|
சங்கு சக்ர தாரீ, மங்கள மருள்வாய் மங்களாம் அருள்வாய் பங்கயக் கண்ணா! (ச) சங்கு சக்ர தாரீ மங்கை மணாளா மங்கை மணாளா தங்க குணாளா! இங்கு மங்கும் எங்கும் நீயே நிறைந்தாய் எங்கள் மனம் மலர என்றும் உறைந்தாய் (ச) எங்கும் உன்னைக் காணாமல் இன்று வாடினேனே; எங்கும் தேடினேனே நெஞ்சம் வாடினேனே (ச) என்று காண்பதோ உன்றன் சந்தர ரூபம் இன்ப வாசம் வீச, தீருமோ பாபம்? (ச) இன்று வானிலே உன்றன் வண்ணத்தைக் கண்டேன்; எங்கும் நீயேதான் என்று கண்டு கொண்டேன் (ச) மாடி மீதிருந்தே மண்ணி வீழ்ந்த போது ஓடி வந்து காத்தாய்; மடியில் தாங்கிக் கொண்டாய். (ச)
பாடிப் பாடி வந்தேன் பண்ணினோடு சேர்த்து பாடலுக்கு நீயே நடனம் ஆடிவந்தாய் (ச) நாடி நாடி வந்தேன் உன்றன் கோயில் தேடி, நாதமென நீயே இசையு மாகி நின்றாய் (ச) கோடி கோடி வந்தாலும் உன்னைநான் மறவேன் கோலமதி போலே, திகழுமுகம் காண்பேன், (ச) பங்கயக் கண்காட்டி, பக்தர் பாவம் ஓட்டி, பஞ்சவரைக் காத்ததுபோல் அடியேனைக் காவாய். எங்கும் உன்னைப் போல இறையைக் கண்ட தில்லை என்பாவம் தூசாக்க வேறு யாரு மில்லை (ச) |
|
|