SS விடசுரப்பிணித்தடை விண்ணப்பம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விடசுரப்பிணித்தடை விண்ணப்பம்
விடசுரப்பிணித்தடை விண்ணப்பம்
விடசுரப்பிணித்தடை விண்ணப்பம்

(சிரவணபுரம் சுப்பிரமணிய சருமா என வழங்கும்க.வே. சின்னத்தொட்டைய கவுண்டரவர்கள்
சிவபெருமான் மீது இயற்றியது)

காப்பு வெண்பா

பூமே வயன்மால் புரந்தரனுங் காணாத
தேமேவு மின்பச் சிவனையன்பிற் - காமேவுங்
கோல மலிசிரவைக் கோயிலிடத் தேத்துபுகழ்
மேலமையும் விண்ணப்ப மே.

நூல்

(எண்சீர் விருத்தம்)

1. வாகீசன் பட்டயரும் பெருஞ்சூலே நீக்கி
வரவழைத்தாட் கொண்டிடுமுன் மலர்க்கழலை விரும்பி
நாகூசா விதங்கவிசொற் றுன்சமுக நாடி
நான்புரிவிண் ணப்பமிதை நழுவாம லேற்றுக்
காகூவென் றழும்படியே சிறுவர்சிறு மிகளைக்
கையகன்று நமனூõர்க்குக் கடிதடைய வாட்டுந்
தீகாற்றும் விடசுரமிவ் வூர்க்கணுகா தறுப்பாய்
சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.

2. கிடக்கின்றா னென்றனைநீ யகற்றாது சற்றே
கிருபைமிகப் புரிந்துகவி கேட்ட திற்சொல் குறையைக்
கடக்கின்ற படியுனது கடைக்கண்ணாற் பார்த்துக்
காப்பதுநின் பெரும்பாரங் காலவியல் பொத்து
நடக்கின்ற தென்றுறிலுன் கோயில்விழா முதலாம்
நற்கருமங் குன்றிலதை நான்சகிப்பேன் கொல்லோ
திடக்கனலார் விடசுரமிவ் வூர்க்கணுகா தறுப்பாய்
சிரவணமா புரமருவுந் தேவர்பெரு மானே.

3. அருளுருவே யரும்பொருளே யரியயனுந் தேரா
அற்புதமே கற்பகவே யாவும்வல நலமே
இருளெனவே யுலகிலுறுங் குறைவகற்றற் பொருட்டா
யியற்றினையென் றாலும்விட மேன்றசுர மடியேன்
கருதியுரைப் பதையேற்றுச் சிறிதுமணுகாதே
கருணைபுரிந் தாள்வதுநின் கடமைசெவி சாய்த்துத்
திருவருளின் பெருக்கமைந்திவ் வூர்க்கணுகா தறுப்பாய்
சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.

4. என்னனையார் மேற்பிழைக ளிருந்தாலும் பணிந்தே
யிசைக்குமுறை வினவியன்பா லென்முகநேர் நோக்கிப்
பொன்னனைய திருவருளை யணுவளவு புரிந்தாற்
புக்கவிட சுரரோகம் புற்பனிபோற் போமே
அன்னைபிதா விருவருந்தஞ் சேயுரைதீ தெனினும்
அகற்றாமே லேற்பதுபோ லடிமைகவி கொண்டே
செந்நாவற் கருளரிபோ லிவ்வூரைக் காப்பாய்
சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.

5. இப்பொழுது நீ தான்பா ராமுகமா யிருந்தா
லெனக்கவதி நேர்ந்துவிடு மிதுசகிக்க முறையோ
முப்பொழுது மறிந்தபெருங் தெய்வமுனை யன்றி
மூதுணர்வார் திருவாயின் மொழிந்திடக்கேட்ட றியேன்
கைப்பொருளில் லான்சொல்கொளா வுலகநடை யவர்போற்
கருதாதுன் கருணையுறக் கடைக்கணித்தல் கடனே
செப்பிடுமிவ் வூர்க்குவிட சுரமணுகா தறுப்பாய்
சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.

6. தொட்டையனாஞ் சிரவணமா புரவாசி யேழைச்
சிறியேனின் றமிழேற்றுத் தீச்சுரநோ யூர்க்கே
யெட்டுணையுஞ் சாராம லோட்டியருள் வழங்கி
யிப்பதிக மோதுமவர்க் கெக்காலு மணுகுங்
கட்டமுதல் வாதைமுற்றுங் களைந்தெறிந்துன் புகழைக்
காசினியோர் கொண்டாக் கருதிடுதல் கடனே
சிட்டர்தொழு தேத்துசிர வணபுரிவா ழீசன்
றிருவடிகள் போற்றுநரோர் தீங்கடையார் நிசமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar