Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உறவு என்றொரு சொல் இருந்தால்..
 
பக்தி கதைகள்
உறவு என்றொரு சொல் இருந்தால்..

உறவுகள் நம்மை விட்டுப் பிரிந்தால் நமக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். நீண்ட நாள் வளர்த்த மகன், நல்லவன் என்று பெயர் எடுத்தவன் இறந்து போகிறான். ஐயோ மகனே! என தாய் அழுகிறாள். அழ மட்டும் தான் அவளால் முடிகிறது. அவனோடு இறுதி வரை செல்ல முடியவில்லை. நேற்று வரை தனக்கு பட்டும், நகைகளுமாக அள்ளித்தந்த கணவன், கண்ணுக்கும் மேலாகப் பாதுகாத்தவன் போய்விட்டான். அழுதாள், அழுதாள், அழுதாள். துக்கம் தாளாமல் இதயம் வெடித்து அவளும் இறந்து போனாள். இருவர் உடலையும் ஒன்றாக எரித்தனர். ஆனால், அவனது ஆவி அவளையோ, அவளது ஆவி அவனையோ பார்க்க முடியவில்லை. இருவரும் தங்கள் பழைய நினைவுகளை மறந்து எங்கோ போய்விட்டனர். வாழ்க்கையின் யதார்த்த நிலை இப்படியாக இருக்கும் போது, கனத்த இதயத்தை நாம் கடவுளிடம் யாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஊரில் ஒரு சிவபக்தர் இருந்தார். அவருக்கு ஒரு மகன். பேரழகன். நல்லவன் என ஊரில் பெயர் எடுத்தவன். கடவுளின் மீது பற்றுக்கொண்டவன். கோயிலுக்குப் போய் தேவாரம், திருவாசகத்தை மனமுருகிப் படிப்பான். அதுகேட்டு பக்தர்கள் மெய் உருகுவர். தந்தைக்கு மகனைப் பற்றி மிகவும் பெருமை. ஒருநாள் அந்த மகன் கடவுளுக்கு பூப்பறிக்க தோட்டத்துக்குள் போனான். அங்கிருந்த பாம்பு அவனைத் தீண்டவே இறந்து போனான். தாய் கதறித் துடித்தாள். ஊரே கூடி அழுதது.

காலமெல்லாம் உன்னையே புகழ்ந்து பாடிய உன் பக்தனுக்கா இந்தக்கதி! அடேய் சிவனே!  உன் கோயிலுக்கு வருவதில் அர்த்தமே இல்லை, என கடவுளைத் திட்டித்தீர்த்தது. எல்லாரும் வருத்தப்பட்டார்கள். ஆனால், பையனைப் பெற்றவர் மட்டும் அழவில்லை. வருத்தத்தின் சாயல் லேசாக இருந்தது. அதுவும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விட்டது. ஊர் மக்கள் அவரிடம், ஐயா! உம் மகன் இறந்து விட்டான். அந்த நல்லவனின் பிரிவால், ரத்த சம்பந்தமில்லாத எங்களுக்கே துக்கம் தாங்க முடியவில்லை. நீர் கல் போல் அமர்ந்திருக்கிறீரே! என்றனர். அவர் சொன்னார். தோட்டத்தில் உள்ள பூக்களை நீங்கள் பறிக்கிறீர்கள். அதை மாலையாகத் தொடுக்கிறீர்கள். கடவுளுக்கு அணிவித்தீர்கள். அதன் பிறகு அது கடவுளுக்கே சொந்தமென நினைத்து வந்து விட்டீர்கள். பூவின் மீது உங்களுக்கு சொந்தம் இருந்ததா? அந்த மாலை மறுநாள் வாடிவிட்டது. அதை என்ன செய்தீர்கள்? தூர எறிந்து விட்டீர்கள். இந்தப் பூக்களைத் தந்தவன் யார்? கடவுள்...அதை மாலையாக்கும் வல்லமையைத் தந்தவன் யார்? கடவுள்...அதை வாடச்செய்தவன் யார்? கடவுள். ஆக! இதில் எதுவுமே நம் செயல் இல்லை. கடவுளால் தரப்பட்டது, கடவுளையே சரணடைந்தது. என் மகனும் அப்படித்தான். அவன் கடவுளால் எனக்கு தரப்பட்ட ஒரு பொருள். அதை நான் நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். அந்தப் பொருளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தேன். இறைவன் அதை ஏனோ திரும்பப் பெற்றுக்கொண்டான். கடன் தந்தவன் அதை திரும்ப வாங்கிக் கொண்டான். அதில் எனக்கென்ன நஷ்டம்? அது மட்டுமல்ல, அவன் தந்த பொருளை நல்ல நிலையில் ஒப்படைத்ததில் இன்னும் மகிழ்ச்சி.

இந்த மகன் பிறந்ததும், இவன் என்னுடையவன் என்று மகிழ்ந்திருந்தேன். அந்த எண்ணம் எனக்குள் வலுத்து வந்தது. ஆனால், அது எனக்குள் ஆழமாக பதிவதற்குள் கடவுள் அதை எடுத்துக் கொண்டார். அந்தப் பொருளை இறைவன் என்னிடம் ஒப்படைத்திருந்த காலத்தில், அவனது பொருளை நான் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம். அந்தப் பொருளுக்கு நான் தீங்கிழைத்திருக்கலாம். ஆனாலும், கடவுள் அதையெல்லாம் மன்னித்து, என்னிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டானே! அதனால் நான் நிம்மதியடைகிறேன், என்றார். இளமையிலோ முதுமையிலோ உறவுகளை தவறவிட்டவர்கள் ஆறுதல் கொள்ளுங்கள். இறைவன் படைத்த பொருள் இறைவனை அடைகிறது. இதுதான் உலக நியதி. இதை யார் நினைத்தாலும் தடுக்கவும் முடியாது. தடுக்க முடியாத ஒன்றைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar