அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா-பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி! |