|
குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகள், கடன் பிரச்சனைகள் தீரவும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், விவாகம் ஆகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடையவும் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ராகு, அங்காரகன், சனி தோஷ நிவர்த்திக்காகவும் பிரதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை மவுனமாக இருந்து, காலையில் எழுந்ததும் ஸ்நானம், சந்தியா வந்தனம் செய்து (திருமணமான பெண்கள் ஸ்நானம் செய்து குங்குமம் அணிந்து) 21 அங்காரக நாமாக்களை சொல்லிவிட்டு இந்த அங்காரக விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அடையலாம். செவ்வாய்க் கிழமை காலை 7 மணியுடன் மவுனத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த விரதத்தில் மவுனமே பிரதானம்.
அங்காரக காயத்திரி
ஓம் அங்காரகாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹீ தன்னோ பவும ப்ரசோதயாத்
(ரண- ரிணங்களைப் போக்கும் 21 அங்காரக ப்ரீதி நாமாக்கள்)
மங்களோ, பூமி புத்ரஸ்ச, ரிணஹர்த்தா, தனப்ரத ஸ்திராஸனோ, மஹாகாய: ஸர்வ கர்மா வரோதக லோஹிதோ, லோஹிதாக்ஷஸ்ச, ஸாமகானாம் க்ருபாகர தராத்மஜோ, குஜோ, பௌம பூதிதோ, பூமி நந்தன அங்காரகோ, யமஸ்சைவ, ஸர்வரோகா பவஹார வ்ருஷ்டே: கர்த்தா, அபஹர்த்தாச, ஸர்வகாம பலப்ரத ஏதானி குஜநாமானி நித்யம் ய: ச்ரத்தயா படேத் ரிணம் ந ஜாயதே தஸ்ய. ஸந்தானம் வர்த்ததே ஸதா ஏவம் க்ருதே ந ஸந்தேஹ ரிணம் ஹித்வா ஸுகீபவேத்
|
|
|