SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்அலங்கார ஆபரண மணிந்த மார்பும்திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யாமுருகா சரவணபவனே கார்த்திகேயாமுக்கணனார் புத்திரனே உக்ரவேலாஇருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலாஇதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே !மயிலேறி விளையாடும் சுப்ரமண்யாவடிவேலா உன்பாதம் நம்பினேனேஉயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளைஉன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய்தயவாக இனிமேலும் உயிரைக் காத்துசண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்வயிபோக மானமலைப் பழநிவேலாவரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !வருந்துமடியார் உயிரைக்காக்குந் தெய்வம்வையகத்தில் வேறொருவரில்லை யென்றுஅறிந்துநான் உனைப்பணிந்தேன் சுப்ரமண்யாஆதரித்துப் பிராணபயம் தீருமையாதிரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்சிறையிலிருந்து தøளீப்பூண்டு சின்னமாளேன்பறந்துவரு மயிலேறும் பழநிவேலாபண்பாக உயிர்காத்து ரட்சிப்பாயே !பெருவேங்கைப் புலிபுடித்த பசுவைப்போலபிதுர்கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமேஇருவருமே உனைக்கூவச் செவிகேளாதோஇதுசமயந் தாமதா யிருக்கலாமோகுருவாகித் தந்தையாய் நீயேயாகில்குமரேசா பிராணபயந் தீருமையாமுருகேசா இதுசமயம் பழநிவேலாமுன்வந்து உயிர்காத்து ரட்சிப்பாயே !பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை.போலபதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்தேம்பியே புலம்புகிறோம் துயரமாகித்தென்னவனே உன்செவிக்குக் கேளாதோதான்நான்புவியல் உன்னைநம்பி மகிழ்ந்திருந்தேன்நாயேனுக்கு அபாயம்வர நியாயமோதான்சாம்பசிவன் புத்திரனே பழநிவேலாசமயமிது உயிர்காத்து ரட்சிப்பாயே !வலைப்பட்ட உயிரதுபோல் மயங்குகின்றோம்வடிவேலா இதுசமயம் துயரந்தீர்ப்பாய்கொலைகளவு பாதகங்கள் பொய்களெல்லாம்கொடும்பழிகள் வஞ்சனைகள் பில்லிசூன்யம்தொலையாத சிறுபிணிவல் வினைகளெல்லாம்துரத்துமையா மயிலேறும் சுப்ரமண்யாமலையிலுறை வாசனே பழநிவேலாவரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே ! நாகமது கெருடனைக் கண்டலைந்தாற் போலநான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனேதாகமது தீருமையா தவிக்கும் வேளைசண்முகனே இதுசமயம் அடியேனுக்குமேகமது பயிர்க்குதவி செய்தாற்போலேவேலவனே வரவேணும் பழநிவேலாவினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே !பூனைகையில் சிக்கியதோர் கிளியைப்போலப்புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகிநானடிமை உமைநம்பி யிருக்கும் வேளைநாயகனே பாராமுகமாய் இருக்கலாமோமானீன்ற வள்ளியம்மை தெய்வானைமணவாளா சரவணனே கருணைசெய்வாய்கானமயில் வாகனனே பழநிவேலாகடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே !தூண்டிலகப்பட்ட மீன்போல் துடிக்கிறேனேசுப்ரமண்யா இதுசமயம் அடியேனுக்குவேண்டுவரம் கொடுப்பதற்கு உன்னையன்றிவேறொருவ ரில்லையென்று நம்பினேனேமீண்டுவரும் வினையகற்றித் துயரந் தீர்ப்பாய்வேலவனே சூர சங்காரவேலாஆண்டவனே உனைப்பணிந்தேன் பழநிவேலாஅடியார்கள் உயிர்காத்து ரட்சிப்பாயே !நஞ்சுபட்டு விஷமேறி மயங்குமாப்போல்நடுநடுங்கிக் கிடுகிடுடென்று பயந்துநாங்கள்தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் திருத்தணிகை வாசாசற்குருவே பிராணபயந் தீருமையாபஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையைவாங்கிப்பாடமெல்லாம் பரிகரித்துப் பதமேதந்தாய் !வஞ்சனைகள் செய்யாமல் பழநிவேலாவரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !அத்திமுகனே முக்கணனுக்கு இளையவேலாஅறுமுகனே தணிகையிலே அமர்ந்தவாசாவித்தகத்திற் பேசாத மூடனேனும்வேலவனே நின்னருளால் கவியைப்போலேபத்துமே பதிகமாய்ப் பாடிச்சொன்னேன்என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தேயாள்வாய்சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யாசண்முகனே அடியாரை ரட்சிப்பாயே.