|
இந்திரன் வடிவாய் வந்தவள் எவளோ இந்திராக்ஷி என்போம் அவளை அனலாய் வந்தவள் அபயம் தந்தவள் புனலாய் வருவாள் காலாய் ஆனவள்
விண்ணாய் நிற்பாள் மண்ணாய் இருப்பாள் மனோரிதமே செய்பவள் அவளே பகைவர் தன்னைப் பாரில் விரட்டிப் பண்பைப் புகுத்திட வந்தவள் அவளே
ஆயிரம் கண்கள் பாங்குறக் கொண்டவள் பாயும் புலியின் தோலைத் தரித்தவள் கொஞ்சம் சதங்கை குலுங்கக் குலுங்கத் தத்தோம் தக்தோம் வந்தோம் வந்தோம்
தந்தோம் வரமே தளரா உள்ளோடு உந்தன் செயலைச் செய்திடு நன்றே என்றே சொல்லி வந்தால் இன்றே ஸித்தியைத் தந்திடும் தெய்வத் திருமகள்
துர்கை அவளே! சங்கரி அவளே சாகம் பரியாய்ச் சார்ந்திடும் பவானி சோகம் துடைக்கும் இந்திரை அவளே இந்திராக்ஷி அன்னை அவளே
ஸுந்தரி அவளே சுருதியும் அவளே தண்டினி அவளே கட்கினி அவளே அவள் தாள் பணிவோம் அருளைப் பெறுவோம் அவளைத் துதித்தால் இடரும் விலகும்
பகைமை தொலையும் சுகமும் பெருகும் பற்பல கரகங்கள் படுத்தும் பாடும் பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களின் ஒரு மித்த சக்தியைக் கொண்டு தோன்றிய இந்திராக்ஷி தெய்வத்திற்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், இந்திராக்ஷி தேவியை மனதில் நினைத்து 108 முறை துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். துர்மரணங்கள் ஏற்படாமல் காக்கும். கொடிய வியாதிகள் பீடிக்காமல் தடுக்கும். மிகுதியான செல்வப் சேர்க்கையையும், வாழ்வில் நாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெறலாம்.
|
|
|