|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> சிரவை சிவபெருமான் சந்தப் பதிகம்
|
|
சிரவை சிவபெருமான் சந்தப் பதிகம்
|
|
 |
(சிரவையாதீன அடியார்களிலொருவராகிய தவத்திரு அரங்கமுத்து சுவாமிகள் அருளியது)
1. கஞ்சத்தேன் உண்டுற்றே கவின் தரும் சுரும் பினம் காவூ டேபோய் ஓயாதே களியிசை பயில்தரல்போல் நெஞ்சத்தே வந்தித்தேன் நினைந்து உளம் தினம் தினம் நீயோர் சேமேல் வாராயோ நெடுவினை பொடிபடவே வஞ்சத்தே மிஞ்சுற்றார் மனம் துணிந்திடும் பவம் மாளா தோதான் ஓதாயே மலர்கணை தமைவிடுவேள் செஞ்சப்போர் மங்கத்தான் செயும் பெரும் கணின் வளம் தீயார் காணார் ஆவாரோ சிரவையில் வளர்சிவனே.
2. பற்றற்றார் சித்தத்தே பரந்திடும் பெரும் பூதம் பாரா தேநாள் போலாமோ பரவிடு நிலையருள்வாய் சுற்றத்தார் கொத்துற்றே கணங்கிடும் கொடும் கபம் தோயாது ஓர்வாழ்வு ஈவோனே சுருதியின் முழுமுதலே குற்றத்தாம் தக்கர்க்கே குறைந்திடும் சிரம் தரும் கோபா வேசா தீயாடீ குறுமுனி பணியொருவா செற்றத்துஆம் அக்கப்போர் செயும் கள்அஞ்சு எயும திறம் தேவா நீதான் ஓதாயோ சிரவையில் வளர்சிவனே.
3. அத்தத்தே பச்சைத்தாய் அமைந்திடும் கவின் கண்இங்கு ஆரா தேநாள் வீணாமோ அருள்ஒரு சிறிது இலையோ மத்தத்துஏர் இச்சிப்பாய் மலம்செயும் பவம்தரும் வாதுஓ யாதோ மாதேவா மதிவளர் சடை முடியாய் நத்தத்தான் புடபத்தான் நசைந்திடும் பெரும் புகழ் ஞானா காரா மேலோனே நலமிகும் அடியவரே சித்தத்தே தித்திக்கா தினம் செபம் சொலும் தவம் தீரா தேவாழ் வாராநீள் சிரவையில் வளர்சிவனே.
4. நிந்தித்தே வந்திட்டார் நிதம் திரிந்திடும் புரர் நீறா மாறே காணாநீ நிலமகள் துயர்களைவாய் வந்தித்தே நின்றிட்டே வரம் கொளும் பலன் களின் மாறா மாறா தேநாளும் வளர்பணி அதைவிழைவார் பந்தத்தே கொண்டு உய்க்கா பழம் பெரும் கரும் கொடும் பாசா காதா காமாரீ பதமலர் இணைதமையே சிந்திப்பார் கொந்துற்றே தினம் புகழ்ந்திடும் தமிழ் சேண்வாழ் வார்காது ஊடேபாய் சிரவையில் வளர்சிவனே.
5. மன்றிற்போய் வென்றிட்டே மதம் கொளும் பெரும் தமிழ் வாணா கீரா காணாய்நீ மலிபொருள் எனும்ஒருவா நன்றிக்கே வித்திட்டார் நலிந்திடும் பவம் தினம் நாடா தேநீ போவாயோ நலம்மொரு சிறிது இலையோ பன்றிக்கு ஓர் அம்பு உய்த்தே பணிந்திடும் தனஞ் சயன் பாலோர் பாசா பாராயோ பழவினை வலைகளைவாய் தென்றிக்கோன் மங்குற்றே சிரம் குனிந் திடும் பெரும் சீரார் ஓவா தேவாழ்வார் சிரவையில் வளர் சிவனே.
6. அண்டத்தார் நின்றுற்றே யடைந்து அழும் தினம் தனில் ஆசு ஆர் சூர்மா போமாறே சுழல்விழி முருகு அருள்வோய் மண்டிப்போர் கண்டிட்டார் மலைந்து அலைந்திடும் புரர் வாயா லேயே தீயானார் மகிமைகள் புகழ்வனவோ உண்டிக்குஓர் எண்திக்கே உழன்றிடும் பெரும் பவம் ஓயா தோநீ ஓதாயோ உருவிலி எரிகணையைச் சிந்திக்கா புந்திக்கோர் சிவம் தரும் பரம் பொருள் சேவேறு பாராயோ சிரவையில் வளர்சிவனே.
7. சந்தத்தால் முற்பட்டே தயங் கிடும் கரம் திகழ் சாமஅ தீதா தூயோனே தழல்நிகர் திருஉருவா பத்துஅத்தா பற்றுஅற்றார் பகர்ந்திடும் பதம் தரும் பாதா வேதா காணானே படிறனின் எதிர்வருவாய் நந்தத்தான் அத்திக்கோன் நயந்திடும் கவின்கொளும் நாதா நாடா தேநாளும் நலம் அழிதா உழல்வேன் சித்தத்தே தித்தித்தே செபம் செயும் தவம் பெறும் தீரா பேய்சூர் காடு ஆடீ சிரவையில் வளர்சிவனே.
8. உள்ளத்தே மெள்ளத்தான் உவந்து இடம் பெறும் பரன் ஒரா தேன்நான் ஆவேனோ ஒருகணம் எதிர்வருவாய் கள்ளத்தேன் உய்யத்தான் கடும் சினம் தரும் புலன் காதா தேவீழ் நாள்ஏதோ கருணை ஓர் சிறிது இலையோ வெள்ளத்தான் துள்ளுசீர் மினும் பிறை கொளுஞ்சடை மேவா வாழ்வுஈ தாதாவே விதிதலை பறிஅனகா தெள்ளுத்தேன் எள்ளுற்றே சிதைந் திடுஞ் செழுந்தமிழ்ச் சீரார் ஓவா தேவாழ்ஏர் சிரவையில் வளர் சிவனே.
9. அன்னத்தான் வெண்நத்தான் அகம் பவம் கடிந்திடும் ஆதி வேதஅ தீதாநீ அருள்புரி பவன் எனவே சொன்னத்தால் துன்னுற்றேன் துவந்துவம் செய்யும் பிணி தோயாது ஆம்வாழ்வு ஈயாயேல் துணைபிரிது எவர்உளரோ இன்னற்போர் பண்ணித்தான் இரும்பதம் தரும் குணம் ஏனோ கூறாய் மாதேவா இதில் ஒரு பெருமையதோ தென்னற்கே தின்னத்தான் செலும் தினம் கணின் முனம் சேரா யோநீ தேவேசா சிரவையில் வளர்சிவனே.
10. வந்திப்பார் நெஞ்சத்தே வளர்ந்து இலங்கிடும் பெரும் மாயஅ தீதா தூயோனே வரம் இதை அருள்புரிவாய் பந்திப்பார் மிஞ்சுற்றே பயம் கொளும் தினங் கணில் பாரா தேநான் போமாறே பரகத உதவிடுவாய் உந்திப்பூ நந்தர்க்கே உவந்திடும் பதம் தரல் ஓதா நாளே வீணாமே உலகியல் ஒலிதருமோ சிந்தித்தே கஞ்சத்தால் தினம் புணர்ந்திடுஞ் செயல் தேயா தோர்வாழ் சீரேசால் சிரவையில் வளர்சிவனே.
11. வெண்புட்கோ செம்புட்கோ விடைத்துபள் பறந்து விண் மேலோ கீழோ காணாதாம் விரிசுடர் வடிவுடையோய் கண்புட்கோ ஐங்கைக்கோ கனிந்திடும் பெரும்பரன் காலஅ தீதா வாராயோ கனவிலும் உனைமறவேன் பண்பெற்றே விண்டு உற்று ஓர் பதம் அதைத் தினம் தினம் பாடா வாழ்வே ஈவோனே படிறனின் எதிர்வருவாய் திண்பொற்றேர் கண்டிட்டே சிரம்கரம் கொண்டு அன்பு டன் சேர்வார் ஆனா சீரேநீள் சிரவையில் வளர்சிவனே.
12. ஒற்றிக்கோ விற்றுக்கோ உணர்ந்து அடைந்தனன் சரண் ஊரா ராலே ஆகாதாம் ஒருபயன் அருள்பவனே திற்றிக்கே நந்துற்றே திரிந்திடும் கொடும் பவம் தேவா நீதான் ஓவாயோ திருமிகு முழுமுதலே பற்றுற்றே பச்சைத்தாய் பகிர்ந்துடன் விளங்கு எழில் பாரா தேநாள் வீணாமோ பகர்மொழி வினவிலையோ செற்றற்றார் பற்றற்றார் தினம் செபந்தபஞ் செயும் சீரால் ஓவா தாராவாழ் சிரவையில் வளர்சிவனே.
13. பந்தத்தால் நொந்துற்றே பயந்து நெஞ்சு உடைந்தனன் பாராய் காவாய் காபாலீ பணிபவர் துணைகளை வோய் சிந்தித்தே வந்தித்தோர் திரும்பவும் பிறந்திடும் தீதோர் ஆகா மாறேநீ திருவருள் புரிகிலையோ பந்திக்கே அம்பு உய்த்தான் பகர்ந்திடும் வணம்செலும் பாதா கோலே யீவோனே பலமுறை உரைசெயவோ செந்திற்கே இன்றொப்பார் செகம் புகழ்ந்திடும் கவின் சீரால் ஏர்சேர் மாவாழ்வாம் சிரவையில் வளர்சிவனே. |
|
|
|