Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அம்மாடி இதுதான் காதலா!
 
பக்தி கதைகள்
அம்மாடி இதுதான் காதலா!

தருமதத்தன் காவிரிபூம்பட்டினத்தில் பிறந்தவன். இவனது தாய் தந்தை இளமையிலேயே இறந்து விட்டனர். தாய்மாமன் வீட்டில் வசித்து வந்தான். தாய்மாமனாருக்கு குழந்தைகள் இல்லை என்பதால் தருமதத்தன் செல்லப்பிள்ளையாக வளர்ந்தான். இருப்பினும் தாய்மாமனாருக்கும், மாமிக்கும் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவர்கள் கோயில் கோயிலாக அலைந்தனர். இதனாலும், முன்னோர் செய்த தவப்பலனாலும் மாமி கர்ப்பமானாள். அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு விசாகை என பெயர் சூட்டினர். தங்களுக்கு குழந்தை பிறந்தாலும் கூட, தருமதத்தன் மீது கொண்ட பாசத்தில் துளியளவும் மாமனாருக்கும், மாமிக்கும் குறையவில்லை. இரு குழந்தைகளுக்கும் சம அந்தஸ்தே கொடுத்து வளர்த்து வந்தனர்.விசாகையும், தருமதத்தனும் ஒரே பள்ளியில் படித்தனர். ஒன்றாக சேர்ந்து விளையாடுவர். வீட்டுப்பாடங்களிலும், வேலைகளிலும் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வர். குழந்தைகளின் மழலையிலும், அவர்கள் விளையாடும் அழகிலும் மெய்மறந்து போவார்கள் மாமாவும், மாமியும். காலம் வேகமாகக் கடந்தது.

தருமதத்தன் எழில் பொங்கும் இளைஞனானான். உலகத்து அழகெலாம் ஓரிடத்தில் கொட்டியது போல பருவ மங்கையானாள் விசாகை. இளம்பருவம்...அதிலும் அழகுப் பெண்மணி...இளமை முதலே களங்கமற்ற அன்புடன் பழகிய உள்ளம்...மாமன் மகள் இது போதாதா? காதல் என்ற மலர் மலர்வதற்கு! தருமதத்தன் தன் முறைப்பெண் விசாகை மீது காதல் வசப்பட்டான். விசாகை மட்டும் என்னவாம்? கட்டிளங்காளை...புத்திசாலி...படிப்பை முடித்ததும் தன் தந்தையோடு இணைந்து வியாபாரம் செய்து லாபம் ஈட்டிய பாங்கு, தைரியசாலி, எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொந்த அத்தை மகன்...இத்தனையும் சேர்ந்து விசாகையையும் காதல் நோயில் தள்ளியது. இருவரும் ஒரே வீட்டில் வளர்பவர்கள் அல்லவா? காதலை வளர்க்க யார் தயவு வேண்டும்? காதலர்கள் தனிமையில் பேசி மகிழ்வார்கள். மாமனும், மாமியும் வெளியே போய்விட்டால் காதல் மொழிக்கு பஞ்சமே இருக்காது. ஆனாலும், காதல் என்ற சொல்லின் வரம்பை இவர்கள் மீறியதே இல்லை. உடல் ரீதியான அன்பாக இல்லாமல், உள்ளத்து ரீதியான அன்பை வளர்த்துக் கொண்டனர். 

திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கமாலா போய் விடுவார்கள்? காலம் வரட்டுமே, என அவர்கள் பேசிக் கொள்வார்கள்.ஆனால், ஊரார் கண்களில் இது வேறு விதமாகப்பட்டது. மாமனும், மாமியும் வெளியே போய் விட்டால், இந்த தருமதத்தனுக்கு வீட்டுக்குள் என்ன வேலை? என்று ஒருசாரார் பேசினர்.அந்த விசாகை வெட்கம் கெட்டவள். தாய், தந்தை வெளியே போனதும், தருமதத்ததுடன் கூடி குலாவுகிறாள். என்னதான் அத்தை மகன் என்றாலும், திருமணம் நடப்பதற்கு முன் அப்படி என்ன அவளுக்கு அவசரம்? இப்படி ஒரு சாரார் பேச, விஷயம் வீட்டுக்கும் தெரிந்து விட்டது. விசாகை மிகவும வருத்தப்பட்டாள்.அவள் மனவேதனையுடன் அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்றாள். கண்ணா! கார்முகில் வண்ணனே! நீ ராதையுடன் எத்தனை முறை கூடி குலவியிருக்கிறாய். உன் காதலில் இந்த உலகம் களங்கம் காணவில்லையே! ஆனால், என் காதலை களங்கப்படுத்தி விட்டதே இவ்வுலகம். என் காதல் உண்மையானால், இந்த களங்கத்தைப் போக்கு. வா, வெளியே. ஊரார் முன் சென்று நான் களங்கமற்றவள் என்று சொல். இல்லாவிட்டால் இங்கேயே உயிர் விடுவேன், எனக் கதறினாள். கார்முகிலோன் அங்கே பிரசன்னமானான்.வா சகோதரி...ஊருக்குள் செல்வோம், என அழைத்தார். கண்ணனுடன் விசாகை கோயிலில் இருந்து வெளிப்பட்டது கண்டு ஊர் திகைத்தனர்.மக்களே! முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் காதலிப்பதைக் கண்டு பொறாமல் இப்படி களங்கம் பேசியது சரியில்லை.

இவள் என் பக்தை. இவளுக்கு ஒரு களங்கம் என்றால், அது எனக்கு வந்தது போல. இவள் களங்கமற்றவள், என கூறி மறைந்தார். அதன் பிறகு விசாகையிடம் ஊரார் மன்னிப்பு கேட்டனர். கிருஷ்ண தரிசனத்தையே தங்களுக்கு கிடைக்கச் செய்த அந்த மங்கையர் திலகத்தை பாராட்டினர். அவளையும் தெய்வாம்சமாகவே கருதி மரியாதை அளித்தனர். தெய்வமே வந்து சாட்சி சொன்ன போதும், விசாகையின் மனம் மட்டும் சாந்தமடையவே இல்லை. தன் கற்பில் சந்தேகப்பட்ட இந்த ஊரார் முவ் கன்னியாகவே வாழ்ந்து, கற்பின் பெருமையை உணர்த்த வேண்டும் என மனதில் சபதம் பூண்டாள். தாய், தந்தையிடமும், காதலன் தருமதத்தனிடமும் தன் கருத்தைச் சொன்னாள். அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அதிலும் தருமதத்தன் தன் காதல் உடைந்து போனதை எண்ணி மனம் நொறுங்கிப் போனான். பெற்றோரிடம் ஆசி பெற்று அவள் கன்னிமாடம் ஒன்றை அமைத்தாள். கோயிலுக்கு செல்வதும், கன்னிமாடத்தில் வந்து தவவாழ்வு வாழ்வதுமாக காலம் கழிந்தது. தருமதத்தனுக்கு வேறொருத்தியை திருமணம் செய்ய எண்ணமில்லை. அவ்வூரில் இருந்தால், காதல் எண்ணங்கள் மேலும் வாட்டும் என்பதால் அவன் மதுரைக்கு வந்து விட்டான். அவ்வூரில் வணிகம் செய்து, லாபத்தை ஏழை மக்களுக்கு தானம் செய்தான். கோயில் திருப்பணிகளுக்கு உதவினான். அவனது தர்மசிந்தனை கண்ட மதுரை அரசன், அவனை தன் மந்திரியாக்கிக் கொண்டான். தருமதத்தனுக்கு செல்வம் கொட்டியது.

தன் பெயருக்கேற்றாற் போல் அறப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டான். பல்லாண்டுகள் ஓடி விட்டன. தருமதத்தனுக்கும், விசாகைக்கும் முதுமை தட்டிவிட்டது. கடைசி கட்டத்தில் இருவருக்குமே உதவ ஆளில்லை. இந்நிலையில் ஒரு பெரியவர் தருமதத்தனிடம், திருமணத்துக்கு வயது தடையில்லை. நீ விரும்பினால், இப்போதும் உன் காதலியை மணம் முடிக்கலாம். இருவருமே ஒத்தாசைக்கு ஆளின்றி தவிப்பதை விட, ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்ளலாம், என்றார். தருமதத்தனும் ஊர் சென்றான். விசாகை அவனைப் பார்த்து மகிழ்ந்தாள். ச்அவளிடம் தன் ஆசையைச் சொன்னான். அன்பரே!  என் விரதத்தை இப்பிறவியில் நான் விடுவதாக இல்லை. கடவுளிடம், இனி பிறவியே வேண்டாம் என நான் வாதிடமாட்டேன். அடுத்தபிறவி நிச்சயம் எனக்கு வேண்டும். உங்கள் மனைவியாக வேண்டும். உங்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்பது தான் இந்த விரதத்தின் நோக்கமே. இப்பிறவியில் நமக்கு திருமணம் இல்லை, என்று கையில் முகம் புதைத்து அழுதாள் விசாகை. அவர்கள் நினைத்தபடியே நடந்தது. அடுத்த பிறவியில் அதே பெற்றோருக்கு பிறந்த தருமதத்தனும், விசாகையும் இறையருளால் முன்ஜென்ம ஞாபகம் பெற்று, திருமணம் முடித்து பல குழந்தைகள் பெற்று இனிதே வாழ்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar