|
நாதாயைவ நம: பதம் பவது ந: சித்ரை: சரித்ர க்ரமை: பூயோபிர் புவநாந்யமுநீ குஹநா கோபாய கோபாயதே காளிந்தீ ரஸிகாய காளியபணி ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா பர்யாய சர்யா: யதே
மிகுதியான ஆச்சர்யமான செயல்முறைகளால் இந்த உலகங்களை காக்கின்றவனாய், யமுனை நதியில் சுவை கண்டவனாய் காளியனென்னும் ஸர்ப்பத்தின் அகன்ற படமாகிய நாட்டிய மண்டபதலத்தின் நடுவில் அச்சமின்றி நடம்புரிதலாகிய பெருஞ்செயல் போன்ற செயல்களை செய்பவனாயுள்ள இடையவேடங்கொண்ட நாதனான கண்ணபிரானுக்கே நம்முடைய நம: எனுஞ்சொல் ஆகக்கடவது
|
|
|