SS பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி!
பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி!
பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி!

ஓம் பல்லாயிரம் கண்கள் கொண்டவளே போற்றி
ஓம் கருணை மழை பொழிய வருபவளே போற்றி
ஓம் சொல்லாயிரம் துதியால் மகிழ்பவளே போற்றி
ஓம் எல்லோருக்கும் ஏற்றம் தருபவளே போற்றி
ஓம் எப்போதும் உயர்வு பல அளிப்பாய் போற்றி
ஓம் அதர்வணக் காளி ஆனவளே போற்றி
ஓம் பரசிவானந்த வடிவுடையாள் போற்றி
ஓம் பக்தர்களின் உள்ளத்துள் வாழ்பவளே போற்றி
ஓம் நம்பினோர்க்கு என்றும் நல்லவளே போற்றி
ஓம் நாங்கள் தினம் வணங்கும் நாயகியே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் சரபேசன் இறக்கையாய் வந்தவளே போற்றி
ஓம் சீறிய சிங்கமும் ஏற்றவளே போற்றி
ஓம் நரசிம்மர் உக்கிரம் தணித்தவளே போற்றி
ஓம் சன்னிதியால் சஞ்சலங்கள் தீர்ப்பவளே போற்றி
ஓம் சர்வானந்தமயி சக்தியே போற்றி
ஓம் உவகையின் உச்சித் திலகமே போற்றி
ஓம் களிப்புடன் நடமிடும் காளியே போற்றி
ஓம் பைரவர் மனம்நிறை நாயகி போற்றி
ஓம் நான் செய்த பாவம் மன்னிப்பாய் போற்றி
ஓம் இனி பாவம் நான் செய்ய இடங்கொடாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் மதிநுதல் சூடிடும் திருமணி போற்றி
ஓம் விரிசடையாளே விளக்கே போற்றி
ஓம் துணை காத்யாயனி கொண்டாள் போற்றி
ஓம் சாமுண்டா முண்டமர்தினி போற்றி
ஓம் துதிப்பவர் துயர்தவிர் காளி நீ போற்றி
ஓம் சாந்தா த்வரிதா வைஷ்ணவீ போற்றி
ஓம் பரிபூரணி பத்ரா தேவியே போற்றி
ஓம் கருஉருக் கொண்ட திரிசூலியே போற்றி
ஓம் புத்திர பாக்கியம் தருபவள் போற்றி
ஓம் அதிநீல ஆடைதனை அணிந்தாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் பாசமுண்ட சூலம் கைக்கொண்டவள் போற்றி
ஓம் டமருகம் ஒரு கையில் ஒலிப்பவள் போற்றி
ஓம் சர்ப்பம் கைதிகழ் சர்வேஸ்வரி போற்றி
ஓம் சர்ப்பதோஷம் தன்னையே நீக்குவாய் போற்றி
ஓம் திருமணத் தடை நீங்கச் செய்வாய் போற்றி
ஓம் திருவே என்கதி என்றும் நீ போற்றி
ஓம் நாகராஜா பக்ஷி மனம் உகந்தாய் போற்றி
ஓம் கால பைரவரின் கண்மணி போற்றி
ஓம் பாலமுருகனைப் பாலிப்பாய் போற்றி
ஓம் பஞ்சமுக அனுமனின் ஆனந்தமே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் உதிரம் சிந்தும் நெடுநாவினள் போற்றி
ஓம் கபால மாலை அணிந்தவள் போற்றி
ஓம் மின்னலாய் கண்கள் உடையவள் போற்றி
ஓம் படுத்தும் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
ஓம் துர் மந்திர ஏவல் திருப்புவாய் போற்றி
ஓம் ராஜ சிம்ம வாஹனம் ஏற்றவள் போற்றி
ஓம் ஏகாந்த யோகினியாய் அமர்ந்தாய் போற்றி
ஓம் துடிப்பான செம்பூவில் மகிழ்வாய் போற்றி
ஓம் செம்மிளகாய் யாகத்தில் களிப்பாய் போற்றி
ஒம் அருள்வாக்கிலே வரும் அன்னையே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் க்ஷம் மந்திர பீஜத்தில் உறைவாய் போற்றி
ஓம் அங்கிரஸர் ப்ரத்யங்கிரஸர் தியானமே போற்றி
ஓம் இருடியர் இருபெயர் இணைந்தாய் போற்றி
ஓம் பக்தரைக் காக்கும் பரிவினள் போற்றி
ஓம் பக்தர் காக்கும் பரிவினள் போற்றி
ஓம் ஆணவமலம் அழிக்கும் ஆதியே போற்றி
ஓம் தேவி உபாஸகரின் காவலே போற்றி
ஓம் உருவாகும் குரோதங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கலியுகப் ப்ரத்யட்ச தேவியே போற்றி
ஓம் அடியவர் துதியால் மகிழ்பவள் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் குண்டலினி ஆக்ஞையில் நிறைப்பாய் போற்றி
ஓம் அனங்க மாலினி அம்பிகையே போற்றி
ஓம் அனந்தா போற்றி வாக்வாதினி போற்றி
ஓம் பராசக்தியின் படைதளபதியே போற்றி
ஓம் சனைஸ்சரப் ப்ரீதிக்கு அருள்பவள் போற்றி
ஓம் சங்கடம் யாவும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் உச்சிஷ்ட கணபதி உகந்தனை போற்றி
ஓம் நீல ஸரஸ்வதி மனம் நிறைந்தாய் போற்றி
ஓம் நீண்ட வாராஹியின் நித்திலமே போற்றி
ஓம் சந்தோஷச் சரபரின் சக்தியே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் கண்டார்க்கு என்றும் களிப்பே போற்றி
ஓம் ஆவரண பூஜையில் நிறைபவள் போற்றி
ஓம் சஞ்சலம் பீதி தனைக் களைபவள் போற்றி
ஓம் ஆயாசம் தீர் மாதா கவுலினி போற்றி
ஓம் அண்டங்கள் ஆக்கினையால் ஆட்டுவிப்பாய் போற்றி
ஓம் நள்ளிரவு யாகத்தால் மகிழ்பவள் போற்றி
ஓம் சோகம் தவிர்த்து சுகமருள்வாய் போற்றி
ஓம் சுகம்தரும் சுகமொழி சுந்தரி போற்றி
ஓம் அஷ்டமி பூஜையின் அணங்கே போற்றி
ஓம் பக்தர் மனம் குளிரப் பார்த்தருள்வாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி

ஓம் ஈராயிரம் கண்ணால் கருணை மழை பொழிவாய் போற்றி
ஓம் ஈராயிரம் கையால் எம்மைக் காப்பவள் போற்றி
ஓம் ஓராயிரம் முகமுடனே ஓங்கியவள் போற்றி
ஓம் ஓங்கார ரூபத்தில் உறைபவளே போற்றி
ஓம் எங்குறை கேட்க ஈராயிரம் செவி மடுப்பாய் போற்றி
ஓம் சித்தமலம் தன்னை அறுப்பவளே போற்றி
ஓம் சத்ருபய சங்கட சர்வதோஷ நாஸினி போற்றி
ஓம் சித்தசுத்தி தரும் துரித வராதாயினி போற்றி
ஓம் ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்திர ரூபிணி போற்றி
ஓம் உத்தம இதபரச் சுகமருள்வாய் போற்றி
ஓம் கிங்கிணி ஹாரமணி மாலை அணிந்தாய் போற்றி
ஓம் மங்களவாழ்வு தரும் மஹா ப்ரத்யங்கிரா போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar