இரட்டையாசிரிய விருத்தம்
பூரணச் சந்திரோ தயமன்ன வதனமிசை பூத்தகுறு முறுவல்வாயும் பொங்குமங் களவருட் கடல்வாரி யுலகினிற் பொழிவிழித் துணையுமணிசால் காரணவ ருட்சோதி விரியுமணி மேனியுங் கல்லினைநன் மெல்லியல் செயுங் கமலமல ரடிகளுந் தநுவாளி சேர்திருக் கைகளுங் குய்கமழ்குழற் பேரணங் கினர்களும் வணங்கியற் சீதா பிராட்டியு மிலக்குமணமெய்ப் பேர்கொள்பெரு மானுமநு மானுமன் புற்றிலகு பேரருட் காட்சிதருவாய் நாரணவு சிட்டர்களி தூங்கிடத் துட்டர்குல நாசமுற் றிடவுதித்த நாமமந் திரசீர்த்தி காமசுந் தரபூர்த்தி ராமசந் திரமூர்த்தியே.
கீர்த்தனம்
இராகம் - கௌளம் பல்லவி தாளம் -ரூபகம்.
ராமசந்திரனே தாரக ராமசந்திரனே தசரத (ராம)
அநுபல்லவி
நேமநெஞ்சக மேன்மணந்திசை கோமளம்பொலி ஞானசுந்தர நீலமேனி விடாதுநாடிடு சீலமேதரு வாய்சுபாகர (ராம)
சரணங்கள்
கரியகல்லுருவே - சுபந்திகழ் தருபெருந்திருவே - யெனும்படி கருணைதோயிரு தாண்மணந்தமை பொடியைமீதுற வீசுமங்கள காரணத்திரு மேனிநாயக பூரணப்பொரு ளானசானகி (ராம)
அரியபீ தகமே - கவர்ந்திடக் கொடியபா தகமே - புரிந்திடு மலனைநீடுவன் மீகமூடுறு நெடியமாதவ னாகவேபுரி யலகிலாரண முதன்மையாமிகு பதிதபாவன மகிமைதோய்ரகு (ராம)
வாசமிக்குளவே -யெனுந்தள மார்திருத்துளவே -தினங்கொய்து வாரிசப்பத மீதிலிட்டுரு வேறவர்ச்சனை தானியற்றுநர் வானவர்க்கரி தானவதிசய வாழ்வுறப்புரி தேவஜெயஜெய (ராம)
நேசமெய்ப்பணியே - புனைந்தவிர் பூசனைப்பணியே -சுகம்பொலி நீலவேலைகொண் ஞாலமானிடர் சாலவேபுரி சீலவாழ்வெனும் நீதமார்கந்த நாதன்வாய்தந்த கீதமேவந்த பாதவானந்த (ராம) |