SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் ஓங்கார சூக்கும உடலாய் போற்றிஓம் ஓரா ழித்தேர் ஊர்ந்தாய் போற்றிஓம் ஏழென் குதிரை ஏவினை போற்றிஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றிஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றிஓம் பொற்பட் டுடையில் பொழிவாய் போற்றிஓம் வியாவி ருதிஏழ் விளங்குவாய் போற்றிஓம் பன்னிரு முனிதுதிப் பாஸ்கரா போற்றிஓம் மழைபனி பருவம் மாற்றுவாய் போற்றிஓம் மூலாக் கினியில் முகிழ்த்தாய் போற்றிஓம் வீதிமூன் றிராசிபன் னிரண்டாய் போற்றிஓம் சூரியா வீரியா சுகமருள் வாய் போற்றிஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றிஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றிஓம் சவுக்க வடிவில் இருந்தாய் போற்றிஓம் முத்துவி மான வாகனா போற்றிஓம் சக்கரம் மூன்றுடைத் தேராய் போற்றிஓம் குருந்த மலர்நிறக் குதிரையாய் போற்றிஓம் கலைவளர் மதியே கருணையே போற்றிஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றிஓம் சக்தியை நடுங்கொள் மண்டலா போற்றிஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றிஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றிஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றிஓம் பூதேவி குமரா பௌமா போற்றிஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றிஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றிஓம் முக்கோ ணவடிவ இருக்கையாய் போற்றிஓம் எண்பரித் தேர்மிசை இயல்வாய் போற்றிஓம் தவத்தால் உயர்பாதம் அடைந்தாய் போற்றிஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றிஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றிஓம் மங்களம் தரூஉம் மங்கலா போற்றிஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றிஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றிஓம் அங்கா ரகனே அருள்வாய் போற்றிஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றிஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றிஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றிஓம் வெண்காந் தள்மலர் விரும்பினாய் போற்றிஓம் குதிரை வாகனங் கொண்டோய் போற்றிஓம் நால்பரித் தேர்மிசை அமர்ந்தாய் போற்றிஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றிஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றிஓம் இளையை மணந்த எழிலே போற்றிஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றிஓம் இருக்கு வேதத் திருந்தாய் போற்றிஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றிஓம் வானவர் குருவே வியாழ போற்றிஓம் பொன்னிற மேனிப் புத்தேள் போற்றிஓம் நீண்ட சவுக்கம் நின்றாய் போற்றிஓம் களிற்று வாகன முடையாய் போற்றிஓம் பொற்பரித்தேரில் பொலிந்தாய் போற்றிஓம் சர்ப்ப யாகம் தவிர்த்தாய் போற்றிஓம் இந்திரன் ஆள இயம்பினாய் போற்றிஓம் வச்சிரப் படைவலி தடுத்தாய் போற்றிஓம் அசுரரை சபிக்கச் சூழ்ந்தாய் போற்றிஓம் சேர்ந்தார்க் கின்பம் சேர்ப்பாய் போற்றிஓம் கிரக தோஷம் களைவாய் போற்றிஓம் கோடிநன் மைதரு குருவே போற்றிஓம் பிருகுபுத் திரனே சுக்கிரா போற்றிஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றிஓம் ஐங்கோ ணாசனம் அமர்ந்தாய் போற்றிஓம் வெண்டா மரைமலர் கொண்டோய் போற்றிஓம் கருவடா கனத்தில் ஒளிர்வாய் போற்றிஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றிஓம் சிவனால் ஒளிநிறம் பெற்றோய் போற்றிஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றிஓம் தண்டன் நாடுகா டாக்கினாய் போற்றிஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றிஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றிஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றிஓம் சூரிய பாலா சுபமருள் போற்றிஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றிஓம் வில்வடி வாசனம் விளங்கினாய் போற்றிஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றிஓம் கருங்கு வளைமல ருகந்தாய் போற்றிஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றிஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றிஓம் நளனைச் சோதித் தாண்டாய் போற்றிஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றிஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றிஓம் கலியென் றொருபெய ருடையாய் போற்றிஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றிஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றிஓம் கொடிவடி வமர்ந்த கோளே போற்றிஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றிஓம் தென்மேற் றிசையில் திகழ்வாய் போற்றிஓம் மந்தா ரைமலர் மகிழ்ந்தாய் போற்றிஓம் உளுந்தும் அருகும் உகந்தாய் போற்றிஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றிஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றிஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றிஓம் ஓருடல் இருகோ ளானாய் போற்றிஓம் தவமேம் பட்ட தலையே போற்றிஓம் இராஜபோ கம்தரு இராகுவே போற்றிஓம் இராகுவி னுடலே கேதுவே போற்றிஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றிஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றிஓம் முச்சில் வடிவில் முகிழ்ந்தாய் போற்றிஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றிஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றிஓம் அரிவா கனத்தில் அமர்ந்தாய் போற்றிஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றிஓம் வடமேற் றிசையில் நின்றாய் போற்றிஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றிஓம் தவத்தால் கோள்நிலை பெற்றாய் போற்றிஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி