SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஓம் ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றிஓம் ஓவாத சத்தத் தொலியே போற்றிஓம் ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றிஓம் ஆறங்கம் நால்வதே மானாய் போற்றிஓம் காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றிஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றிஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றிஓம் மருவி யென்சிந்தை புகுந்தாய் போற்றிஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றிஓம் போகாது என்சிந்தை புகுந்தாய் போற்றிஓம் கச்சாக நாகம் அசைத்தாய் போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றிஓம் மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றிஓம் உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றிஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றிஓம் திருவாகி நின்ற திறமே போற்றிஓம் தேசம் பரவப் படுவாய் போற்றிஓம் கருவாகி யோடும் முகிலே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றிஓம் வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றிஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றிஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிஓம் தேனத்தை வார்த்த தெளிவே போற்றிஓம் தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றிஓம் கானத்தீயாடல் உகந்தாய் போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் ஊராகி நின்ற உலகே போற்றிஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிஓம் பேராகி யெங்கும் பரந்தாய் போற்றிஓம் பெயராது என்சிந்தை புகுந்தாய் போற்றிஓம் நீராவியான நிழலே போற்றிஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றிஓம் காராகி நின்ற முகிலே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் சில்லுறுவாய்ச் சென்று திரண்டாய் போற்றிஓம் தேவர் அறியாத தேவே போற்றிஓம் புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றிஓம் போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றிஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றிஓம் பற்றி உலகை விடாதாய் போற்றிஓம் கல்லுயிராய் நின்ற கனலே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றிஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றிஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றிஓம் என் சிந்தை நீங்கா இறைவா போற்றிஓம் விண்ணும் நிலனும் தீ ஆனயாய் போற்றிஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிஓம் கண்ணின் மணியாகி நின்றாய் போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றிஓம் என்சிந்தை நீங்கா இறைவா போற்றிஓம் உமையான மாது அணைத்தாய் போற்றிஓம் ஊழி ஏழான ஒருவர் போற்றிஓம் அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றிஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றிஓம் சுமையாகி நின்ற கனலே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றிஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றிஓம் தேவாதி தேவர் தொழும் தேவே போற்றிஓம் சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றிஓம் ஆவா அடி யேனுக் கெல்லாம் போற்றிஓம் அல்லம்நலிய அலைந்தேன் போற்றிஓம் காவாய் கனகத் திரளே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றிஓம் நீள அகலம் உடையாய் போற்றிஓம் அடியும் முடியும் இகழிப் போற்றிஓம் அங்கும் ஒன்று அறியாமை நின்றாய் போற்றிஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றிஓம் கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றிஓம் கடிய உருமொடு மின்னே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றிஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றிஓம் எண்ணா இலங்கைக்கோன் தன்னைப்போற்றிஓம் இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றிஓம் பண்ணார் இசையின் சொல்கேட்டாய் போற்றிஓம் பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றிஓம் கண்ணாய் உலகிற்கு நின்றாய் போற்றிஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றிஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றிஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றிஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றிஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றிஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றிஓம் மருவிய கருணை மலையே போற்றி போற்றிஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி போற்றிஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி போற்றிஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றிஓம் தென்னாடு உடைய சிவனே போற்றிஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றிஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றிஓம் பிரதோஷ லிங்கமே போற்றிஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றிஓம் பிரகாச லிங்கமே போற்றிஓம் கயிலை மலையானே போற்றி போற்றி.