SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமலியும் வாழ்வருளி அன்பரைக் காப்பதேசித்தமாயுள்ள தெய்வம்திப்பிய மறைச் சிரத்தேறி விளையாடுமிருதிருவடிகள் உடைய தெய்வம்உறுமலியுமாற்றலால் நன்மக்கள் வாழ்வுபெறஊறுபுரி தீயமக்கள்ஒடுங்குவது வேண்டியே படைக்கலம் பலவேந்தும்ஒப்பற்ற சமரசக்திதருமலியும் வாழ்வுபெறு மிந்திரனும் வானவரும்சரண்புகுந்தேத்து தெய்வம்சாதுசனமென்றுமே தீது கண்டிடையாதசக்தி தருமிக்க தெய்வம்பருவமழை போலவே அருள்பொழியும் விழிகொண்டபரம கலியாண தெய்வம்பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்பரிவுடனெமக் கருள்கவே.ஓங்கார வுருவாகி யதனுளுறை பொருளாகிஉலகெலாம் ஆளும் இறைவிஉண்மையின் விளக்கத்தை மெய்யன்பர்உணரவேஉருவெடுத் தருளும் இறைவிஆங்காரமானுக்கும் அப்பால் நிலைத்துள்ளஅற்புதத் தெய்வம் நீயேஆதலால் உலகுயிர்கள் எல்லாம் பணிந்து நினதருள் வெள்ளம் ஆடுகின்றதீங்காய எண்ணமும் தீங்காய செய்கையும்தீங்காய மொழியுமேந்தித்திசையெல்லாம் தம்மைப் பழிக்கவே பிறர்மனம்தேம்பும் வணம் வாழும் மாக்கள்பாங்காக நல்லறிவை யெய்தவே படையேந்துபலகரம் கொண்ட பெரியாய்பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்பரிவுடனெமக் கருள்கவே.கராள வுருவய்கொண்ட காளியென நின்னன்பர்கனிவி னோடோதுகின்றார்கருணையிற் பெரியையென மகிமையிற் பெரியையெனக்காதலொடு மோதுகின்னார்சராசரமனைத்துக்கும் உள்ளிரு தருள்பொழிதல்சக்திநின் செயலாகுமேசாந்தவானந்தர் புரி மந்திரத் திருவேள்விதன்னிலே வந்து நின்றாய்பராபரை யெனச்சொல்க பரமபாவனையென்பபாடாத பாட்டினுள்ளாய்பக்குவ மனத்திடையில் நிற்பதற் குரிமையுளபழம்பெருந் தெய்வம் அலையோபராசரை சிதானந்த பகவதி பகவதி பரமேட்டிபார்த்தருள வேண்டுகின்றோம்பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்பரிவுடனெமக் கருள்கவே.பயன்அறங்கள் பல பல்லாண்டு பல்கிவரும் அரசாயஅரும்பெரும் புதுக்கோட்டையில்அறிவர் பெருமக்கள் பணிசதாசிவப்பிரம்மமெனும்ஆனந்தமூர்த்தி நிலையில்அறங்கள் வரைப்புகும் புவனேசி ஆகியவள்அகிலாண்ட நாயகி சிவைஅருளினால் ஆண்டுதோறும் நடைபெறும் வேள்விகளில்ஆண்டு பரிதாபியினிலேதிறங்களே வளர்வுபெற அருள் பத்திரகாளியின்திருவருள் இலக்ஷ ஹோமம்சிறப்புற நிகழ்த்துவது சித்தத்தில் ஏற்றகுருசேவை தெளி சாந்த முனிவர்புறங்களே அகமோடு பூரிப்பை எய்தவேபொலிவு பெற ஆற்றும் வேள்விபுவியெலாம் நன்மைபெற வாய்த்ததென வானவர்கள்புகழுவார் மகிழுவாரே.