SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)காப்பு வெண்பாசிரவைநகர் மீதிற் சிறப்புற் றிசையும்வரதரா சப்பெரு மாள்பொற் -புரமிசையச்சாத்துந் துதிப்பதிகஞ் சார்காவ லாழ்வர்தம்ஏத்துந்து பொற்பதங்க ளே.நூல்எண்சீர்விருத்தங்கள்1. தரங்கமிக் கதிர்கட லுண்டெழுங் கமஞ்சூற்சலதர மேனியுஞ் சயங்கொளைம் படைதோய்கரங்களுந் தாமரைக் கண்களு மந்தகாசமுற் றலர்ந்தசெவ் வாயுமெய் வேதச்சிரங்கவின் றமைதிருத் தாள்களு முபயதேவியர் களுந்திகழ் தரக்கக மிசையோர்தரங்கவின் சேவைநல் குதிசர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.2. சகத்திர தளங்கொள்பொன் னம்புய மீதிற்றழைத்தவிர் மங்களப் பொன்னையம் புயமேற்சுகந்திரம் பொருந்தவைத் தமைமண வாளசுந்திர நின்னடித் துணைகளை யன்பாலகத்திரம் பொருந்தவைத் திடவிரும் படியேனல்லலங் கடலிடை யமிழ்ந்திடன் முறையோசகத்திர ளன்பர்கள் தொழச்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.3. துட்டநிக் கிரகமுஞ் சிட்டரைக் காக்குந்தொழிலுநின் கையினிற் சுடர்விரித் தமையும்வட்டமெய்ச் சக்கர மியற்றிடு முனக்கோர்வருத்தமு மின்றென மறைவழுத் திடுநின்னிட்டமிப் படியிரங் காதுறல் காலவியல்பென நீயுமெம் போலிசைத் திடற்காஞ்சட்டமின் றின்றிரங் குதிசிர வணவூர்சார்கரி வரதரா சப்பெருமாளே.4. கோயிலின் றிருப்பணி யாதிய புரியுங்கொள்கைமெய்த் தொண்டரைக் குறுநகை புரிந்துபேயிலின் றிருப்புவைத் தேபொருள் காக்கும்பித்தின ரிகழ்ந்தனர் பிரமைகொண் டறத்தைநோயிலின் றியபல நிந்தைசெய் தந்தோநொறுக்கினர் வலிகெட நொடியின் முன்வந்தேதாயிலின் புறவருள் வாய்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.5. கண்டவ ருள்ளமுற் றவுங்கனன் மெழுகிற்கரைத்துருக் குபுவிழி கருத்தினைக் கொள்ளைகொண்டருண் மயஞ்செய்நின் மங்கள சகுணகோலமென் விழியக லாதமைத் துண்மைத்தொண்டர்கொண் டாடிய சுகநிலை யகத்தேதுலக்கியென் வினையுட லலக்கண்முற் றொழிப்பாய்தண்டரங் கக்கட லிற்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெருமாளே.6. கூடலென் றுன்றிரு வருளென துள்ளங்குளிர்ந்துநின் னாடலின் கொற்றமுள் வியந்துபாடலென் றுலகிடத் தமையுயிர்த் திரள்கள்பலவுமெய்ப் பத்தியுட் பதிந்துபே ரின்பமூடலென் றடிமையொ ருடலினும் புகுதாமுத்திபெற் றிடர்செய்மும் மலப்பெரும் பகையைச்சாடலென் றுரைத்தருள் வாய்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.7. கூம்பிலர் நெஞ்சகஞ் சிரமிசை துணைக்கைகுவித்தில ரெறிதிரைப் பாற்கடன் மீதிற்பாம்பிலங் கறிதுயில் புரியுநின் றிருத்தாள்பரவிலர் பசுவினங் களைப்பரிந் தன்பாலோம்பிலர் கலியட லடங்கிட வறங்களோங்கிட வோர்விளை யாட்டிசை யாசைத்தாம்பில ரிதயமொப் பாஞ்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெருமாளே.8. ஆசனைத் தையுங்கெடுத் தன்பரை யெடுக்குமரிதிரு நாரண வணியரங் காநின்பூசனை புரிந்துதுத் தியம்பல விசைத்துப்புகழ்பொலி யாயிர நாமம்விண் டன்பால்வாசனைத் துளவுகொண் டர்ச்சனை புரியும்வாழ்க்கையி லென்றுமா றாதமைத் துவப்பாய்த்தாசனை யாளடைக் கலஞ்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெருமாளே.9. பூதனை தன்முலைப் பாலுட னுயிரும்புசித்தவ ளுயிர்க்குறும் பொய்ப்பிறப் பிறப்பாம்வாதனை தவிர்த்தனை வலிந்துநின் புகழ்ச்சீர்வாழ்த்திமிக் கிரக்குமென் மனத்திடை யமையுங்கோதனைத் தையுந்தவிர்த் தன்பர்கள் பொலிவைகுந்தமெந் நாளுமென் சிந்தைவிட் டகலாச்சாதனை யருள்கிலை யென்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.10. கண்ணனே நீயென வுயிர்த்திரள் பெற்றகண்ணனே கத்தினுங் கலந்திசை மணிமெய்வண்ணனே யருட்சட கோபன கத்துள்வயங்கியற் சிற்சுக வானந்த மயமாம்விண்ணனே யென்னுடற் பிணிப்பற வப்பால்வேலையு ளமிழ்த்திட வேண்டுமெய்க் கருணைத்தண்ணனே யெண்ணனே யணிச்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாளே.11. வனசமென் மலர்த்திரு மாதுதன் னுரம்போன்மருவியெந் நாளினு மங்களம் பெருக்கத்தனதுநட் சத்திரப் பேர்ச்சிர வணவூர்சார்கரி வரதரா சப்பெரு மாண்மேற்சனனம ரணமில திகபர சுகசாதனந்தரு வான்கந்த சாமிசொல் பதிகம்மனதுவப் புடன்றுதி புரியடி யார்க்கெம்மாட்சியு மருவிடுந் தாழ்ச்சிமுற் றறுமே.