தேவி சர்வ விசித்திர ரத்ன ரசிதா தாக்ஷாயணி சுந்தரி வாமாஸ்வாது பயோதர ப்ரியகரி சௌபாக்ய மஹேஸ்வரி பக்தா பீஷ்டகரி சதாசுபகரி காசீ புராதீச்வரி பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்ப நகரி மாதா அன்னபூர்னேஸ்வரி
பொருள்: பல வகை ரத்தினங்கள் ஜொலிக்கும் ஆபரணங்களை அணிந்து பிரகாசிக்கும் அம்பிகையே; தட்சனின் புதல்வியே; பேரழகு வாய்ந்தவளே; பக்தர்கள் வேண்டும் வரங்களை அளித்து வறுமையைப் போக்கி மங்களங்களைப் பெருகச் செய்யும் கருணை மிக்கவளே; மகேஸ்வரனின் மனைவியே; எப்போதும் மங்களமாக விளங்கும் தாயே; வணக்கம் என் வறுமையைப் போக்கி மங்களங்கள் அருள்வாயாக. இந்தத் துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணி படம் அல்லது சிறிய விக்ரஹத்தின் முன் பாராயணம் செய்தால் அன்னபூரணியின் திருவருளால் செல்வ வளம் பெருகும். சுகமான வாழ்வு என்றென்றும் திகழும். |