SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றிஓம் அகத்தின் பள்ளி ஐயா போற்றிஓம் அகரம் முதலின் எழுத்தானாய் போற்றிஓம் அகில உலக நாதனே போற்றிஓம் அங்கங்கே சிவமாகி நின்றாய் போற்றிஓம் அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றிஓம் அஞ்சைக் களத்துறை அப்பா போற்றிஓம் அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றிஓம் அட்ட மூர்த்தியே போற்றி போற்றிஓம் அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றிஓம் அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றிஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றிஓம் அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றிஓம் அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றிஓம் அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றிஓம் அடியும் முடியும் இல்லாய் போற்றிஓம் அடியேமை ஆளுடைய அடிகள் போற்றிஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றிஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றிஓம் அடைவே புனல்சூழ் ஐயாற்றாய் போற்றிஓம் அண்டம தாய ஆதியே போற்றிஓம் அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றிஓம் அண்டவர் காணா அரனே போற்றிஓம் அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றிஓம் அண்ணாமலை எம் அண்ணா போற்றிஓம் அண்ணாமலை மேல் அணிமலை போற்றிஓம் அணிநீல கண்டம் உடையாய் போற்றிஓம் அணியாரூர்த் திருமூலட்டானனே போற்றிஓம் அணுவாகி ஆதியாய் நின்றாய் போற்றிஓம் அத்தனே அகில அரசனே போற்றிஓம் அத்தனே இசையிற் பித்தனே போற்றிஓம் அத்தனொடும் அம்மையெனக்கு ஆனோய் போற்றிஓம் அத்திக் கருளிய அரசே போற்றிஓம் அதிகைவீரட்டத் தழகா போற்றிஓம் அதிரா வினைகள் அறுப்பாய் போற்றிஓம் அந்திவாய் வண்ணத்து அழக போற்றிஓம் அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றிஓம் அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றிஓம் அம்பர்க் பெருந்திருக் கோயிலாய் போற்றிஓம் அம்பர்மாகாளத் தரனே போற்றிஓம் அம்மை பயக்கும் அமிர்தே போற்றிஓம் அமரர் பெருமான் போற்றி போற்றிஓம் அமிழ்த கலைநாதா போற்றி போற்றிஓம் அமுதே போற்றி தேனே போற்றிஓம் அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றிஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றிஓம் அரக்கனையும் ஆற்றல் அழித்தாய் போற்றிஓம் அரசிலி நாதா ஐயா போற்றிஓம் அரத்துறை நாதா போற்றி போற்றிஓம் அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றிஓம் அரவம் அரையில் அசைத்தாய் போற்றிஓம் அரிசிற்கரைப்புத் தூரா போற்றிஓம் அரியயற்கு எட்டா நிருத்தா போற்றிஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றிஓம் அருகாக வந்தென்னை ஆள்வோய் போற்றிஓம் அருகி மிளிரும் பொன்னே போற்றிஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றிஓம் அருட்பெருங்கடலே அமலா போற்றிஓம் அருமந்த தேவர்க்கு அரசே போற்றிஓம் அரும்பே போற்றி அலகே போற்றிஓம் அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றிஓம் அருமறைக் கொழுந்தே போற்றி போற்றிஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றிஓம் அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றிஓம் அருளா போற்றி அழகா போற்றிஓம் அரைசே போற்றி அமுதே போற்றிஓம் அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றிஓம் அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றிஓம் அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றிஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றிஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றிஓம் அவளிவள் நல்லூர் அரசே போற்றிஓம் அவிநாசிவ்வளர் அரனே போற்றிஓம் அழகா போற்றி ஆரூரா போற்றிஓம் அழகிய வரதா போற்றி போற்றிஓம் அழுந்தூர் ஆளும் அரசே போற்றிஓம் அளவில் பெருமை உடையாய் போற்றிஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றிஓம் அளியின் நீடு நிதியம் போற்றிஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றிஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றிஓம் அறிவை அறியும் பொருளே போற்றிஓம் அறையணி நல்லூர் அரசே போற்றிஓம் அன்பர் படியும் கடலே போற்றிஓம் அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றிஓம் அன்பிலா லந்துறை அரசே போற்றிஓம் அனலாடி யங்கை மறித்தாய் போற்றிஓம் அன்னியூர் வளர் அரனே போற்றிஓம் ஆக்கும் அழிவும் உடையாய் போற்றிஓம் ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றிஓம் ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றிஓம் ஆகாய வண்ணம் உடையாய் போற்றிஓம் ஆடக மதுரை அரசே போற்றிஓம் ஆடக மதுரை அரசே போற்றிஓம் ஆட்சி உலகை உடையாய் போற்றிஓம் ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றிஓம் ஆடல்மால் யானை உரித்தாய் போற்றிஓம் ஆடானையுறை ஆதீ போற்றிஓம் ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றிஓம் ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றிஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றிஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றிஓம் ஆதி போற்றி அறிவே போற்றிஓம் ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றிஓம் ஆப்பா டிப்பதி அமலா போற்றிஓம் ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றிஓம் ஆரா அமுதம் ஆனாய் போற்றிஓம் ஆரா அன்பின் கனியே போற்றிஓம் ஆரியன் போற்றி தமிழன் போற்றிஓம் ஆரும் இகழப் படாதாய் போற்றிஓம் ஆரூர் அரநெறி அப்பா போற்றிஓம் ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றிஓம் ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றிஓம் ஆலங்காட்டெம் அடிகள் போற்றிஓம் ஆலம் பொழிலுறை அரனே போற்றிஓம் ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றிஓம் ஆலைக் கரும்பின் தெளிவே போற்றிஓம் ஆவடு தண்துறை அமரா போற்றிஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றிஓம் ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றிஓம் ஆழாமே அருளும் அரசே போற்றிஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றிஓம் ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றிஓம் ஆறேறு சென்னிச் சடையாய் போற்றிஓம் ஆனைக் காவுறை ஆதீ போற்றிஓம் இடையாறிடையமர் ஈசா போற்றிஓம் இந்திரத்தை இனிதாக ஈந்தாய் போற்றிஓம் இராமன தீச்சரத் திறைவா போற்றிஓம் இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றிஓம் இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றிஓம் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றிஓம் உசாத்தா னத்தமர் <உறவே போற்றிஓம் உடலாய் உயிராய் உள்ளாய் போற்றிஓம் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றிஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றிஓம் உமையாளை அகத்து அணைத்தாய் போற்றிஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றிஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றிஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றிஓம் உருகாதார் உள்ளத்து நில்லாய் போற்றிஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றிஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றிஓம் உலகம் எல்லாம் உடையாய் போற்றிஓம் உலகுக்கு ஒருவனே போற்றி போற்றிஓம் உலகை நடுங்காமற் காப்பாய் போற்றிஓம் உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றிஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றிஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றிஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றிஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றிஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றிஓம் உள்ளும் அன்பர் மனத்தாய் போற்றிஓம் உறவே போற்றி உயிரே போற்றிஓம் உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பாய் போற்றிஓம் உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றிஓம் ஊராரும் மூவுலகத் துள்ளாய் போற்றிஓம் ஊழித் தீயன்ன வொளியாய் போற்றிஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றிஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓம் எங்கும் உறைந்தருள் இறைவா போற்றிஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றிஓம் எண்ணரும் ஞானத் தின்பமே போற்றிஓம் எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றிஓம் எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றிஓம் எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியாய் போற்றிஓம் எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றிஓம் எதிரா உலகம் அமைப்பாய் போற்றிஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றிஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றிஓம் எப்பொழுதும் என்னுள்ளத் துள்ளாய் போற்றிஓம் எம்மிறை யானே ஏந்தலே போற்றிஓம் எரிசுடர் ஆன இறைவா போற்றிஓம் எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றிஓம் எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றிஓம் எல்லை நிறைந்த குணத்தாய் போற்றிஓம் எறும்பியூர் இருந்த எம்மான் போற்றிஓம் என்றும் அருளே செய்வாய் போற்றிஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றிஓம் என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றிஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றிஓம் ஏகம் பத்துறை எந்தாய் போற்றிஓம் ஏகனே அம்பிகா பதியே போற்றிஓம் ஏய்ந்த வுமைநங்கை பங்க போற்றிஓம் ஏரி நிறைந்தனைய செல்வ போற்றிஓம் ஏலக் குழலி பாக போற்றிஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றிஓம் ஏழூழிக்கு அப்புறம் நின்றாய் போற்றிஓம் ஏறேறிச் செல்லும் இறைவ போற்றிஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றிஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றிஓம் ஐயா போற்றி அணுவே போற்றிஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றிஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றிஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றிஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றிஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றிஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றிஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றிஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றிஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றிஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி