|
ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஆடிமாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க வழி கேட்டு, மகாபெரியவரை தரிசிக்கச் சென்றார்கள். அப்போது மகா பெரியவர், இரண்டு ஸ்லோகங்கள் அருளினார். மேலும் பெருமாளுக்கு குளிர குளிர திருமஞ்சனம் செய்யச் சொன்னதோடு, ஒவ்வொரு வீட்டிலும் அரைப்படி அரிசி வாங்க நிறைய தளிகைப் பண்ணி பெருமாளுக்கு சமர்ப்பித்து, ததீயாராதனை செய்து அனைவருக்கும் அன்னதானமும் செய்யச் சொன்னார்.
ஸ்லோகம் 1:
ரிச்யச்ருங்காய முநயே விபண்டக ஸுதாயச நம: சாந்தாதி பதயே ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே.
ஸ்லோகம் 2:
விபண்டகஸுத: ஸ்ரீமாந் சாந்தாபதி ரகல்மஷ: ரிச்ய ச்ருங்க இதிக்யாத: மஹாவர்ஷம் ப்ரயச்சது:
இவை தவிர, திருப்பாவையில் உள்ள ஆழிமழைக் கண்ணா ங்கற பாட்டையும் எல்லோரும் தினமும் சொல்லுங்கோ, மழை பெய்யும் என்று அருளினார். அப்படியே செய்ய, மழை பெய்தது என்பது குறிப்பிட வேண்டியதில்லைதானே! |
|
|