உரைதமிழ் மூவர்நாவில் நீற்றெழும் அமுதைச் சங்கத்து இருக்கும் வெண்முத்தை சுற்றோரென்னும் கூட்டுந்தேனை வரைதமிழ் முனிவன் நெஞ்ச மலர்க் கமலப்பூஞ் சேக்கைத் திருத்தகும் அரச வன்னப் பேட்டினைச் சிந்தை செய்வாம்.
சாற்று நற்றமிழ்ப் பேற்றுக்கு என்குறை நோற்று வாணி தாள் போற்று நெஞ்சமே.
நான்முகன் நாவின் மேவி நான்மறை வடிவாய் இன்னந் தானரும் பொருள்கள் ஏடரத் தடக்கையின் முறையுந் தாங்கித் தேனலர் கமலப் போதிற் செழித்து வீற்றிருக்கும் அம்மை கான்மலர் போற்றி நாளும் கருத்துற வணக்கம் செய்வாம்.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலேயிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராது இடர். |