கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகவாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே!! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!
|