|
ஓம் ருத்ரம் பஸுபதிம் ஸ்தானும் நீலகண்டம் உமாபதிம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி கால கண்டம் காலமூர்த்திம் காலஜ்ஞம் காலநாஸனம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி
பொருள்: பாவம் செய்பவர்களுக்கு துக்கத்தைக் கொடுத்து வருந்தச் செய்கிறவரே, விவேகமற்றவர்களுக்கு விவேகத்தைத் தருபவரே, புகழ் மங்காதவரே மகாதேவா நமஸ்காரம். கறுத்த கழுத்தைக் கொண்டவரே, பார்வதியின் கணவரே மகாதேவா தலை தாழ்த்திய நமஸ்காரம். உம்மை நம்பும் என்னை, யமன் முதலான எந்த பயம்தான் அணுக முடியும்? விஷத்தைக் கண்டத்தில் கொண்டவரே, கால வடிவினரே, காலத்தை நிர்ணயிப்பவரே... யமனை அழித்தவரே மகாதேவா நமஸ்காரம்.
இந்த துதியை திங்கட்கிழமை தோறும் பாராயணம் செய்து வந்தால் யம பயம் அகலும். துர்க்கனவு தோஷங்கள் விலகும். சத்ரு உபாதைகள் தொலையும். |
|
|