SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மானோடு நீகூடி மரகத மயிலோடுமன்னனே விளைவாகினாய்மதியோடு வளம் கூட்டி மன்றத்தில் நிலையானமகிமைக்கு அருளாகினாய்.வானோரின் புகழ்பாடி வையத்தில் வாழ்வோரிவாழக்கைக்குத் துணையாகினாய்தேனேன்ன தெளிவென்று தெரியாத பேருக்கும்தெளிவாக்கி நீ காட்டினாய்ஊனுக்குப் பக்கத்தில் உறவென்ன பெரிதென்றஉண்மைக்கு ஒளியாகினாய்யாருக்கும் புரியாத எவருக்கும் தெரியாதஅறிவுக்கு அறிவாகினாய்அதமோடு ஆசைகள் அடக்கியே எங்களைஅன்போது ஆட்சி செய்யும்சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்சிவபால சுப்ரமணியே.காசென்ன பெரிதென்று காலத்தில் வாழ்வோரும்கவலையை மறக்கிறார்கள்மாசற்ற மனதோடு மற்றவரைக் காண்போரும்மனக்குறை தீர்க்கிறார்கள்சூழ்வோரும் நலம் பெற சுற்றத்தார் வளம்பெறசுகத்தையே காண்கிறார்கள்அமிழ்துவறும் வார்த்தையில் அடக்கமுட னிப்போரும்அன்பாக வாழ்கிறார்கள்நாசமுடன் பேசாமல் நல்லதையே செய்வோர்நற்சுகம் பெறுகிறார்கள்வாசமலர் போலுதவி பிறருக்கும் வாழ்வோரும்பாசமுடன் வாழ்கிறார்கள்.கல்லான இதயமுடன் காலத்தில் வாழ்வோரைகரைக்கின்ற தெய்வம் நீயேசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்சிவபாலசுப்ரமணியேஅழகு திருமேனியில் அபிஷேக பால்குடம்ஆனந்த தரிசனம் காண்கற்பூர தீபமும் கண்கவரும் தோற்றமும்காட்சியாய் காணும்போதுமலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்புகழாட்சி காணுகின்றேன்.மலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்புகழாட்சி காணுகின்றேன்.கேட்டவரம் கேட்டபடி கொடுக்கின்ற தெய்வமேகேள்விகள் என்னவென்றுகேட்கின்ற பேருக்கு கேள்விக்குப் பதில் சொல்லவேண்டுவரம் ஈண்டளித்தாய்பொன்னான மேனியில் பூச்சூடி காண்போர்க்குபுதுமனை நீ கொடுத்தாய்மணமகள் வேண்டிவரும் மனதினை நீயறிந்துமணமகளாக்கி வைத்தாய்சோலை திருக் குடிக்கொண்ட சிறுவாபுரி வாழும்சிவ பால சுப்பிரமணியேநேற்றாகி இன்றாகி நாளையென அறியாதுநாளையே கடத்துகின்றோம்ஒன்றாகி உருவாகும் கருவாகிப் போனாலும்ஆண்டுக்குள்தான் அறிகிறோம்நன்றாகி நலமாகி வளமோடு யிருந்தாலும்சிவலோகம் சேர்வதறியோம்கன்றாகிப் போனபின் கனியாத தாயானால்காலத்தில் என்ன செய்வோம்என்றாகின்ற இல்வாழ்க்கை நன்றாக வேண்டுமெனஇறையோடுதான் கூடுவோம்அன்றாட வாழ்வினில் அவுதியுறும் போதெல்லாம்ஆண்டவன் உனைத்தெடுவோம்மன்றாடி மன்றாடி மதிகெட்டுப் போனவரும்மன்னன் உனைத்தான் கூறுவார்சோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்சிவ பால சுப்பிரமணியே.எண்ணத்தில் உள்ளதை யென்னென்ன என்றுமேஎண்ணியே கூறிவைத்தாய்ஏழையின் இதயத்தை ஈசையுடன் நீ தந்துஇயலாமை ஆக்கிவைத்தாய்வண்ணத்தில் விழிபார்க்க வான்கூட்டு வாகைபெறவளமொடு ஆக்கிவைத்தாய்சொல்லுக்கு சுவை கூட்டின் சொல்லோ அமுதாகசொல்லிலே நடை பழகினாய்அன்புக்கு அசை போடும் ஆசையை பிறப்பாக்கிகண்ணீரை கதையாக்கினாய்அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பேர் சொல்லகந்தனே கருவாக்கினாய்மன்றத்தில் விளையாடு மடிமீதில் தவழ்ந்தாடும் மன்னனே மயிலேறுவாய்சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்சிவ பால சுப்பிரமணியே.நெற்றியில் திருநீறு அணிந்திட அனுதினம்நிம்மதி சேர வைத்தாய்நெஞ்சத்திலே வைத்து தஞ்சமென கொள்வோரைநீடுழி வாழவைத்தாய்மற்றவர்போல் வாழ்ந்து நடைபோட்டு உனைக்கானமுடவரும் நடைபழகினாய்உற்ற தமிழ் உளதென்று உன் நாம் கூறிவரஊமையுடன் மொழி பயின்றாய்ஒளி வீசும் உன் முகம் காணாத குருடனைவிழி தந்து வழிகாட்டினாய்உளச்சோர்வு உற்றவுடன் உடற்சோர்வு தானாகிஉனைக்கான வழிகாட்டினாய்காணுவதில் சுகமாகி கற்பனையில் வளமாகிஅழகுத் திருச்சிலையானாய்சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்சிவ பாலசுப்பிரமணியே!ஐந்திலே எத்தனை அறியாத பருவத்தில்ஆளாக்கி தாலாட்டினாய்பூவான எந்தனை காயாகிப் பார்க்காமல்கனியாகி மாற்றிவைத்தாய்ஆகாயம் போலுயர அயராதுழைத்தாலும்அளிக்கின்ற எடையாகினாய்சூழ்ச்சிகள் புரியாது சூழ்வது தெரியாதுசுற்றத்தை மாற்றிவைப்பாய்சொந்தங்கள் இதுவெனச் சொல்லி வைப்போர்க்குசொந்தமோ நீயாகினாய்பிறந்தவன் இறப்பதில் பேதமை இல்லாதபெரும்பணி உனதாக்கினாய்அரும்பணி உருவாக்கி அடிமையாய் எமையாக்கிஅன்றாடம் தேடவைக்கும்சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்சிவ பாலசுப்பிரமணியே.மனைவீடு இருகொண்டு மன்றத்தில் வாழ்ந்துவரும்மன்னனே நீ வாழ்கவேமனம்போன போக்கில் குடிகொள்ளும் அருள்கூடம்ஒளி வீசும் நலமாகவேஅணிகலன் நீயூட்ட படைகலம் கொண்ட உன்கைவேலும் சிறந்தோங்கவேஆகாயம் மேலுயர்ந்து அதிரூப சக்திதரும்மனம்போல் மயில்வாழ்கவேசேவலொரு பணியாக நாகமொரு இடமாகநாளெல்லாம் வளம் கூட்டவேஎருக்கோடு பூஜைமலர் என்றைக்கும் நீசூடநந்தவனம் செழித்தோங்கவேகந்தனருள் கவிபாடி உனை நாடி வருவோரும்ஒருகோடி நலமாகவேசோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்சிவபால சுப்பிரமணியே.