SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மாவெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவேசெவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவேதாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தேபரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தேஅற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தேஅஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தேஹரியுடைய தேவி அழகீ நமஸ்தேஅடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தேவனமாலை என்னும் மருவே நமஸ்தேவைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தேஅன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்துமண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றிமுற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டுசெங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்துபழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்துபுஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்குஎன்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்கமங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்முழுக்ஷúக்கள் பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்துகொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டிகங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமேஅப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.