SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(பழ.தரும.ஆறுமுகம் (பெரிய தோட்டம்) அவர்கள் இயற்றியதுசிரவணம்பட்டி)1. அப்பம் அவல்விரும்பும் ஆனை முகன் அடியார்ஒப்பரிய நலம்சேர் உளமென் உயர்தொட்டில்இப்போ துனக்காக இங்கே விடுதந்தார்செப்பரிய செல்வியே தாலேலோசிரவையூர் நாயகியே தாலேலோ.2. இலகு தமிழ் இறையாம் எம்முருகன் தன்அடியார்அலகில் மனமென்னும் அணிசேர் மணித்தொட்டில்திலகநுதலா யுனக்குத் தேர்ந்து விடுதந்தார்உலகு கொருதாயே தாலேலோஉயர்சிரவை நாயகியே தாலேலோ.3. தண்டாயுதபாணிச் சாமி அடியார்கள்நண்பார் மனமென்னும் நலஞ்சேர் நற்தொட்டில்பண்பாய் அமைத்துப் பாங்காய் விடுதந்தார்விண்ணோர் பணிதேவீ தாலேலோவியன்சிரவை நாயகியே தாலேலோ4. குன்றமாம் ரத்னகிரிக் குமரன் அடியார்கள்பொன்றா மனமென்னும் புகழ்சேர் பூந்தொட்டில்இன்றைக் கணிபூட்டி எழிலாய் விடுதந்தார்என்றைக்கும் தாயேநீ தாலேலோஎம்சிரவை நாயகியே தாலேலோ.5. பொடியார் திருமேனிப் பொன்னம்பல வாணன்அடியார் மனமென்னும் அன்புத் திருத்தொட்டில்வடிவாம் பிகையுனக்கே வகையாய் விடுதந்தார்முடியா முதலே தாலேலோமுதற்சிரவை நாயகியே தாலேலோ6. திருமண் அணிநெற்றித் திருமால் அடியார்கள்இருகண் நிறைவாக இலங்கும் எழில்தொட்டில்பெருகும் மனத்தொடு பெய்து விடுதந்தார்உருகும் மனத்துமையே தாலேலோஒண்சிரவை நாயகியே தாலேலோ7. வெள்ளைக் கமலத்தாய் விரவும் அடியார்கள்தெள்ளத்தெளியப் பாத்தொடுத்த செழுந்தொட்டில்உள்ளத்தால் ஆக்கி உனக்கே விடுதந்தார்ஒள்ளியசீர்க் காளியம்மை தாலேலோஒளிர்சிரவை நாயகியே தாலேலோ.8. செல்வத்திருமடந்தை சீரார் அடியார்கள்நல்ல மனமென்னும் நயஞ்சேர் நறுந்தொட்டில்வல்லி உனக்கே வகையாய் விடுதந்தார்எல்லையில் கருணையாய் தாலேலோஎழிற்சிரவை நாயகியே தாலேலோ.9. வில்லார் நுதல்வீர மாச்சி அடியார்கள்வெல்லும் மனமென்னும் விரைசேர் மலர்த்தொட்டில்மல்லிகையாற்கட்டி மகிழ்ந்து விடுதந்தார்தில்லை நடத் தாய் தாலேலோதிருச்சிரவை நாயகியே தாலேலோ10. வடகிழக்குத் திக்கில் வளர் மாரித் தாயடியார்திடஞ்சேர் மனமென்னும் சீரார் பணித்தொட்டில்படமார் அணிபூட்டிப் பாங்காய் விடுதந்தார்அடல்மிகும் எம்தாயே தாலேலோஅணிச்சிரவை நாயகியே தாலேலோ.