SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அலைமகள் போற்றிஓம் திருமா மகளே செல்வி போற்றிஓம் திருமால் உளத்தில் திகழ்வாய் போற்றிஓம் திருப்பாற் கடல்வரு தேவே போற்றிஓம் இருநில மக்கள் இறைவீ போற்றிஓம் அருளே உருவாய் அமைந்தாய் போற்றிஓம் மருநிறை மலரில் வாழ்வாய் போற்றிஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றிஓம் இருளொழித் தின்பம் ஈவோய் போற்றிஓம் அருள்பொழிந் தெம்மை ஆள்வாய் போற்றிஓம் ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றிஓம் சீறுதல் கொள்ளாத் திருவே போற்றிஓம் ஊக்கம தளிக்கும் உருவே போற்றிஓம் ஆக்கமும் ஈயும் அன்னாய் போற்றிஓம் இறைவி வலப்பால் இருப்போய் போற்றிஓம் பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றிஓம் அன்பினைக் காட்டும் ஆயே போற்றிஓம் வன்பினை என்றும் வழங்காய் போற்றிஓம் பனிமதி உடன் வருவாய் போற்றிஓம் கனியிலும் இனிய கமலை போற்றிஓம் நிமலனை என்றும் நீங்காய் போற்றிஓம் கமலம் துதித்த கன்னி போற்றிஓம் குற்றம் ஓராக் குன்றே போற்றிஓம் செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றிஓம் அன்னை யென்ன அணைப்போய் போற்றிஓம் தன்னிகர் தாளைத் தருவோய் போற்றிஓம் மாயனாம் மலர்க்கு மணமே போற்றிஓம் நேயமுற் றவனை நீங்காய் போற்றிஓம் இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றிஓம் மறைமொழி வழங்கும் மாண்யே போற்றிஓம் மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றிஓம் சீலஞ் செறிந்த சீதா போற்றிஓம் அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றிஓம் இன்பம் அருளும் எந்தாய் போற்றிஓம் அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றிஓம் எச்சுவை தனையும் ஈவோய் போற்றிஓம் பூதலத் தன்று போந்தாய் போற்றிஓம் தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றிஓம் இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றிஓம் நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றிஓம் திரிசடை நட்பைத் தேர்ந்தோய் போற்றிஓம் பரிவுடையவர்பால் பரிவினாய் போற்றிஓம் குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றிஓம் வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றிஓம் அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றிஓம் இரக்கமாய் ஒன்றிற் கிருப்பிடம் போற்றிஓம் இராவணற் கிதமே இசைத்தோய் போற்றிஓம் இராமருக் குரிய இன்பே போற்றிஓம் கணவனை அடைந்து களித்தோய் போற்றிஓம் குணநிதி யாகக் குலவினாய் போற்றிஓம் அரசியாய் அயோத்திக் கானாய் போற்றிஓம் முரசொலி அந்நகர் முதல்வி போற்றிஓம் உருக்கு மணியாய் உதித்தோய் போற்றிஓம் செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றிஓம் சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றிஓம் பசுநிரை மேய்ப்போன் பாரியே போற்றிஓம் பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றிஓம் எத்திக் குந்துதி எந்தாய் போற்றிஓம் மாலின் சினத்தை மறைப்போய் போற்றிஓம் மேலருள் புரிய விளம்புவோய் போற்றிஓம் மாதவ னோடு வாழ்வோய் போற்றிஓம் ஆதவன் ஒளிபோன் றமைந்தோய் போற்றிஓம் சேதனர் பொருட்டுச் சேர்வோய் போற்றிஓம் பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றிஓம் நாதனுக் கருஞ்சொல் நவில்வோய் போற்றிஓம் ஏதமில் பொன்னென இலங்குவோய் போற்றிஓம் தக்கென ஓதும் தாயே போற்றிஓம் மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றிஓம் பக்கலின் இருக்கும் பணி மொழி போற்றிஓம் துக்கம் ஒழியச் சொல்வோய் போற்றிஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றிஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றிஓம் பங்கயத் துறையும் பாவாய் போற்றிஓம் செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றிஓம் தண்ணருள் கொண்டுயிர் காப்போய் போற்றிஓம் எண்ணறு நலந்தரும் எம்மன்னை போற்றிஓம் நான்கிரு நாமம் நயந்தோய் போற்றிஓம் வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றிஓம் வெற்றியைத் தருமோர் விமலை போற்றிஓம் அற்றவர் அடையும் அரும்பொருள் போற்றிஓம் வரமளித் தூக்கும் வாழ்வே போற்றிஓம் உரமதை ஊட்டும் உறவே போற்றிஓம் செல்வமிக் காக்கும் தேவி போற்றிஓம் அல்லலை ஒழிக்கும் அருளே போற்றிஓம் வீரம் விளைக்கும் வித்தே போற்றிஓம் காரண பூதன் கருத்தே போற்றிஓம் பண்பினை வளர்க்கும் பயனே போற்றிஓம் நண்பாய் அறிஞர்பால் நண்ணுவோய் போற்றிஓம் எண்ணினுள் எண்ணே இசையே போற்றிஓம் கண்ணினுள் மணியே கருத்தே போற்றிஓம் அறிவினுள் அறிவாம் அன்னே போற்றிஓம் நெறியினுள் நெறியாம் நிலையே போற்றிஓம் உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றிஓம் குணத்தினுள் குணமாம் குன்றே போற்றிஓம் கருத்தினுள் கருத்தாய்க் கலந்தோய் போற்றிஓம் அருத்தியை ஆக்கும் அறிவே போற்றிஓம் தமிழினுக் கினிமை தருவோய் போற்றிஓம் அமிழ்தினும் இனிய ஆயே போற்றிஓம் பதின்மர் பாடலில் புதிவோய் போற்றிஓம் துதியாய் நூலினுள் துதைந்தோய் போற்றிஓம் தொண்டரின் தொண்டுளம் சேர்ப்போய் போற்றிஓம் அண்டர் போற்றும் அமலை போற்றிஓம் நாரணர்க் கினிய நல்லோய் போற்றிஓம் மாரனைப் பெற்ற மாதே போற்றிஓம் உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றிஓம் நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றிஓம் எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றிஓம் மங்கலத் திருநின் மலரடி போற்றி