SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றிஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றிஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றிஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றிஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றிஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றிஓம் ஈசற் இனிய சேயே போற்றிஓம் மாசறு திருவடி மலரோய் போற்றிஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றிஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றிஓம் கானில் வள்ளியின் கணவ போற்றிஓம் எழில்கொள் இன்ப வாரிதி போற்றிஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றிஓம் ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றிஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றிஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றிஓம் செய்ய மேனியனே தேவே போற்றிஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றிஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றிஓம் மாமுதல் தடிந்த மறவ போற்றிஓம் ஒளவியம் அறுத்தோர்க் கருள்வாய் போற்றிஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றிஓம் அஃகுதல் அற்றார் விளக்கே போற்றிஓம் கந்தா மணமார் கடம்பா போற்றிஓம் நந்தா விளக்கே நாயக போற்றிஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றிஓம் மூப்பீறற்ற முதல்வா போற்றிஓம் முத்தமிழ் முதல்வனே போற்றி ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றிஓம் கீழறும் அடியர் கிழிவோய் போற்றிஓம் ஏழல குந்தொழும் இறைவா போற்றிஓம் குன்றும் குழைதோட் குமர போற்றிஓம் என்றும் இளைய ஏறே போற்றிஓம் கூம்புகைத் தேவர் கோவே போற்றிஓம் பாம்பணி சிவனார் பாலக போற்றிஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றிஓம் அண்டினர்க் கருளும் அங்கண போற்றிஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி ஓம் வீடில் வீடருள் விமல போற்றி ஓம் கைவேல் கொண்ட காவல போற்றிஓம் நைவேற் கருள்வாய் நாயக போற்றிஓம் கொடைக் கடன்கொண்ட குழக போற்றிஓம் படைக்கடல் தலைவ பரனே போற்றிஓம் கோதில் அமிழ்தே குருமணி போற்றிஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றிஓம் சிவபிரான் கண்வரு சேயே போற்றிஓம் நவசர வணத்தில் நகர்ந்தாய் போற்றிஓம் அறுவுரு அமைந்தே ஆடினாய் போற்றி ஓம் அறுமீன் பாலுண் அமர போற்றிஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றிஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றிஓம் நான் முகனைச் சிறை நாட்டினாய் போற்றிஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றிஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றிஓம் அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றிஓம் இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றிஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றிஓம் பரங்குன்றமர்ந்த பரம்பர போற்றி ஓம் திருச்செந்தில் வளர் சேவக போற்றிஓம் ஆவினன்கு குடி ஆண்டாய் போற்றிஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவ போற்றிஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றிஓம் துன்று பழமுதிர் சோலையாய் போற்றிஓம் திசைமுகம் விளக்கும் செம்முக போற்றிஓம் இசைபெரு வேள்வி இனமுக போற்றிஓம் செங்களம் ஓர்க்கும் திருமுருக போற்றிஓம் மங்கல மான வானவ போற்றிஓம் வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றிஓம் ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றிஓம் சிர்வளர் அழகின் செல்வா போற்றிஓம் மணிமுடி புனையாறணி முடி போற்றிஓம் துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றிஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றிஓம் கவித்தொடை புனைதோட் கந்தா போற்றிஓம் பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றிஓம் என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றிஓம் பொருவில் ஒருவனாம் புலவ போற்றி ஓம் அருணகிரிக்குக் கருள் அமல போற்றிஓம் நக்கீரற் கருள் நாதா போற்றிஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய் போற்றிஓம் குமர குருபரற் கருளினை போற்றிஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றிஓம் பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றிஓம் கந்தபுரி வாழ்வுகந்தோய் போற்றிஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய் போற்றிஓம் பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றிஓம் கோழி வெல்கொடிக் கோவே போற்றி ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றிஓம் செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றிஓம் மெய் யெலாம் வெண்ணீறணிவோய் போற்றிஓம் மேவலர் மடங்காலம் விசாக போற்றிஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றிஓம் தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றிஓம் சேவலும் மயிலும் சேர்த்தோய் போற்றிஓம் போர்மிகு பொருந புரவல போற்றிஓம் ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றிஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றிஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றிஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றிஓம் கல்வியும் செல்வமும் களித்தருள் போற்றிஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றிஓம் இன்பார் இளைய ஏந்தால் போற்றிஓம் என்பால் அருள்புரி என்றும் போற்றிஓம் தமிழுக்குரிய பண்ணே போற்றி