SS சிரவணபுரப் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிரவணபுரப் பதிகம்
சிரவணபுரப் பதிகம்
சிரவணபுரப் பதிகம்

(கவியரசு கு. நடேசுக்கவுண்டர் இயற்றியது)

எழுசீர் ஆசிரிய விருத்தம்

பண் - புறநீர்மை

1. பொடிகமழ் நுதலும் திலதமும் கருணை
பொங்கிய பங்கய விழியும்
கெடிகமழ் பவள வாய்ஒளிர் முத்தம்
கோத்தன முறுவலுங் காட்டித்
தூடிகம ழிடையுந் துணை முலைக் குடமும்
சுரிகுழற் கற்றையும் சுமந்தோய்
கடிகமழ் சோலைச் சிரவண புரம்வாழ்
கந்தனென் உளங்கவர்ந் தானே.

2. இளவள ஞாயி றொளிதிரு மேனி
யனகணின் றெங்கணும் பரவத்
தளவள வரும்பு முறுவலின் நிலவாற்
சந்திர காந்தநீர் ததும்பப்
பளபள வெனும்வேற் படையர சேந்திப்
பசுமயின் மிசையெதிர் தோன்றி
வளமள விலலாச் சிரவண புரம்வாழ்
மைந்தனென் மணங்கவர்ந் தானே.

3. பவளமால் வரைமேற் கவிழுமிந் திரவிற்
பான்மையின் பன்மணி மாலை
துவளவமா லகற்றுஞ் சுந்தர நீறும்
தூமணக் கலவையுந் துதையக்
கவளமா களிறுந் தவளமா லேறுந்
கண்டுள நாணவே நடந்து
குவளமார் புகழ்சேர் சிரவண புரம்வாழ்
குமரனென் னுளங்கவர்ந் தானே.

4. நங்கைமீர் ஞால நடையறி யாத
நாரியென் றேசன்மின் ஆசை
பொங்குமேல் நாணம் போமெனல் காமம்
பொருந்தினா ரன்றியா ரறிவார்
சிங்கமீப் போர்த்த வருடையின் குருளை
தினகர னெனவொளிர் வடிவேல்
அங்கைமீ தேந்திச் சிரவண புரம்வாழ்
அழகனென் னுளங்கவர்ந் தானே.

5. கசந்தது பாலும் கன்னலும் பாகும்
கண்டும்வண் டெச்சிலும் அமுதும்
பசந்தது மேனி வசந்தமென் காலும்
பாய்புலி போலவே சீறும்
அசந்ததி யாக்கை மென்மலர்ப் பள்ளி
அழலென வெதும்பிடுஞ் சேவற்
றுசந்தனை யேந்திச் சிரவண புரம்வாழ்
தோன்றலென் னுளங்கவர்ந் தானே.

6. மற்றொரு வரையான் பற்றிலேன் மறந்தும்
வாயவன் பேரையே வாழ்த்தும்
சொற்றமிழ் மாலை தொடுக்கிலேன் பிறர்க்குத்
தொண்டுபூண் டவனையே தொழுவேன்
கற்றதன் பயனும் நற்றவப் பயனும்
கைவந்த தெனவுளங் களிப்பேன்
நற்றவர்க் கரசாய்ச் சிரவண புரம்வாழ்
நம்பியென் னுளங்கவர்ந் தானே.

7. பொன்னுயர் பொருப்போ செம்மணித் திரளோ
பொருகடற் பவளத்தின் குவையோ
மின்னொளிப் பிழம்போ என்னநன் மேனி
விளங்கிடக் களங்கறுந் தொண்டர்
இன்னுயிர்த் துணையாய் விழைவர மளித்தே
ஏந்திழை யாரிரு வருடன்
தென்னுயர் பொழில்சூழ் சிரவண புரம்வாழ்
சேந்தனென் னுளங்கவர்ந் தானே.

8. இந்திர நீலப் பொருப்பின்மே லிரவி
இருந்தது போன்மயின் மீது
வந்திர வலர்க்குப் பேரருள் வழங்கும்
வள்ளல் உள் ளினரிடர் நீக்கும்
மந்திரம் மணிநன் மருந்துபைம் புனவர்
மடந்தைகோன் பாளைமுத் துதிர்க்கும்
கந்தியம் பொழில்சூழ் சிரவண புரம்வாழ்
கந்தனென் னுளங்கவர்ந் தானே.

9. நெக்குநெக் குருகித் தழலுறு மெழுகாய்
நினைபவர் காயமே கோயிற்
புக்குமிக் கின்பந் தரும்பரம் பொருளிப்
புன்மையேன் கன்மனம் உருக்கி
இக்குநெக் கொழுகுஞ் சாறெனத் தமிழ்ப்பா
இயம்புவித் தேற்றருள் பெருமான்
மொக்குநெக் களியுண் சிரவண புரம்வாழ்
முருகனென் னுளங்கவர்ந் தானே.

10. வடிதமிழ்ப் புலவர் வியப்புறும் வண்ணம்
வண்ணநற் கவிசொல வல்லான்
பொடிதவழ் நெற்றிக் கந்தசுவாமிப்
பொய்யிலா முனிவரன் போற்றத்
தடிதக வழிக்கும் மதுகொலை யொழித்துத்
தண்ணருள் வளர்க்கும் வேளாளக்
குடிதழை வுறுசீர்ச் சிரவண புரம்வாழ்
குமரனென் னுளங்கவர்ந் தானே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar