Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தலைவிதி!
 
பக்தி கதைகள்
தலைவிதி!

விஜயநகர பேரரசர் ஒருவர் சிருங்கேரி மடத்தில் தங்கியிருந்த பகவத்பாதாள் ஆதிசங்கரரை சந்திக்க வந்தார். அன்று, சங்கரருக்கு கடும் குளிர் காய்ச்சல். நடுக்கத்தில் இருந்த அவரைச் சந்திக்க இயலாது என சீடர்கள் அவரிடம் கூறினர். அரசரோ, சங்கரரைத் தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார். என்ன செய்வதென கையைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில், உள்ளே காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்த சங்கரர், சீடர்களிடம் அரசரை அனுமதிக்கும்படி சொன்னார். சீடர்கள் ஒரு பலகையைக் கொண்டு வந்து போட்டு, அரசரை அமரச் சொன்னார்கள். சற்று நேரத்தில் இன்னொரு பலகை வந்தது. அதைக் கீழே வைத்ததும் கடகடவென ஆடியது. சங்கரர் வந்தார். அவரைப் பார்த்தால் காய்ச்சலால் தாக்கப்பட்டவர் போல் தெரியவில்லை.

அரசனுக்கு ஆச்சரியம். சங்கரருக்கு காய்ச்சல் என சீடர்கள் ஏன் தங்களிடம் சொல்ல வேண்டுமென்று? சங்கரர் அமர்ந்தார். அரசனுக்கு ஆசி வழங்கினார். அரசர் சங்கரரிடம், சுவாமி! தங்கள் அருகிலுள்ள பலகை ஏன் ஆடிக் கொண்டிருக்கிறது? என்றார். அதற்கு காய்ச்சல், என்ற சங்கரரின் முகத்தை அரசன் ஏறிட்டு நோக்க, என் காய்ச்சலை அந்த பலகைக்கு மாற்றியுள்ளேன். உனக்கு ஆசி வழங்கிவிட்டு மீண்டும் எடுத்துக் கொள்வேன், என்றார். சுவாமி! அதை அதனிடமே விட்டு விடக்கூடாதா? தாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும், என்றார் அரசர். குழந்தாய்! அவரவர் விதியை அவரவரே அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து விலகியோட நினைக்கக்கூடாது, என்றார். ஜடப்பொருளுக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது என நினைத்த ஆதிசங்கரரிடம் கண்ணீர் மல்க அரசர் விடைபெற்றார். அரசன் சென்றதும், பலகை ஆட்டத்தை நிறுத்தியது. சங்கரர் நடுங்க ஆரம்பித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar