Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஏழு கடல் வந்தது
 
பக்தி கதைகள்
ஏழு கடல் வந்தது

ஒருமுறை கவுதம மாமுனிவர் மதுரை மாநகரம் வந்து சோமசுந்தர பாண்டியன் என்ற பெயரில் இவ்வூரை ஆண்ட, பரமேஸ்வரனை சந்தித்து உரையாடினார். பரமனாரிடம் விடைபெற்று திரும்பும்போது, மரியாதை நிமித்தம் மீனாட்சியின் தாயார் காஞ்சனையைச் சந்தித்து சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார். காஞ்சனை முனிவரிடம், பெருமானே! என்ன நடைமுறையைக் கையாண்டால் நீங்காத பிறவிநோய் அகலும்? என்று கேட்டாள். கவுதமர், பிறந்து, பிறந்து அலுக்கும் பிறவிநோயை அகற்றிக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது தூய நீராடல் ஆகும். புனிதமான நதிநீரில் நீராடும் வாய்ப்பு கிடைக்குமாயின் அது மிகவும் சிறப்பாகும். இதைவிடச் சிறப்பு ஆறுகள் சென்று கலக்கும் கடலில் நீராடுவது ஆகும் என்று கூறினார். காஞ்சனைக்கு உடனே கடலில் நீராட வேண்டுமென்ற எண்ணம் வந்துவிட்டது.

கடல் உள்ள ஊர் நோக்கி புறப்பட ஆயத்தமானாள். விஷயமறிந்த பரமேஸ்வரன் மீனாட்சியை அழைத்து, உன்னுடைய அன்னையார் கடலாட விருப்பம் கொண்டு கடல் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டதாக அறிந்தேன். அவர் ஏன் கடலைத் தேடிப் போகவேண்டும்! ஒரு கடல் என்ன, ஏழு கடல்கள் அவரை நாடி வருமாறு செய்கின்றேன் என்றார். பின்னர் பரம்பொருளார், ஏழு கடலும் வருக என மனதால் நினைத்தார். உடனே மதுரையின் கீழ்த்திசையிலே ஏழு கடல்களும் எழுவகை நிறத்தோடு வந்து ஒரு குளமாக தேங்கி நின்றன. சுறா மீன்கள் உலாவின. அதில் நீராடுமாறு காஞ்சனையை வேண்டிக் கொண்டார். காஞ்சனை வேதியர்களை நோக்கி, கடலாட முறைகள் ஏதேனும் உள்ளனவா? எனக் கேட்டார். கடலாடும்போது தனியாக நீராடுவது முறையன்று. கணவன் கரம் பிடித்தவாறு கடலாடலாம். இல்லையென்றால் மூத்த மகன் கரம் பற்றி கடலாடலாம். அதுவும் இல்லையென்றால் பசுவின் கன்றினுடைய வாலைப் பற்றி நீராடலாம் என்றாலும் முன்னால் சொன்ன இரு வழிகளே உத்தமம் என்றனர். காஞ்சனைக்கு கணவர் இல்லை. மூத்த ஆண் மகனும் இல்லை. ஆக உத்தமமான முறையில் நீராட எனக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பசுங்கன்றின் வாலைப்பற்றி நீராட வேண்டியதுதான் போலும் என்று வேதனையோடு எண்ணினார் காஞ்சனை அம்மையார்.

பரம்பொருளாம் பரமன் காஞ்சனையின் உள்ளக்குமுறலை அறிந்துகொண்டார். அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. உடனே செஞ்சுடரோன் தமது மனதால் மாமனார் மலையத்துவசனை நினைத்தார். அடுத்தகணம் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து பரமனை வணங்கினான் மலையத்துவசன். கணவரைக் கண்ணாரக்கண்ட காஞ்சனை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பொங்கிய பேரானந்தத்துடன் அவனை வணங்கினாள். பின்னர் இருவரும் அன்புப் பெருமிதத்துடன் ஒருவர் கரத்தை மற்றவர் பற்றியவாறு கடலாடினர். கடலாடிக் கரையேறிய உடனே பரமனின் அருட்கருணையால் இருவரும் மானிட உருமாறி தெய்வ உடம்பு பெற்றனர். அடுத்த நொடி, விண்ணிலிருந்து தெய்வ விமானமொன்று வந்து இறங்கியது. மலையத்துவசனும், காஞ்சனையும் பரமனைப் பணிந்து வணங்கியவாறு விமானத்தில் ஏறி விண்ணுலகம் சென்றனர். தாய்க்கு கிடைத்த பெரும்பேறு கண்டு, மீனாட்சி பிராட்டியார் மகிழ்ச்சியுடன் பரமனைப் பணிந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar