Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிவராத்திரி வலம்!
 
பக்தி கதைகள்
சிவராத்திரி வலம்!

வைகை பாயும் மதுரை மாநகரை ஆண்டு வந்தான் வச்சிராங்கதன். இந்த பாண்டிய மன்னனுக்கு வேட்டையில் மிகவும் விருப்பம். இவன் வடபகுதியிலுள்ள காடுகளிலும் சென்று வேட்டையாட விரும்பினான். படைகள் புறப்பட்டன. இவர்கள் ஒரு காட்டில் பல மிருகங்களை வேட்டையாடி கொன்று தள்ளினர். ஒருநாள் காட்டில் வித்தியாசமான பூனை தென்பட்டது. சாதாரண பூனைகளிலிருந்து சற்று மாறுபட்டது. புனுகு என்னும் மருந்து தரும் இப்பூனை புனுகு பூனை எனப்பட்டது. மன்னன் இந்த பூனையை உயிருடன் பிடித்து தன் நாட்டிலுள்ள மருத்துவச்சாலைக்கு கொண்டு செல்ல விரும்பினான். அவனே நேரடி கவனம் எடுத்து குதிரையில் ஏறி, அதை துரத்தினான். பூனை பாய்ந்தோடியது. அதை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியவில்லை. இறுதியாக அது ஒரு மலையைச் சுற்றி ஓடியது. மலையை ஒருமுறை சுற்றி வந்தவுடனேயே அது மனித உருவெடுத்தது. துரத்தி வந்த மன்னன் அதிர்ச்சியடைந்தான். அதிர்ச்சியில் குதிரையை இறுக்கிப்பிடித்திருந்த கயிறை விட்டான். குதிரை தறிகெட்டு ஓடி கீழே விழுந்தது. மன்னன் விழுந்து பலத்த காயமடைந்தான். குதிரை ஓட்டத்தெரியாத மன்னன் என தன்னை ஊரார் இகழ்வார்களே<, இந்த சாதாரண இடத்தில் குதிரை ஓட்டத் தெரியாதவன், போர்க்களத்தில் எப்படி குதிரை ஓட்டப் போகிறான் என கேலி பேசுவார்களே, என்ற வருத்தத்துடன் தட்டுத்தடுமாறி எழுந்த அவனை பின்னால் வந்த வீரர்கள் தூக்கினர். அவன் அவமானத்தால் குன்றி நின்ற வேளையில், மற்றொரு அதிசயம் நிகழ்ந்தது. கீழே விழுந்த குதிரையும் மனித உருவெடுத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர். காயம்பட்டு கிடந்த மன்னனிடம், குதிரையாய் இருந்த வாலிபன் மன்னிப்பு கேட்டான்.

அரசே! தாங்கள் குதிரை ஓட்டுவதில் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ஒரு சிறு அவமானத்திற்கு தாங்கள் ஆட்பட்டதற்கு காரணம் உள்ளது, என்றான். குழம்பிப் போயிருந்த அரசன், முதலில் நீங்கள் யாரென சொல்லுங்கள்? பூனையாகவும், குதிரையாகவும் இருந்த நீங்கள் எப்படி மனிதர் ஆனீர்கள்?என்றான். குதிரை  வாலிபன் அவர்களது கதையைக் கூறினான். அரசே! என் பெயர் கலாதரன். இவன் என் நண்பன் காந்திசாலி. நாங்கள் மனிதர்கள் அல்ல. இந்திரலோக தேவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், நாங்கள் இந்த காட்டுப்பகுதிக்கு வந்தோம். இந்த காட்டில் ஒரு பூஞ்சோலை இருந்தது. அது துர்வாச முனிவருக்குரியது. அதை அறியாத நாங்கள் தோட்டத்திலுள்ள புல் பூண்டுகளை மிதித்து, பூக்களை பறித்து நாசமாக்கினோம். துர்வாசர் வந்து விட்டார். அடேய் மடையர்களா! சிவபூஜைக்குரிய மலர்களை நாசமாக்கினீர்களே! பிடியுங்கள் சாபம்! நீ பூனையாய் பிறப்பாய். நீ குதிரையாய் போவாய்,என சாபமிட்டார். தேவ அந்தஸ்தில் இருந்த நாங்கள், ஒரு சிறு தவறால் மிருகங்களாகி விட்டோம். துர்வாசரிடம் சாப விமோசனம் கேட்டோம். அப்போது அவர் ஒரு கதை சொன்னார். அந்த கதையைச் சொல்லட்டுமா? என்றான் கலாதன் நீண்ட மூச்சுவிட்டு. வச்சிராங்கத பாண்டியன், அக்கதையையும், அவர்கள் தன்னால் சாப விமோசனம் பெற்றதையும் அறிய ஆவலாய் இருந்தான். இப்போது காந்திசாலி மீதி கதையைத் தொடர்ந்தான்.அரசே! துர்வாசர் எங்களிடம் சொன்ன கதையைக் கேளுங்கள். முருகப் பெருமானுக்கும், விநாயகருக்கும் சிவன் ஒரு போட்டி வைத்தார். உலகத்தை ஒரே நாளில் சுற்றி வருபவருக்கு தன்னிடம் உள்ள கனியை பரிசளிப்பதாக சொன்னார். முருகன் புயலென மயிலில் பறந்து விட்டார். விநாயகர் சக்தி இல்லாதவரா என்ன! அவர் நினைத்தால்,தம்பியை விட வேகமாக உலகைச் சுற்றியிருப்பார். அவர் ஆதிமூலம் அல்லவா? தன் தாய் பார்வதியின் கோட்டைக்குள் தந்தை சிவனையே அனுமதிக்க மறுத்து போரிட்ட மாவீரர் அவர். அவருக்கும் <உலகைச் சுற்றுவது கடினமான பணியல்ல. ஆனால், இந்த போட்டியைக் காரணமாக்கி உலகிற்கு ஒரு போதனையை வழங்க விரும்பினார். அதன் காரணமாக தாய், தந்தையை சுற்றி வந்தார்.

திரும்பி வந்த முருகன், தன் தந்தையிடம் இதற்கான விளக்கம் கேட்டார். முருகா, நீ உலகையே ஒருமுறை சுற்றி வந்தாய். உலகைச் சுற்றினால் என்னைச் சுற்றியதாகத்தான் அர்த்தம். ஏனெனில் நாமே உலகம். ஆனால், விநாயகன் நடந்தே என்னைச் சுற்றி வந்து விட்டான். ஆக, இருவருமே வெற்றி பெற்றாலும், பிறர் தயவில் சுற்றுவதை விட, நடந்து சுற்றுவதற்கே அதிக பலன். விநாயகன் அப்படி செய்ததால், போட்டியில் வெற்றி பெற்றவன் ஆகிறான், என விளக்கமளித்தார். முருகன் அவ்விளக்கம் கேட்டு சமாதானமானார், என்று கதையை முடித்தான் காந்தி சாலி. கலாதரன் தொடர்ந்தான்.அரசே! துர்வாசர் இக்கதையைக் கூறி, சிவன் எவ்விடத்தில் மலைகளில் குடி கொண்டிருக்கிறாரோ, அத்தலத்தை நீங்கள் எப்போது கால்நடையாய் சுற்றி வருகிறீர்களோ, அப்போது சுய உருவம் பெறுவாய், என்றார்.  இப்போது, நாங்கள் சிவனே மலையாய் எழுந்துள்ள இந்த அண்ணாமலையை சுற்றி வந்தோம். இப்போது நற்கதி பெற்றோம். நீங்கள் என்னை விரட்டியதால் தான், பூனையாக இருந்த நான் மலையைச் சுற்றி பயத்தில் ஓடினேன். நீரோ குதிரையாய் இருந்த இவன் மீது ஏறி அமர்ந்து மலையைச் சுற்றி வந்தீர்கள். வாகனத்தில் இம்மலையைச் சுற்றியதால், சுற்றி முடிக்கவும் கீழே விழுந்து காயமடைந்தீர்கள், என்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar