SS கிருஷ்ணரால் அருளப்பட்ட .. குரு பகவான் துதி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கிருஷ்ணரால் அருளப்பட்ட .. குரு பகவான் துதி!
கிருஷ்ணரால் அருளப்பட்ட .. குரு பகவான் துதி!
கிருஷ்ணரால் அருளப்பட்ட .. குரு பகவான் துதி!

தேவகுருவும் நவகிரகங்களுள் ஒருவருமான பிரஹஸ்பதியைப் போற்றும் இந்தத் துதி, பகவான் கிருஷ்ணரால் அருளப்பட்டது. விஷ்ணு தர்மோத்தரம் என்ற நூலில் உள்ள இந்தத் துதியைச் சொல்வதால் ஜாதகத்தில் குருதோஷம் இருந்தால் விலகும். குரு பெயர்ச்சியினால் ஏற்படும் சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.

பகவானுவாச (கிருஷ்ண பரமாத்மா சொன்னது)

ப்ருஹஸ்பதிஸ்ஸுராசார்யோ தயாவான்
ஷுபலக்ஷண:
லோகத்ரயகுரு: ஸ்ரீமான்
ஸர்வஜ்ஞஸ்ஸர்வகோவித:

தேவகுருவும் இரக்க சுபாவம் உள்ளவரும் உலகை ரட்சிப்பவரும் சகலகலைகளையும் அறிந்தவருமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.

ஸர்வேஷஸ் ஸர்வதாபீஷ்டஸ் ஸர்வஜித் ஸர்வபூஜித:
அக்ரோதனோ முனிச்ரேஷ்டோ நீதிகர்தா குரு; பிதா

எக்காலத்திலும் எல்லோருடைய விருப்பங்களையும் ஈடேற்றுபவரும், அனைத்தையும் வென்றவரும், சகலராலும் பூஜிக்கத்தக்கவரும், விருப்பு வெறுப்பற்றவரும், முனிவர்களுள் மேலானவரும், தர்மத்தைப் பாதுகாப்பவரும் தந்தைக்கு நிகரான குருவுமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.

விச்வாத்மா விச்வகர்தா ச விச்வயோனிரயோனிஜ:
பூர்புவஸ்ஸ்வ: ப்ரபுச்சைவ பர்தாசைவ மஹாபல:

வியாழ பகவானே உலகின் உற்பத்திக்கு காரணமானவரும், சகல உயிர்களின் பிறப்புக்கு காரணமானவரும் மூவுலகிற்கும் தலைமை ஏற்பவரும், மிகுந்த பராக்ரமம் உள்ளவருமாகத் திகழ்கிறார்.

சதுர்விம்சதி நாமாநி புண்யானி நியதாத்மனா
நந்தகோப க்ரிஹாஸீன விஷ்ணுனா கீர்த்திதானி வை

இருபத்து நான்கு புண்யகார்ய தத்துவங்களையும் நியமமாகக் கடைப்பிடிப்பவரும் புண்ணியங்களை அளிப்பவரும் நந்தகோபரின் மகனாக அவதரித்தவருமான மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட இந்தத் துதியினை...

ய: படேத்ப்ராதருத்தாய ப்ரயத: ஸுஸமாஹித;
விபரீதோபி பகவான் ப்ரீதஸ்ஸ்யாத்து ப்ரிஹஸ்பதி;
ய: ச்ருணோதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேன்னஸம்சய:
ஸஹஸ்ரகோதாநபலம் விஷ்ணோர்வசந்தோ பவேத்
ப்ரிஹஸ்பதிக்ரிதா பீடா ந கதாசித்பவிஷ்யதி

..... தினமும் விடியற்காலையில் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெறுவர். பகவான் விஷ்ணுவின் அருளுக்கும், குருபகவானின் அருளுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள். மனதில் பக்தியுடன் இதனை அதிசிரத்தையாகச் சொல்பவர். ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைப் பெற்று குரு அருளால் சகல செல்வமும் பெற்று வாழ்ந்து, முடிவில் விஷ்ணுலோகத்தை அடைவர்.

இதி விஷ்ணு தர்மோத்தரே ப்ரிஹஸ்பதி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் (விஷ்ணு தர்மோத்ர புராணத்தில் உள்ள பிரகஸ்பதி துதி நிறைவுற்றது.)

ஸ்கந்த புராணத்தில் உள்ள பிரகஸ்பதி துதி

தினந்தோறும் இந்தத் துதியைச் சொல்வது நல்லது. இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டுமாவது காலை ஆறு முதல் ஏழுமணிக்குள் இந்தத் துதியைச் சொல்லி வருவது சகல தோஷங்களிலும் இருந்து விடுபடச் செய்யும். குருகடாட்சம் கிடைத்து வாழ்வில் திருமணம் முதலான தடைகளை நீங்கும்.

1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம்
குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாக்ஸோ தி யோ தீர்க்க ஸமஸ்ரு; பீதாம்பரோ யுவா

மஞ்சள் பட்டாடை தரித்தவரும் தேவர்களின் குருவும், வாக்கு வல்லமை மிக்கவரும், பார்வையாலேயே பல்வேறு நன்மைகளைச் செய்பவரும், என்றும் இளமையுடன் இருப்பவருமான பிரஹஸ்பதியை வணங்குகிறேன்.

2. ஸுதாத்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ க்ரஹபீடா
அபஹாரக:
தயாகரஸ் ஸௌம்ய மூர்த்தி: ஸுரார்ச்ய:
குட்மல த்யுதி:

கிரகங்களுள் தலைமையானவரும், மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்களை தனது பார்வை பலத்தால் போக்குபவரும், அழகிய வடிவினரும், அமரர்களின் ஆசார்யரும், கருணை நிறைந்தவருமான குருபகவானை துதிக்கிறேன்.

3. லோகபூஜ்யோ லோககுரு நிதிக்ஞோநீதி
காரக
தாராபதிஸ்ச ச ஆங்கிரஸோ வேதவேத்யோ
பிதாமஹ

வேத வேதாந்தங்களை அறிந்தவரும், அனைத்து தேவர்களையும் விட அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவரும், நீதி தவறாதவரும், தாராவை தன் பத்தினியாகக் கொண்டவரும், ஆங்கீரஸரும், உலக உயிர்களின் குருவாகத் திகழ்பவருமான பிரஹஸ்பதியை போற்றுகின்றேன்.

4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமானி
ஏதாநி ய: படேத்

அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ
பவேந் நர:

குருபகவானை பக்தியோடு போற்றி இத்துதியைச் சொல்பவர், சங்கடங்கள் ஏதும் இல்லாதவராக, பிணிகளில் இருந்து விடுபட்டவராக, நீண்ட ஆயுளுடன், ஆரோக்யமாக, திருமணம், புத்திர சந்தான ப்ராப்தி உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் பெறுவர்.

5.ஜீவேத் வர்ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி
நஸ்யதி
ய: பூஜயோத் குருதிலோ பீதகந்தஅக்ஷத
அம்பரை:
புஷ்பதீபஉபஹாரைஸ்ச பூஜயித்வா
ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா பீடாஸாந்திர்
பவேத் குரோ:

வியாழக்கிழமைகளில் இந்தத் துதியைச் சொல்லி, தூப தீபங்கள் ஏற்றி, மஞ்சள் நிற ஆடை அணிவித்து, நறுமண மலர்களால் குருபகவானை அர்ச்சிப்பதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் வருவோர் வாழ்நாள் முழுவதும் குருகடாட்சத்தால் எல்லா நற்பலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar