SS தேவி கருமாரி அம்மன் வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தேவி கருமாரி அம்மன் வழிபாடு
தேவி கருமாரி அம்மன் வழிபாடு
தேவி கருமாரி அம்மன் வழிபாடு

கற்பூர நாயகியே கனக வல்லி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேத வல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே. (கற்பூர)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி
கரம் எரித்தோன் புறம்  இருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
கார்இருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமை சிறியேனை நீ ஆதரி (கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே
எந்தன் அன்னையவள் நீ இருக்க
உலகில் மற்ற அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்து விட ஓடிவாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவளின் குரல் கேட்டு உன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு அம்மா(கற்பூர)

கண் இரண்டும் உன் உருவே காண வேண்டும்
கால் இரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்அமைக்கும் நா உனையே பாட வேண்டும்
பக்தியோடு கைஉனையே கூட வேண்டும்
எண்ணம் எல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாகவேண்டும்
மண்அளக்கும் சமயபுர மாரியம்மா
மகனுடைய குறைகளையும் தீருமம்மா (கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றம் எல்லாம் நீடூழி வாழவேண்டும்
ஜோதியிலே நீஇருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா (கற்பூர)

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமை இன்றிக்காவல் உண்டோ?
கன்றுக்குப் பசுவின்றிச் சொந்தம் உண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும் நான்உந்தன் பிள்ளையன்றோ? (கற்பூர)

அன்புக்கே நான் அடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என்காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என்நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நான் என்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவைஎல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழவேண்டும் (கற்பூர)

கும்பிடவோ கை இரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நா ஒன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்அதனில் சக்தி இல்லை
நடந்திடவோ கால் இரண்டில் ஆகவில்லை
செம்பவள வாய் அழகி உன் எழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை (கற்பூர)

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்
கருவாகி உயிராகி <உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை (கற்பூர)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar