ஓம் அற்றவர்கட்கு அருமருந்தே போற்றி ஓம் மருத்துவ போற்றி ஓம் இருங்கை மதகளிறு ஈர்த்தாய் போற்றி ஓம் உள்ளுவார் உள்ளத்து உறைவாய் போற்றி ஓம் தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி ஓம் வாமா போற்றி ஓம் வாமனா போற்றி ஓம் ஆம் ஆறு அறியும் பிரானே போற்றி ஓம் ஓரெழுத்து ஓருரு ஆனவ போற்றி ஓம் ஆரெழில் வண்ண போற்றி
ஓம் ஆரா அமுதே போற்றி ஓம் ஆதி போற்றி ஓம் கமலத் தடம் பெரும் கண்ணா போற்றி ஓம் நண்ணல் அரிய பிரானே போற்றி ஓம் கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி ஓம் தொல்லையஞ் சோதி போற்றி ஓம் ஞானம் எல்லை இலாதா போற்றி ஓம் கவிக்கு நிறை பொருள் போற்றி ஓம் நீதியே போற்றி ஓம் அறம் தானாகித் திரிவாய் போற்றி