறுதுண்டகண்டப்படக் கொடூர வெஞ்சூரனுடல்துணிக்கவேல் தொட்டநீறுசொல்லரிய பூதப் பிசாசு பில்லிசூனியஞ் சுடரிட்டெரித்த நீறுசெண்டுபோற் கயிலை மலையெடுத்தவன்கூன் முதுகு செவ்வையாய் நிமிர்த்தநீறுசிவபக்தியில்லாத முழு மூடர்நெஞ்சந் திடுக்கிடத் தொடுத்தநீறுஅண்ட நவகண்ட முதல் வணங்கித்துதித்திட ஆண்மையாய் வந்த நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.2. சம்பந்தராகவே தென்னவன்கூடலிற் சமணரையழித்த நீறுசகல குருபரவனாக அரசனுக்குவுபதேசந் தானாயுரைத்த நீறுநம்பின அடியவர்கள் ஈடேறவினையோட நாதனாய் வந்தநீறுநாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகள்முனி சித்தர்கள் நம்பியே பூசுநீறுகம்ப மதயானை மாமுகவனுக் கிளையவன்கருதியே தந்த நீறுகாலனிட தூதனை நாடாமல் எந்நாளும்காக்கவே வந்த நீறுஅம்பிகை திரிசூலி சுந்தரி சவுந்தரிஅபிராமிவல்லி தந்தஅடியவர்க்கருள் கிருபை பொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.3. அரவங்கள் பூதங்கள் மிருகங்கள்பேய்களை அடக்கவே இட்டநீறுஅஷ்டபாக்கிய லட்சுமி இஷ்டமுடலெந் நாளும் அகலாமல் இட்டநீறுஇரவுபகல் மறவாமல் முருகர்திருநாமமே இறைஞ்சித் தரித்தநீறுஎதிராளி நெஞ்சங் கலங்கிப்பயந்தோட ஏற்கவே இட்டநீறுபரவு பல பிணிகளும் உறவு கெடுகோள்களும்பணிந்தோட விட்டநீறுபஞ்சபாதகமுடன் மிஞ்சிடும் வல்வினைபணிந்திட வணிந்த நீறுஅரசனுடன் மந்திரியாண் புவி வீரரும்மதி வசியமான நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.4. இருப்பான தலமெலா மென்றுந்துதிப்பதற் கீடேற்றஞ் செய்யுநீறுஎங்கெங்கிருந்தாலுமேத்திப்பணிந்திடவெதிராக நிற்குநீறுதிருப்பரங்குன்றமுஞ் செந்தில்கதிர்காமமுந் திருச்சோலைக்குகந்தநீறுதிருத்தணிகை சுவாமிமலை திருவேரகம்புகழ்செவ்வேலர் தந்த நீறுபொருப்புகள் முடிதோறும் பதகமலமுத்திரைபுகழ்பெருக வந்தநீறுபூசைசெய் யைவராற்றிருவா வினன்குடிபோதிக்க வந்தநீறுஅருட்பாதம் நத்தியே நினைப்பவர்கள்நெஞ்சினில் அகலாதிருந்த நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.5. நூலைப்பகுத்த விடைமாதர்க்குவேலாக நுதலிற்றரித்த நீறுநூரு நூறாயிர மீமிசை வந்தாலுமொருநொடிற்றொலைக்கு நீறுவேலைக்கடிந்து வெகு சூரர்கள் மடியவேவெற்றிவேல் தொட்டநீறுவேதனைச் சிறையிட்டு பிரணவத்துட்பொருள்விமலற்குரைத்த நீறுவாலைப் பருவமாய் வயது நூறாகவேவசியகரமான நீறுமாறாத செல்வமும் பேறான வாழ்வுடன்வரிசை தர வந்தநீறுஆலவாய்ச் சொக்கருடன் ஆனந்தத்தாண்டவம் ஆடிச் செழித்த நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.6. ஓராறு சென்னியு மீராறுபுயமென்னுள்ளம் பதித்தநீறுஓதுதமிழ் மதுரையி லுமை பெண்பேசவே உபதேசமான நீறுகாரானை முகவனுக்கிளையவன்விராலிமலைக் காங்கேயன் தந்த நீறுகயிலைமலை யொரு நொடியில்அரனை வலமாகவே காணவே வந்த நீறுபேரான வசுரருங் குன்றமும்வேலாற்பொடிபடத் துணித்த நீறுபொற்சந்தி மலையிலுறை வள்ளியுட நாயகன்பொன்னாடி வணங்கு நீறுஆறாடு செஞ்சடைக் கயிலை நாயகனுமைக் கழகு பெறவந்த நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.7. எத்தேச காலமும் முத்தையரென்னுமிவ் வேழைக் கிரங்குநீறுஎழிலான கிருத்திகை தவறாமல் அனுஷ்டிக்கஇன்பங்கள் தந்தநீறுசிற்றிடை வள்ளியுடன் தினைப்புனங் காத்திடச்சிவசித்தாய் நின்றநீறுசிற்றூரு வேடர்கள் சிவபக்த ராகவேதிருவுருக்கொண்ட நீறுமுத்தமிழ்க்காகவே அருணகிரிநாதருக்குமோக்ஷங் கொடுத்தநீறுமுப்பத்துமுக்கோடி தேவாதி தேவரும்முருகரென வந்தநீறுஅத்தனருள் கந்தனார் நித்தம்விளையாடவே அகலாமலிட்டநீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.8. வேதாள பூதப் பிசாசு பில்லிசூனிய மிரட்டித் துரத்தநீறுவெண்டையந் தண்டையொடு கிண்கிணிசிலம்பசைய வீரவேல் தொட்டநீறுசூதான களபமுலை வள்ளியிட நாயகன்சுப்பிரமணியர் தந்தநீறுதும்புரு நாரதர் கிம்புருடர் போற்றித்துலங்கவே வந்தநீறுஓம் முருகாவென்று உள்ளமதுகுளிரவே உற்றதுணையானநீறுஓம் நமசிவாய குரு ஞானாதி தேசிகன்ஒளியாகி வந்தநீறுஆதாரமாகவே நெஞ்சினில் எப்பொழுதுமறவாது நின்றநீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.9. துஷ்டப் பிசாசு பிணி கிட்டவெட்டாமலே சுடரிட்டெரித்த நீறுசுற்றவே நிற்கின்ற அஷ்டதிசை பாலரும்சொல்லுமுன் வணங்குநீறுவட்டமாய்ப் படர்தேகம் பதினெட்டுகுஷ்டமும் வாராமற் பூசு நீறுவாளரவம் வண்டுகடி சிலந்தி தேள்விஷமெலாம் வாங்கவு மணிந்தநீறுகொட்டமிடு சூரரை வெட்டிப் பலியிட்டுசெயங் கொள்ளவே வந்தநீறுகூறுமொழி நக்கீரர் மேன்மைபெறவேல்வாங்கி குன்றைப் பிளந்தநீறுஅஷ்டதிசை பதினாறு முக்கோண சட்கோணமறுபத்து நாலுகலையும்அடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.10. மருமலர் கமலத் துதித்தவன்கிளைவழி வாழ்விக்க வந்தநீறுமன்னுபிர மாமுனி அகஸ்தியர்போகருடன் வழிகொள்ள வந்தநீறுசரணமலான்பனாங் குலாலகுலத்திருக்கை தண்டமிட்டுதவுநீறுசண்முக நதிமூழ்கி கிரிவலம் வந்தோர்க்குசகலபிணி தீர்த்தநீறுவறுமைபடு மெளியார்க்குங் கொலை செய்தபாவற்கும் வருவிதர மொத்தநீறுவாழ்வு கார்த்திகை சோம சுக்கிர வாரஞ்சஷ்டிவந்திப்போர்க் கருளுநீறுஅருமறைகள் பரவுகுரு சிவசமயந்தழைக்கவே அவதரித்தருளு நீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.11. பத்தான கவிதையும் மனதிற் உதிப்போர்க்குப்பாக்கியந் தந்தநீறுபரிவாக எந்நாளும் சரவணபவா வென்னபரிசுபெற வைக்கும்நீறுகஸ்தூரி குங்குமம் கமழவள்ளி நாயகன் காங்கேயன் தந்தநீறுகார்த்திகை நாள் தோன்றி வெற்றி வேலாயுதன்கடம்பனார் தந்தநீறுமுத்து நவரத்தினத் தண்டையணி பாதநன்முடிமேற்றரித்த நீறுமுழு நீல மயிலேறி வந்துமுன்நின்றுமே முன்கையிற்றந்த நீறுஅத்தனாற் பங்கினிற் சத்துரு சங்காரியாய்அபிராமிவல்லி தந்தஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.12. வட்டச் சடாட்சரச் சரவணபவா வென்றுமதியிற்று திக்கும் நீறுவாதாடி வந்தெதிர்த்திட்ட பூதங்களைமார்பைப் பிளந்தநீறுஇஷ்டமுடன் சரியையொடு கிரியையோகஞானமேற்க வேதந்த நீறுஇன்பமாகவே கயிலை மலையேறிமோக்ஷத்திலிருக்கத் தகுந்த நீறுஎட்டுத் திசையதிர மயிலேறிஉலகைவல மிமைக்கு முன் வந்தநீறுஇமையவர் முனிவர்கள் தேவேந்திரனாதியர்யிடரழித்திட்ட நீறுஅஷ்டதிசை பெற்ற தீவேழுமீரேழுகை அரசாளவந்தநீறுஅடியவர்க்கருள் கிருபைபொழிபழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.திருநீற்றுப் பதிகம் முற்றிற்று.