|
பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் அமைந்து அருள் பாலிக்கின்றன. அவை: 1 சோமநாத லிங்கம்- சோமநாதம், குஜராத் மகாராஷ்டிரம், 2. மல்லிகார்ஜுன லிங்கம் - ஸ்ரீசைலம், ஆந்திரா, 3. மாகாள லிங்கம் - உஜ்ஜைனி, மத்திய பிரதேசம், 4. ஓம்கார லிங்கம் - ஓம்காரம், மத்திய பிரதேசம், 5. வைத்தியநாத லிங்கம் - வைத்யநாதம், மகாராஷ்டிரம், 6. பீமசங்கர லிங்கம் - பீமசங்கரம் (டாகினி), மகாராஷ்டிரம் 7. ராமலிங்கம் - ராமேஸ்வரம், தமிழ்நாடு, 8. விஸ்வேஸ்வர லிங்கம் - காசி உத்தரபிரதேசம், 9. த்ரயம்பக லிங்கம் - த்ரயம் பகம், நாசிக், மகாராஷ்டிரா 10. கேதார லிங்கம் - கேதாரம், உத்தர பிரதேசம், 11. குஸ்மேஸ லிங்கம் - குஸ்மேஸம், மகாராஷ்டிரம், 12. நாகேஸ்வர லிங்கம் - நாகேசம், ஜாம்நகர், குஜராத் இந்த பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் போற்றி வழிபடும்விதமாக, ஆதிசங்கரர் இயற்றிய கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்து வர பாபங்கள் விலகும்.
சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம் உஜ்ஜய்ன்யாம் மஹாகாலம் ஓங்காரம் அமலேச்வரம் பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம் சேதுபந்தே து இராமேசம் நாகேசம் தாருகாவனே வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே ஹிமாலயே து கேதாரம் குஷ்மேசம் ச சிவாலயே ஏதானி ஜ்யோதிர்லிங்கானி சாயம் ப்ராத; படே நர: சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி ஏதேஷாம் தர்ஷனாதேவ பாதகம் நைவ திஷ்டதி கர்மக்ஷயோ, பவேத் தஸ்ய யஸ்ய துஷ்டோ மகேச்வர: |
|
|