Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லதைப் பாருங்கள்!
 
பக்தி கதைகள்
நல்லதைப் பாருங்கள்!

சித்தையா ஒரு கிராமவாசி. மூடை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் சொற்ப அளவே! சித்தையாவின் மனைவி சித்தம்மா சிவபக்தை. அவள், தினமும் சிவாலயம் சென்று வணங்கி வருவாள். நெற்றி நிறைய நீறு பூசி, அம்பிகையின் குங்குமத் திலகமிட்டு, அவள் தெருவில் நடந்தால் காண்பவர்கள் கையெடுத்து வணங்கி விட்டு போவார்கள். ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். நல்ல முகக்களை உடையவள். தன் கணவரிடம், ""என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி குளிச்சு திருநீறாவது பூசிட்டு கிளம்புங்களேன், என்பாள். சித்தையா கேட்க மாட்டார். ""அடி போடி பைத்தியமே! நீ வேற! மனுஷன் காலையில் அஞ்சு மணிக்கே மண்டிக்கு போனா தான் மூடை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும். தாமதமா போனா இருக்கிற ஜீவனமும் போயிடுமே! என்பார்.இதன் பின் அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார்.

அவர் திருநீறு அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சித்தம்மா, கணவனிடம் இன்னும் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.""நீங்க! திருநீறு கூட பூச வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில் திருநீறு பூசிய யாராவது ஒருவர் முகத்திலாவது விழிச்சிட்டு போங்க, என்றாள். சித்தையா ஒப்புக்கொண்டதுடன் மனைவிக்கு இதுபற்றி சத்தியமும் செய்து கொடுத்தார். அவ்வூரில் சிதம்பரம் என்ற விவசாயி தினமும் காலையில் நாலு மணிக்கே நீராடி நெற்றி நிறைய தீருநீறணிந்து அதிகாலையே ஏர் சுமந்து வயலுக்கு செல்வதை சித்தையா அடிக்கடி பார்த்துள்ளார். அவர் வரும்போது, சித்தையா அவர் முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு கிளம்புவார். ஒருநாள் காலையில் சிதம்பரத்தைக் காணவில்லை. சித்தையா திண்டாடி விட்டார். தாமதமா போனா வேலை கிடைக்காதே...என்ன செய்றது. ஒருவேளை சிதம்பரம் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.

அன்று திருவாதிரை என்பதால் அதிகாலையே சிதம்பரம், சிவாலய தரிசனம் முடித்து விட்டு வயலுக்கு போய் ஏரைப் பிடித்தார். ஏதோ ஒன்று தட்டவே, அவ்விடத்தை தோண்டி உள்ளிருந்து ஒரு இரண்டு புதையல் பாத்திரத்தை எடுக்கவும், சித்தையா அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது. தான் புதையல் எடுத்ததை சித்தையா கவனித்து விட்டதைக் கண்ட, சிதம்பரம் சித்தையாவிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து சமஅளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார். சித்தையா அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. நீறு பூசிய உமது நெற்றியை பார்க்கவே வந்தேன். மேலும் புதையல் அரசாங்கச் சொத்து. இதை மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம், என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர். அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், நடந்தது கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் திருநீறு அணிய உத்தரவிட்டான். அவர்களின் வறுமை நீங்கியது. நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும்.

நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட வாழ்வின் நிலை உயர்ந்து விடும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar