|
அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரால் இயற்றப்பட்டது. ஆதித்ய ஸ்தோத்திர ரத்னம். இது 14 பாடல்களையும் ஒரு பலச்ருதியையும் கொண்டுள்ளது. இதில் 12-வது பாடல் சூரியனை சிவபெருமானின் வடிவமாகப் போற்றுகிறது.
ஆதித்யே மண்டலார்ச்சிக புருஷ விபிதயா தியந்த மத்யாகமாத்மந் யாகோபாலங்கனாப்யோ நயநபதஜூஷா ஜியோதிஷா தீப்யமானம்! காயத்ரி மந்த்ர ஸேவ் யம் நிகில ஐநதியாந் ப்ரேரகம் விச்வரூபம் நீலக்ரீவம் திரிநேத்திரம் சிவம் அநிசம் உமா வல்லபம் ஸ்ம்சிரயாமி
கருத்து: சூரியன் உருவில் விளங்கி ஒளிர்பவனும், உலக உயிர்களை தோற்றம் முதல் அழிவு வரை பேணி வளர்ப்பவனும், வேள்வித் தீயை ஒத்த தன் கண்களால் அனைத்து ஒளிகளையும் பிரகாசிக்கச் செய்பவனும். காயத்ரீ மந்திரத்தால் வணங்கப்படுவனும். அறிவை இயக்குபவனும், உலகினை தன் வடிவாய்க் கொண்டவனும், நீலகண்டமும் மூன்று கண்களையும் கொண்டு உமையொருபாகனாக விளங்குபவனுமாகிய சிவபெருமானை இடைவிடாது சிந்திக்கிறேன். |
|
|