|
உலகறிய மலிபுகழ்க்கார்த் திகைமா தத்தி லுரோகிணிநா ளுறந்தைவளம் பதியிற் றோன்றித் தலமளந்த தென்னரங்கர் பாலு லோக சாரங்க மாமுனிதோ டனிலே வந்து பலமறையின் பொருளாற்பாண் பெருமா ளேநீ பாதாதி கேசமதாய்ப் பாடித் தந்த சொலவமல னாதிபிரான் பத்துப் பாட்டுஞ் சோராம லெனக்கருள்செய் துலங்க நீயே.
திருப்பாணாழ்வாரே! உலகிலுள்ளோர் அறிவுபெறுவதற்காக, நிறைந்த புகழையுடைய கார்த்திகை மாதத்தில், ரோஹிணித் திருநக்ஷத்திரத்தில், உறையூர் என்ற வளம் மிக்க திவ்யதேசத்தில் அவதரித்து, திரிவிக்ரமாவதாரத்தில் பூமியை அளந்த அழுகிய ஸ்ரீரங்கநாதன் அருகில் லோகஸாரங்க முனிவரின் தோள்மீது எழுந்தருளி, பல வேதாந்தங்களின் ஸாரமாக ஸ்ரீரங்கநாதனுடைய திருவடி முதல் திருமுடிவரையில் நீ பாடி உலகுக்கு அருளிய பழமொழியாகிய அமலானதிபிரான் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களையும் மறவாமல் விளங்கும்படி நீ எனக்கு அருள்புரிவாயாக. |
|
|