|
துன்பங்கள் தீர்க்கும் துர்கா சந்திர கலா ஸ்துதி!
காந்தார மத்ய த்ருடலக்ன தயாவஸந்நா; மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா; யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ
கருத்து: நடுக்காட்டில் அகப்பட்டுக்கொண்டு வழி தெரியாமல் தவிக்கின்றவர்களும், கடல் நீரில் மூழ்கி வெளிவர முடியாமல் திணறுகின்றவர்களும், எதிரிகளால் சூழப்பட்டவர்களும், எந்த அம்பாளின் திருவடிகளைச் சரணடைந்து அந்த ஆபத்துகளில் இருந்து விடுபடுகிறார்களோ... உலகத்தைப் படைத்த அந்த அம்பிகை எப்போதும் என் மனதில் இருக்கவேண்டும்.
நிலத்திலும் நீரிலும் நமக்கு ஏற்படக்கூடிய துயரங்களிலிருந்து விடுவித்து, அருள்மழை பொழிபவள் அம்பாள். அப்பய்ய தீட்சிதர் அருளிய துர்கா சந்திர கலா ஸ்துதிப் பாடல் இது. இந்த நவராத்திரி புண்ணிய காலத்தில் ஒவ்வொரு நாளும் பூஜையின்போது இந்தப் பாடலைப் பாடி அம்பாளை வழிபட்டால், துன்பங்கள், சத்ருபயம், தீவினைகள் ஆகிய அனைத்தும் விலகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
|
|
|