ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே. (குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி)
மீனாய்ப் பிறக்கும் விதி கேட்டாய் தேனாய் இனிக்கும் மொழி சொன்னாய் வானாய் கிடைக்கும் புகழ் வந்தாலும் தானாய் மறுத்தாய் தனிப்புகழ் கொண்டாய் கோனாய் வாழ்ந்த குலசேகர உன் கோரிக்கை என்னை ஆட்கொண்டதே! தேனார்பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் நீ வாழ்கின்றாயோ எனநான் தேடித் திளைக்கின்றேன் திருமாலின்கண் தீராப் பற்றுகொண்ட திவ்யத்திருமகனே தேவையெல்லாம் அறுத்தவனே திகம்பரனே வானோர் புகழும் முகத்தவனே எனக்குமோர் வழிசொல்வாய்.... எந்தன் கண்ணன் மணிக்கழல் நான் அடைய! |