Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுகமான நேரம்
 
பக்தி கதைகள்
சுகமான நேரம்

மகாபலி மன்னன் புராணம் தெரிந்த அனைவருக்கும் அறிமுகமானவன். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து அவனை ஆட்கொண்டார். முற்பிறவியில் இவன் மிகவும் கெட்டவனாக இருந்தான். எந்த நேரமும் விலைமாதரின் வீட்டிலேயே வீழ்ந்து கிடந்தான். அவர்களுக்கு பொருளை அள்ளிக் கொடுப்பதற்காக சூதாடச் செல்வான். சூதாட்டத்தில் வல்லவனான இவனை வெல்வார் யாருமில்லை. எனவே, பெரும் பொருளுக்கு அதிபதியானான். ஒருமுறை பேரழகி ஒருத்தியை அடைய விரும்பினான். அவளோ அவனிடமுள்ள பணம் முழுவதையும் தனக்கு கூலியாகக் கேட்டாள். அவனும் அவளை அடையும் ஆசையில், பணத்துடன் சென்றான். வழியில் ஓரிடத்தில் மயக்கமாக வந்தது. அப்படியே விழுந்து விட்டான். அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சற்றுநேரம் கழித்து கண்விழித்த அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. பணம் முழுவதையும் சிவலிங்கத்தின் முன் கொட்டிவிட்டு சென்றான். சிறிதுகாலம் பட்டினியாய் கிடந்த அவன் இறந்து போனான். எமதூதர்கள் அவனை இழுத்துச் சென்றனர். சித்திரகுப்தன் அவன் பாவ புண்ணிய கணக்கை வாசித்தார். எமதர்மராஜா அதைக் கேட்டு விட்டு, அடேய் கொடுமைக்காரா, சூதாடியும், பரத்தையர் வீட்டுக்கு சென்று இன்பமாகவும் இருந்த நீ, நரகத்திற்கு செல், என ஆணையிட்டார். நடுங்கிப் போன அவன், தர்மராஜா, நன்றாகப் பாருங்கள். நான் ஒரு நன்மை கூட செய்யவில்லையா? என்றான். கணக்கில் ஒரு இடத்தில் மட்டும், அவன் சிவலிங்கத்தின் முன்பு பணத்தைக் கொட்டியதையும், அதைக் கண்டெடுத்த அர்ச்சகர் ஒருவர், லிங்கத்துக்கு கோயில் கட்டியதும் தெரிந்தது.

அநியாய வழியில் வந்த பணமாயினும், பொதுக்காரியத்துக்கு பயன்படுத்திய காரணத்துக்காக, அவனுக்கு மூன்று நாழிகை (72 நிமிடம்) மட்டும் இந்திரலோகத்தின் அரசு தலைமைப் பதவியை அனுபவிக்க எமதர்மன் அனுமதித்தார். சூதாடியும் இந்திரலோக பதவியை சுகமாக வகித்தான். இந்திரன் ஒன்றரை மணிநேரம் தானே என ஒதுங்கிக் கொண்டான். இந்நேரத்தில் அகத்தியரை அழைத்த சூதாடி, அவருக்கு இந்திரனின் ஐராவதம் யானையை பரிசாகக் கொடுத்தான். விஸ்வாமித்திரருக்கு உச்சைச்ரவா என்ற குதிரையையும், காமதேனு பசுவை வசிஷ்டருக்கும் கொடுத்தான். கற்பக விருட்ச மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும், சிந்தாமணி என்ற ரத்தினத்தை காலவ முனிவருக்கும் தானமாக வழங்கினான். மூன்று நாழிகை கடந்ததும் அவனாகவே நரகத்தை நோக்கி நடந்தான். இதற்குள் தேவேந்திரன் எமனிடம், டேய் எமா! என்ன காரியம் செய்தாய்? சூதாடியை அரசனாக்கினாய். அவன் எல்லாவற்றையும் தானம் கொடுத்து விட்டான். இனி நான் எப்படி அரசாள்வது? என்றான். எமன் அவனிடம், இந்திரரே! தாங்கள் சொல்வது சரியல்ல.

அரசாட்சியில் இருப்பவன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் தகுந்தவர்களுக்கு கொடுப்பதே முறையானது. நீங்கள் அதனை இத்தனை நாளும் செய்யவில்லை. ஆனால், இவன் தனக்கு ஆட்சி கிடைத்த குறைந்த நேரத்தில் பலரது மனம் மகிழும்படி செய்தான். அந்த மகரிஷிகள் மக்களுக்கு அதன் மூலம் பலன் கொடுப்பார்கள். உங்களுக்கு இப்படி ஒரு மனம் என்றாவது வந்ததா? என்றான். இந்திரன் தலை குனிந்தான். இந்திரலோகத்தில் செய்த தானத்துக்காக சூதாடியின் நரக வாழ்க்கை ரத்து செய்யப்பட்டது. அவன் உடனடியாக மறுபிறப்பெடுத்தான். முற்பிறவியில் சூதாடியாக இருந்த குற்றத்துக்காக அசுரகுலத்திலும், தானம் செய்த காரணத்துக்காக மகாபலி என்ற பெயரில் கொடையாளியாகவும் பிறந்தான். முற்பிறப்பில் சிவத்தொண்டு செய்த அவன் இப்பிறப்பில் திருமாலின் திருவடி தரிசனம் கண்டு வைகுண்டத்தை அடைந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar