SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஸாம்பஸதாஸிவ ஸாம்ப ஸதாஸிவஸாம்ப ஸதாஸிவ ஸாம்ப ஸ்ரீவா ஹரா - ஸாம்பஅத்புத விக்ரக அமராதீஸ்வரஅகணித குணகண அமிருதஸிவா ஹரா - ஸாம்பஉமையொருபாகனே ! ஸதாசிவனே! மாதொருயாதியனே! மங்கலரூபனே!மனங்கவர் உருவனே! தேவர்கள் தலைவனே! எண்ணத்துக் கடங்காதபரந்து நின்ற நற்குணத் தொகுப்பே! பிறவாப் பெருமையனே!மங்கல உருவனே ! - (சரணம்)2. ஆநந்த அம்ருத ! ஆஸ்ரித ரட்சக!ஆத்மாநந்த ! மஹேச ஸிவா ஹர ! (ஸாம்ப)ஆநந்த அமுதே ! அடியாரைக் காப்பவனே !ஆன்மாவின் உன் ஊறும் மகிழ்வே! பெருந்தேவனே ! சிவா ! ஹரா !3. இந்து கலாதர ! இந்த்ராதிப்ரிய !சுந்தரரூப ! சுரேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)பிறைசூடியே ! இந்திரன்முதலாம் தேவர்களின் நற்பயனே !அடிகனே ! தேவர்தலைவனே ! சிவா ! ஹர !4. ஈச ! ஸுரேச ! மஹேச! ஜநப்ரிய !கேசவஸேவித ! கீர்த்தி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)தலைவனே ! இமையோர் தெய்வமே! பெரியானே! <உலகின் உயிரே !மால்வணங்கும் தேவனே ! புகழின் தலைவா ! அரசனே !5. உரக அதிப்ரிய பூஷண ! ஸங்கர !நரக விநாஸ ! நடேச ஸிவா ! ஹர! (ஸாம்ப)அரவணியானே ! மங்கலந் தருபவனே !நரக வாழ்விலிருந்து கரைஏற்றுபவனே ! மங்கல நடம்புரிவோனே ! அரனே !6. ஊர்ஜித தாநவ நாஸ ! பராத்பர !ஆர்ஜித பாவ விநாச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)அரக்கரை வீழ்த்தும் சிவனே ! மேலோர்க்கும் மேலானவனே !(எம்) வினைத் தொகுதிகளின் தாக்கத்தை அழிப்பவனே !7. ருக் வேத ஸ்ருதி மௌலி விபூஷணஅர்க்க சந்தர அக்நி த்ரிநேத்ர ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ருக் வேத கீதங்களின் முடிவில் ஒளிர்பவனே !ஞாயிறு திங்கள் தீயாம் முச்சுடர் ஒளிர்முக்கண்ணா ! சிவனே ! அரனே !8. ரூப நாமாதிப்ரபஞ்ச விலக்ஷண !தாப நிவாரண ! தத்வ ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஓருருவும் ஒரு பெயரும் கொள் உலகின் வேறானவனே !தாபந் தீர்ப்பவனே ! அனைத்தினும் வாழ்சிவனே ! அரனே !9. (இ) லிங்கஸ்வரூப ! ஸபேஸ ! புதப்ரிய !மங்கலமூர்த்தி ! மஹேச ! ஸிவா ! ஹர (ஸாம்ப)சோதிஉருவனே ! நடராசனே ! அறிஞர்களின் தலைவனே !மங்கல உருவே ! பெரியோனே ! சிவனே ! அரனே !10. ஏக ! அநேக ! சர்வேச ! ஜனப்ரிய !போகாதிப்ரிய ! பூரண ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஒன்றே ! பலவானவனே ! சர்வேசனே ! உலகினர் தலைவ !வினைப்பயன் நுகர்விக்கும் தலைவ ! முழுமங்கல நிறைவே ! அரனே !11. ளூதாதீஸ்வர ! ரூப ப்ரியஸிவ !வேதாந்தப்ரிய வேத்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ளுகார முதலே ! அழகிய உருவனே ! மங்கலமே !வேதமுடிவில் நிலைகொள் நாயகனே ! சிவமே ! அரனே !12. ஐஸ்வர்யார்ச்சித ! சின்மய ! சித்கன !சச்சிதாநந்த ! மஹேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)செல்வங்கள் வணங்கும் தலைவனே ! அறிவுருவனே ! அறிவின்செறிவே !சச்சிதாநந்தனே ! பெரியானே ! சிவமாம் அரனே !13. ஓங்காராதிப ! உரகவிபூஷண !ஹ்ரீங்காரப்ரிய ! ஈச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஓங்காரமுதலே ! பாம்பணிபூண்டோனே !ஹ்ரீம் எனும் ஒலியின்வித்தே ! ஈசனே ! சிவனே ! அரனே !14. ஒளரஸ நாளித ! அந்தகநாஸ !கௌரீஸஹித ! கிரீஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)வீரத்தின் முதலே ! கால நாசனே !கௌரியுடனுறை கிரீசனே ! சிவனே ! அரனே !15. அம்பர வாஸ ! சிதம்பர நாயக !தும்புரு நாரத ஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)வானில் துலங்கும் நாயகனே ! அறிவின் உருவே !தும்புருநாரதர் இசையால் போற்றிட அருள்சிவனே ! அரனே !16. ஆ ! ஹரகாரப்ரிய ! அட்டதிக் ஈஸ்வர !யோகிஹ்ருதய ப்ரியவாஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஆ! ஹர எனும் ஒலியின் தலைவனே ! எண்திசை நாயக !யோகிகளின் இருதயவாஸனே ! சிவனே ! அரனே !17. கமலாஸநவர ! கைலாஸாதிப !கருணா ஸாகர ! காந்த ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஆறாதார கமலங்களில் நிற்பவனே ! கயிலை நாயகனே !கருணைக் கடலே ! ஒளிரும் சிவனே ! அரனே !18. கட்க ம்ருக சூல டங்க தஙர்த்தர !விக்ரம ரூப ! விசேஷ ஸிவா ! ஹர ! (ஸாம்ப)குறுவான்; மான்; சூலம்; மழு; வில்; ஏந்தியவனே!வீரத்தின் உ<ருவே ! பல்வேறு உருவங்கொள் சிவமே ! அரனே !19. கங்கா கிரிஜா வல்லப ! குணஹித !சங்கர ! ஸர்வறஜநேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)கங்கா நாயகனே ! பார்வதி தலைவா ! நற்குண உருவே !நலம் விளைப்போனே ! அனைத் துயிர்க்கிறையே ! சிவனே ! அரனே !20.காதுக பஞ்சந ! பாதக நாசன !போதஸ்வரூப ! பூர்ணஸிவா ! ஹர ! (ஸாம்ப)கொடியரை அழிப்பாய் ! பாவத்தைத் துடைப்பாய் !தெளிந்த அறிவின் உ<ருவே ! நிறைமங்கலனே ! அரனே !21. ஙா ந்சுஸ்வரூப ! நந்தவநாஸ்ரய !வேத வேதாந்தஸ்வரூப ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஙா கரஒலியின் உருவே ! மலர்த்தோட்டங்களை விரும்பி அடைபவனே !அறிவுநூலாம் வேதாந்த முடிவே ! சிவமே ! அரனே !22. சண்ட விநாசந ! ஸகலஜகப்ரிய !மண்டலாதீச ! மஹேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)கால காலனே ! அனைத்துலகின் தலைவனே !ஐம் மண்டலங்களின் தலைவனே ! மகேசனே ! சிவனே ! அரனே !23. சத்ர கிரீடஸுகண்டல அதிப்ரிய !புத்ரப்ரிய ! புவநேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)வெண்கொற்றக்குடை; கிரீடம்; நன்மணி ஆரம் இவற்றில் அன்பு கொண்டவனே !புத்ரப்ரியனே ! புவநேஸனே ! சிவனே ! அரனே !24. ஜன்ம ஜரா மரணாதி விநாஸந !கல்மஷ விரஹித காஸி ஸிவாஹர !பிறப்பு; தளர்வு; இறப்பு முதலியனவற்றை அழிப்பவனே !குழப்பமின்றிய ஒளிவாழ்வின் சிவமே ! அரனே !25. ஜ்ஜங்கார ஆச்ரித ! ப்ருங்கி ரிஷீஸ்வர !ஓங்காரேஸ ! விஸ்வேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஜ்ஜங்கார ஒலி உருவே ! பிருங்கி முதலிய முனிவர்தலைவனே !ஓங்கார முதல்வனே ! உலகின் தலைவனே ! சிவனே ! அரனே !26. (க்) ஞான அக்ஞாந விநாஸந ! நிர்மலதீநஜநப்ரிய ! தீப்தி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)ஞான அஞ்ஞானங்களைத் துடைப்பவனே ! நிர்மலனே !ஏழையர் <உலகினை விரும்புபவனே ! ஒளிஉருவே ! அரனே !27. டங் கர்யாவ்ருத ! தாரணஸத்வர !கிங்கரஸேவ்ய ! கிரீடி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)டங் கார ஒலியின் உள்ளுறையே ! உலகந்தாங்கும் <உத்தமனே !பூதகணங்களின் ஸேவையை ஏற்பவனே ! கிரீட மணிந்தசிவனே ! அரனே !28. டங்கஸ்வரூப ! ஸஹஸ்ரகரோத்தம !வாகீஸ்வரவர ! தேவஸிவா ! ஹர ! (ஸாம்ப)மழுவேந்தீ ! ஆயிரங்கரமுடையோனே !நல்வாக்கின் மன்னவனே ! ஒளியாம்சிவமே ! அரனே !29. டம்பவிநாஸன ! தாடிம பூஷண !அம்பரவாஸ ! கிலேஸ ஸிவாஹர ! (ஸாம்ப)தற்பெருமையை அழிப்பவனே ! மாதுளை நிறத்தோனே !ஆகாயத் தத்துவத்தலைவனே ! வருத்த மொழிக்கும் சிவமே !30. டண்டண் டமருக டாரிம ! நிஸ்சல !(உ) டுண் டிவிநாயகஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)டண்டண் எனும் ஒலியால் உலகைப் படைப்பவனே ! நிலைதிரியாய் பெருமையனே !குண்டி விநாயகன் ஸேவையை ஏற்பவனே ! சிவனே ! அரனே !31. நளிந விலோசன ! நடன மநோஹர !அளிகுண பூஷண ! அம்ருதஸிவா ! ஹர (ஸாம்ப)தாமரைக் கண்ணனே ! ஆடல்வல்லோனே ! மனங்கவர்வோனே !வண்டுகுலாமலர் அணிகொண்டோனே ! பிறவா இறவாச்சிவனே ! அரனே !32. தத்வமஸ்யாதி வாக்யார்த்தஸ்வரூப !நித்யஸ்வரூப ! நிஜேஸ ! ஸிவ ! ஹர ! (ஸாம்ப)தத்துவமசி முதலான வாக்கியங்களின் உருவே !அழியாப்பொருளே ! உண்மையின் தலைவனே ! சிவமே ! அரனே !33. ஸ்தாவர ஜங்கம புவன விலக்ஷண !வ்யாக்ரவரமுனி ஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)அசையும்பொருளும் அசையாப்பொருள்களும் கூடியஉலகின் தலைவனே !புலிக்கால் முனி தொழும் பெற்றியனே ! அரனே !34. தந்திவிநாஸந ! நளின மநோஹர !சந்தநலேபந ஸரண ஸிவா ! ஹர ! (ஸாம்ப)யானை உரித்தோனே ! நளிநமான மநோஹரனே !சந்தநம் பூசிய உடலோனே ! சரணம் அடைந்தாரைக் காப்பவனே ! அரனே !35. தரணீதர தர ! தவள விபாஸித !தநாதிபஸக ! வரத ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)<உலகு தாங்கும் சேடனின் உள்ளுறைவோனே ! பொடியணிமேனியனே !குபேரனைத் தோழமை கொண்டோனே ! வேண்டும்ராமருள்வோனே சிவனே ! அரனே !36. நாநாமணி கண பூஷண ! நிர்க்குண !நத ஜந போஷண ! நாத ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)பலவகை மணிகளால் தொடுத்த மாலைகள் பூண்டவனே ! குணமற்றவனே !வணங்கியோரைக் காப்பவனே ! தலைவனே ! சிவனே ! அரனே !37. பார்வதி நாயக ! பந்நக பூஷண !பரமானந்த ! பரேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)பார்வதி நாயகனே ! அரவணி பூண்டநாதனே !பேரானந்தக்கடலே ! மேலாம் பெரியோனே ! சிவனே ! அரனே !38. பால விலோசன ! பாநுகோடி ப்ரகாசக !ஹாலாஹலதர ! அம்ருதஸிவா ! ஹர ! (ஸாம்ப)நெற்றிக்கண்ணனே ! கோடிசூரியர்களின் ஒளி கொண்டவனே !ஆலகாலத்தை மணியெனக் கழுத்தில் பூண்டவனே ! இறவாப் பெருமையனே ! சிவனே ! அரனே !39. பந்த விமோசந ! த்ருத சர்மாம் பர !ஸ்கந்தாதிப்ரிய ! கநக ஸிவா ! அர ! (ஸாம்ப)மாயாபாசங்களிலிருந்து விடுவிப்பவனே ! தோ<லுடை கொண்டவனே !கந்தனைத் தந்தவனே ! பொன்னார் மேனிச்சிவமே ! அரனே !40. பஸ்மவிலேப ! பவபயபஞ்சன !விஸ்மயரூப ! விசேஷ ஸிவா ! அர ! (ஸாம்ப)முழுநீறு பூசிய முனிவனே ! பிறவிப் பிணிஅச்சம் நீக்குபவனே !மலர் முகத்தோனே ! பல்வகை உருவங்கொள் சிவனே ! அரனே!41. மந்மத நாஸந ! மதுரா நாயக !சர்மவிபூஷண ஸாட்சி ஸிவா ! அர ! (ஸாம்ப)காமனைக் காய்ந்தவனே ! மதுராபுரி மன்னனே !தோலாடை கொண்டோனே ! (மனச்) சான்றாம் சிவமே ! அரனே !42. யதிஜந ஹ்ருதய நிவாஸித ! ஈஸ்வர !விதி விஷ்ணுவாதி ஸுஸேவ்ய சிவா ! அர ! (ஸாம்ப)துறவியர்கணங்களின் இதயவாசியே ! ஈஸ்வரனே !திருமால் உள்ளிட்ட தேவர்களால் விதிப்படி பூசிக்கப்படுபவனே ! அரனே !43. ராமேஸ்வர ! ரமணீய முகாம்புஜ !ஸோமேஸ்வர ! ஸுஹ்ருதேச சிவா ! அர ! (ஸாம்ப)ராமனின் தலைவனே ! அடியார் மனங்கவர் தாமரைமுகனே !ஸோமேசனே ! நண்பர் மனத்தை ஆள்பவனே ! அரனே !44. லங்காதீஸ்வர ஸேவித ! சுககர !லாவண்யாம்ருத ! லலித சிவா ! ஹர ! (ஸாம்ப)இலங்கேசனால் வழிபடப்பட்டவனே ! நலம் தருபவனே !அழகின் பெருக்கே ! மென்மைச்சிவமே ! அரனே !45. வநஜாநந ! வர ! வாஸுகி பூஷண !வநமாலாதி விபூஷ சிவா ! ஹர ! (ஸாம்ப)தாமரை முகத்தனே ! கரும்பாம்பாம் வாசுகியை அணிந்தவனே !துளபமாலை அணிந்தவனே ! சிவமே ! அரனே !46. ஸாந்த ஸ்வரூப ! அதிப்ரிய ! சுந்தர !காந்தீமதி ப்ரிய ! காசி சிவா ! ஹர ! (ஸாம்ப)சாந்தத்தின் <உருவே ! ஆன்மாக்களின் உறுதுணையே ! ஆணழகனே !ஒளி உருவாளின் நாயகனே ! ஒளியாம் சிவனே ! அரனே !47. ஷண்முக ஜனக ! ஸுரேந்த்ர முனிப்ரிய !ஷாட்குண்யாதி ஸமேத சிவா ! அர ! (ஸாம்ப)ஷண்முகன் தாதையே ! தேவர்கள் - இந்திரன் - முனிவர்களின் தலைவனே !அறுகுணமே உருவாகிய மூர்த்தியே ! சிவமே ! அரனே !48. ஸம்ஸாரார் ணவநாஸக ! ஸாஸ்வத !ஸாதுஹ்ருதி ப்ரியவாஸ ! ஸிவா ! அர ! (ஸாம்ப)பிறவிக்கடலை அழிப்பவனே ! என்றும் நிலையானவனே !நல்லோர் இதயத்து மகிழ்ந்துறைவோனே ! சிவனே ! அரனே !49. ஹர ! புரு÷ஷாத்தம ! ஆநந்தாம்ருத !முரரிபு ஸேவித ! நடேஸ ஸிவா ! ஹர ! (ஸாம்ப)அரனே ! புரு÷ஷாத்தமனே ! ஆநந்த அமுதே !முரனைக் கொன்ற மாலின் தலைவனே ! ஆடல்தலைவனே ! சிவனே ! அரனே !50. லளிதாநந்தித ! நிஜத்ரிவிஸ்வேஸ்வர !காளீநடப்ரிய ! காஸிஸிவா ! ஹர ! (ஸாம்ப)லளிதாதேவியின் நாதனே ! மூவுலகின் முதல்வனே !காளியோடு தாண்டவமிடுவதில் மகிழ்வோனே ! ஒளியாம்சிவமே! அரசனே !51. அக்ஷரரூப ! அதிப்ரியஸுந்தர !ஸக்ஷிஜகத்ரயஸ்வாமி ! ஸிவா ! ஹர !சங்கரநாரயண ! தீர்த்தப்பிரிய !ஸிவ கங்காதீர ஸுவாஸ ! ஸிவா ! ஹர !ஸாம்ப ஸதாஸிவ ஸாம்ப ஸதாஸிவஸாம்ப ஸதாஸிவ ஸாம்பஸிவா ! ஹர !ஒலியின் அழியா உருவோனே ! மனங்கவர் அழகுருவனே !மூவுலகின் கண்கண்ட தேவே ! சிவனே ! அரனே!மாலொரு பாதியனே ! தீர்த்தங்களில் மகிழ்ந்துறைவோனே !கங்கைக்கரைத் தலங்களில் நிலை பெற்றவனே ! சிவமே ! அரனே !மாதொரு பாகனே ! சதாசிவனே ! ஸாம்பா ! சதாசிவனே !ஸாம்ப ஸதாசிவ ! ஸாம்பஸதாசிவ ! ஸாம்ப ஸதாசிவ ! போற்றி போற்றி !