Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீயவர் இதயம் தூயதாகட்டும்
 
பக்தி கதைகள்
தீயவர் இதயம் தூயதாகட்டும்

ஒரு பெரியவர் அடர்ந்த காடு வழியே சென்றுகொண்டிருந்தார். இரண்டு திருடர்கள் அவரிடம் பொருள் இருக்குமென கருதி, அவரது கைகளை வெட்டினர். ஒன்றுமில்லையென தெரிந்ததும், அவரைத் தூக்கி ஒரு கிணற்றில் வீசினர். பின்னர் இருவரும் சென்றுவிட்டனர். அவ்வழியாக ஒருவன் தண்ணீர் குடிக்க கிணற்றருகே வந்தான். கிணற்றுக்குள் கிடக்கும் பெரியவரை காப்பாற்றி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றான். குணமானதும் அந்த பெரியவர் அவ்வூர் அரசனை தேடிச்சென்றார். அவரது குணநலனைக் கண்ட அரசன், தான, தர்மங்கள் வழங்கும் இலாகா பொறுப்பை ஒப்படைத்து, நல்ல முறையில் நடத்திவரும்படி சொன்னான். எனவே பெரியவரின் புகழ் எங்கும் பரவியது. ஒருநாள் பெரியவரின் கைகளை வெட்டி வீழ்த்திய இரண்டு திருடர்களும் தானம் பெற வந்தார்கள். பெரியவரைக் கண்டு அதிர்ந்தார்கள். ஆனால், பெரியவரோ, தனது பணியாளர்களிடம் அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். தங்களுக்கு தர்மம் தருவதுபோல் நடித்து, பெரியவர் ஏதாவது செய்துவிடுவாரோ என்ற பயத்துடனனேயே அரண்மனையில் அவர்கள் இருந்தனர்.

சிலநாட்கள் கழித்து அங்கிருந்து புறப்பட, பெரியவரிடம் அனுமதி கேட்டனர். பெரியவர் அவர்களுக்கு ஒரு வண்டிநிறைய பொருட்களை கொடுத்து, பாதுகாப்புக்கு வீரர்களையும் அனுப்பினார். இந்த அளவிற்கு இதற்கு முன்பு அங்கு வந்த யாரும் தானம் பெறவில்லை. திருடர்களுடன் சென்ற வீரர்கள் அவர்களிடம், உங்களுக்கு மட்டும் பெரியவர் இந்த அளவிற்கு தான, தர்மம் செய்ய காரணம் என்ன ஏதாவது விசேஷம் உள்ளதா?, எனக்கேட்டனர். அதற்கு அந்த திருடர்கள், எங்களுக்கு அவரை முன்பே தெரியும். அவருக்கு நாங்கள் இதற்கு முன் மிகுந்த நன்மை செய்திருக்கிறோம், என பதிலளித்தனர். இந்த பதிலைக்கேட்ட பூமிமாதாவிற்கு பொறுக்கவில்லை. பூமி வெடித்தது. திருடர்கள் இருவரும் பூமிக்குள் புதைந்து போனார்கள். இந்த தகவல் பாதுகாவலர்கள் மூலமாக பெரியவரை எட்டியது. அவர் வருத்தப்பட்டார். கடுமையான விரதமிருந்து ராமபிரானை வழிபட்டு, ராமபிரானே நீர் உமது எதிரியான ராவணனுக்கு மோட்சத்தை அருளியிருக்கிறீர். அதேநேரம் எனது பகைவருக்கு ஏன் நீர் முக்தியை கொடுக்கக்கூடாது?, என வேண்டினார். கருணை கொண்ட ராமன் அவர்கள் இருவரையும் பூமிக்கடியில் இருந்து வெளியே கொண்டு வந்து முக்தி கொடுத்தார்.

ந்தகதையிலிருந்து இதுதான். தீமையை விளைவிக்கின்றவனுக்கும் நன்மை செய்யுங்கள். அவனிடம் அதிகமான அன்பு பூண்டு, ஆசி வழங்கி, அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பழிக்குபழி வாங்க எண்ணாதீர்கள். கோபத்திற்கு பதிலாக நீங்களும் கோபத்தைக் காட்டாதீர்கள். ஒருவருக்கும் துன்பத்தை கொடுக்காதீர்கள். தீயவர்களின் இதயத்தை தூய்மையாக்க கடவுளிடம் பிரார்த்தியுங்கள். பகைமை, பொறாமை, கோபம் முதலியவை இல்லாமல் இருக்க மேற்கண்ட போதனையை நினைவில் கொள்ளுங்கள். சகிப்புத்தன்மை, பொறுமை, கருணை முதலிய உயர் பண்புகளை வளருங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar