SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றிஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றிஓம் அகரம் முதலென ஆனாய் போற்றிஓம் அகர உகர ஆதி போற்றிஓம் மகாரமாய் நின்ற வானவ போற்றிஓம் பகர் முன்னவனாம் பரனே போற்றிஓம் மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றிஓம் கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றிஓம் நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றிஓம் கார்குளிராகக் கனிந்தாய் போற்றிஓம் பகலன் நிலவாய்ப் பரந்தாய் போற்றிஓம் நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றிஓம் மழைபொழி இமய வல்லிசேய் போற்றிஓம் தழைசெவி எண்தோள் தலைவ போற்றிஓம் திங்கட் சடையோன் செல்வ போற்றிஓம் எங்கட் கருளும் இறைவா போற்றிஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றிஓம் சிறுகண் களிற்றுத் திருமுருக போற்றிஓம் செம்போன் மேனிச் செம்மால் போற்றிஓம் உம்பர் போற்றும் உம்பல் போற்றிஓம் பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றிஓம் எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றிஓம் அப்பமும் அவலும் கப்புவாய் போற்றிஓம் முப்புரி நூல் மார்பு அப்பா போற்றிஓம் எள்ளுருண்டை பொரி ஏற்பாய் போற்றிஓம் தெள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றிஓம் மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றிஓம் தேவர்க் கரிய தேவா போற்றிஓம் மாலுக் கரிய மதகரி போற்றிஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றிஓம் பாரதம் எழுதிய பண்பே போற்றிஓம் மாரதம் அச்சோடி மதவலி போற்றிஓம் மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றிஓம் ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றிஓம் கரும்பாயிரங்கொள் கள்வா போற்றிஓம் அரும் போருளேயெம் ஐயா! போற்றிஓம் திணைபால் கடந்த தேவே போற்றிஓம் புணையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றிஓம் பேழை வயிற்றுப் பெம்மான் போற்றிஓம் ஏழைக் கிரங்கும் எம்மிறை போற்றிஓம் அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றிஓம் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றிஓம் திருநீற் றொளிசேர் செம்மால் போற்றிஓம் இரு வேறுருவ ஈசா போற்றிஓம் உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றிஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றிஓம் நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றிஓம் எம்பிரானாக இசைந்தாய் போற்றிஓம் உருகு வோருள்ளத் தொளியே போற்றிஓம் பெருகருள் சுரக்கும் பெருமான் போற்றிஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றிஓம் உம்பர் கட்கரசே ஒருவ போற்றிஓம் பிள்ளையார் பெயர் கொண்டுள்ளாய் போற்றிஓம் வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றிஓம் மூவாச் சாவா முத்தா போற்றிஓம் ஆவா எங்களுக் கருள்வாய் போற்றிஓம் தமிழ்ச்சுவை சார்திருச் செவியாய் போற்றிஓம் அமிழ்தாய் எம்மகத் தானாய் போற்றிஓம் மழவிளங் களிறே மணியே போற்றிஓம் குழவியாய்ச் சிவன்மடி குலவுவோய் போற்றிஓம் பெருச் சாளியூரும் பிரானே போற்றிஓம் நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றிஓம் செந்தாமரைத்தாள் தேவா போற்றிஓம் நந்தா மணியே நாயக போற்றிஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றிஓம் கரிமுகத் தெந்தாய் காப்பாய் போற்றிஓம் ஆங்காரம் முளை அறுப்பாய் போற்றிஓம் பாங்கார் இன்பப் பராபர போற்றிஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றிஓம் மற்றவர் காணா மலையே போற்றிஓம் சொல்லோடு பொருளின் தொடர்பே போற்றிஓம் கல்லும் கரைக்க வல்லோய் போற்றிஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றிஓம் முந்திய பொருட்கு முந்தியோய் போற்றிஓம் ஐந்து கையுடைய ஐய போற்றிஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றிஓம் அருள்வாய் அருள்வாய் ஆண்டவ போற்றிஓம் தருவாய் மணமலர்த் தாராய் போற்றிஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றிஓம் மயலறும் இன்ப வாழ்வே போற்றிஓம் ஆணையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றிஓம் பானை வயிற்றுப் பரமே போற்றிஓம் கடம்பொழி யானைக் கன்றே போற்றிஓம் மடம்ஒழி அறிவின் அமுதே போற்றிஓம் பாலொடு தேனும் பருகுவாய் போற்றிஓம் மேலொடு கீழாய் மிளிர்வோய் போற்றிஓம் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றிஓம் மெய்ப் பொருள்வேழ முகத்தாய் போற்றிஓம் நல்லார்க் கெட்டும் நாதா போற்றிஓம் பொல்லா மணியே புராதன போற்றிஓம் அறிவின் வரம்பை அகன்றாய் போற்றிஓம் குறிகுணங் கடந்த குன்றே போற்றிஓம் எட்டுவான் குணத் தெந்தாய் போற்றிஓம் கட்டறு களிற்று முகத்தோய் போற்றிஓம் மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றிஓம் அலர்கதிர் ஒளியின் அமர்வோய் போற்றிஓங்காரம் முகத் தொருத்தல் போற்றிஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றிஎண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றிபண்ணும் பயனுமாய்ப் பரந்தாய் போற்றிஓம் அருவே உருவே அருவுரு போற்றிஓம் பொருளே பொருளின் புணர்ப்பே போற்றிஓம் புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றிஓம் அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றிஓம் செல்வம் அருள்க தேவா போற்றிஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றிஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றிஓம் காக்க எங்கையுன் கழலினை போற்றி