திரிலோசனன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். மகத நாட்டின் அசைக்க முடியாத மகாராஜா அவன். வீரம் இருக்கிறது. செல்வம் இருக்கிறது. கல்வி இருக்கிறது. எல்லாம் இருந்து என்ன செய்ய? அவனுக்கு இந்த மானிடப்பிறவி பிடிக்கவில்லை. அப்போது அவனது அவைக்கு வந்தார் விசுவாமித்திரர். சுவாமி, தங்கள் வரவு நில்வரவாகட்டும். எனக்கு பொன்னும். பொருளும், வீரமும் எல்லாம் இருந்தும் இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. தங்களைப் போன்ற முனிவர்களிடம் இருப்பது போன்ற பற்றற்றநலை வேண்டும், அதற்கு பிறவா நலை வேண்டும். இதற்கு ஒரு வழி சொல்லுங்கள், என்றான். விசுவாமித்திரர் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார். திரிலோசனா, உன் கோரிக்கை வினோதமாக இருக்கிறது. நான் செல்லும் நாடுகளில் உள்ள மன்னர்களெல்லாம், இருப்பது போதாதென்று, மண்ணாசை கொண்டு, வெற்றி மீது வெற்றிகள் குவிக்க ஆசி கேட்கின்றனர். நீயோ வித்தியாசமானவாய் இருக்கிறான். பிறவிகள் இப்போது உனக்கு நறைவடையாது. நீ முன்வினைகளின் காரணமாக மீண்டும் ஒருமுறை பிறப்பாய், என்றார். திரிலோசனன் கண்ணீர் விட்டான். இன்னும் இந்தப் பிறவிப்பிணி என்னைக் கவ்வுமா? வேண்டாம்....தாங்கள் நனைத்தால் முடியாததா? என்று கெஞ்சினான். விசுவாமித்திரர், அவனைத் தேற்றினார். திரிலோசனா, நீ இந்தப் பிறவியை விரைவிலேயே முடிப்பாய். அடுத்த பிறவியிலும், நீ மன்னர் குலத்திலேயே பிறப்பாய். அந்தப்பிறவியில், நீ எடுக்கப் போகும் அத்தனை பிறவிகளின் துன்பங்களும் விளையும். அவை என்னாலேயே உனக்கு விளையும். அதன்பின் உனக்கு பிறவிப்பிணி இருக்காது, என்றார். திரிலோசனன் மகிழ்ந்தான். அடுத்த பிறவியில் தாங்கள் தரும் துன்பங்கள் அனைத்தையும் ஏற்கிறேன், என்றான். விசுவாமித்திரர் அவனிடம் விடை பெற்றார். காசி நாட்டு மன்னன் தன் மகள் மதிவாணிக்கு சுயம்வரம் நிடத்துவதாக மன்னர்களுக்கு ஓலை அனுப்பினான். திரிலோசனன் அங்கு சென்றான். அவனது எதிரி நாட்டவர்களும் சுயம்வரத்திற்கு வந்தனர்.
சுயம்வர வேளை வந்தது. மதிவாணி மலர் மாலையுடன் காத்திருந்தாள். காசி மன்னன் சுயம்வர நபந்தனையை அறிவித்தான். கூண்டிற்குள் அடைக்கப்பட்ட சிங்கம் ஒன்றைக் காட்டினான். மன்னாதி மன்னர்களே! காசிராஜன் மகள் உங்களுக்கு கிடைப்பது என்பது எளிதல்ல. நீங்கள் இந்த சிங்கத்துடன் போரிட்டு வெல்ல வேண்டும். சிங்கத்தை அடக்கும் சிங்கமே என் மகளின் மணாளனாக முடியும், என்றான். மன்னர்கள் கலங்கிப் போய், சிங்கத்துடன் போரா...சிங்கத்தை யாரால் வெற்றி கொள்ள முடியும், என்று பிதற்றினர். பலருக்கு பயத்தில் ரத்தமே உறைந்து விட்டது. வந்த சுவடு காணாமல் அப்போதே கிளம்பி விட்டனர் சிலர். கொஞ்ச நிஞ்ச தைரியசாலிகள், யாராவது சண்டையிட்டால், வேடிக்கை பார்த்து விட்டு போவேமே, என்று அமர்ந்திருந்தனர். திரிலோசனன் தைரியசாலி அல்லவா? வருவது வரட்டும், பிறவியே வேண்டாம் என்று மார்தட்டுபவன் அல்லவா? அவன் களத்தில் இறங்கத் தயாரானான். கூண்டை ÷நாக்கி வீரநிடை போட்டான். அரங்கமே அதிர்ச்சியில் மூழ்கிக் கிடந்தது. சிங்கத்தின் கூண்டருகே சென்றதும், அவனே கூண்டைத் திறந்து விட்டான். பசித்துக் கிடந்த சிங்கம் பாய்ந்து வந்தது. சிங்கத்தின் பிடரியை எட்டிப்பிடித்தான் திரிலோசனன். பயங்கரமான போராட்டம் நகழ்ந்தது. மதிவாணி அந்த வீரமகனை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், இந்த வீரத்திருமகன் மட்டும் ஜெயித்து விட்டால், பேரழகு பொருந்திய இவனுக்கு மனைவி ஆவேன், என்று மனதுக்குள் பூரித்தாள். போராட்டம் தொடர்ந்தது. சிங்கத்தை பூனை போல அடக்கி விட்டான் திரிலோசனன். காசி மன்னன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். தன் மகளுக்கேற்ற வீர மணாளன், கிடைத்து விட்டதை எண்ணி, மதிவாணியின் தாயும் சந்தோஷப்பட்டாள். திரிலோசனன் மதிவாணி திருமண ஏற்பாடுகள் வேகமாய் நிடந்தது. வந்திருக்கும் ராஜாக்களெல்லாம் தங்கியிருந்து, மணமக்களை வாழ்த்திச் செல்ல, காசி மன்னன் கேட்டுக் கொண்டான். அங்கே வந்தவர்களில், திரிலோசனின் எதிரிகள் சிலரும் உண்டு. அவர்களுக்கு, திரிலோசனின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு அழகான பெண்ணொருத்தியை அடைய திட்டமிட்டு வந்தோம். நிம்மில் யாருக்கும் அவள் மனைவியாகவில்லை. நிம் எதிரி அவளை தன்வயப்படுத்தி விட்டானே, என்று பொருமினர். அவர்கள் ஒன்றுகூடி மந்திராலோசனை நிடத்தினர். அவனுக்கு இந்த திருமண வாழ்வு நலைக்கக் கூடாது. அவனை எப்படியும் தீர்த்து விட வேண்டும், என்று கங்கணம் கட்டினர். ஒரு மங்கல நாளில் திருமணம் இனிதே முடிந்தது. புதுமணத்தம்பதியர் காசி விஸ்வநாதனை தரிசிக்க சென்றனர். இறைவா! வீரமிக்க கணவனை எனக்கு கொடுத்ததற்காக நின்றி. அவரோடு நான் பல காலம் வாழ அருள்புரிய வேண்டும், என வேண்டினாள் மதிவாணி. மணமக்கள் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எதிரி நாட்டு அரசன் ஒருவன் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். திடீரென திரிலோசனின் முதுகுக்கு பின்னால் பாய்ந்த அந்த மாபாதகன், திரிலோசனின் தலையை வெட்டி வீழ்த்தினான். மணவிழாவுக்கு வந்த கூட்டமே விக்கித்து விட்டது. திரிலோசனனைக் கொன்றவனின் தலையை காவலர்கள் அந்தக் கணமே சாய்த்தனர். அதனால் பயனென்ன! மாண்டவன் வரவா போகிறான். மதிவாணி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள். அவளை தண்ணீர் தெளித்து எழுப்பியதும், மஞ்சள் காயாத தன் மாங்கல்யத்தை பார்த்தாள். வாசலில் இருந்தபடியே காசிநாதனை ஏசினாள். அட கண்ணில்லாத தெய்வமே! நான் என்ன கொடுமை செய்தேன். உலகில் இப்படி ஒரு கொடுமையை எந்தப் பெண்ணுக்கும் தராதே! இரும்பு இதயத்தோனே! என்னை சோதித்து விட்டதாக நனைக்காதே! என் கணவனை கூட்டிச்சென்ற இடத்துக்கு என்னையும் கூட்டிச்செல், என்று ஆக்ரோஷமும்,அழுகையுமாக கத்தியவள், கோயில் அருகில் வீறிட்டு பாய்ந்து கொண்டிருந்த கங்கையை ÷நாக்கி ஓடினாள். கங்கையில் குதித்தாள். அவளை யாராலும் தடுக்க முடியவில்லை. கங்காதேவி அவளைப் பார்த்து கலங்கினாள்.
உனக்கு ஏற்பட்டது பெருங்கொடுமை தான். அதற்காக உன் உயிரை நான் எடுக்க மாட்டேன், என்றவள், அவளை அப்படியே நீரின் மேல்பரப்பில் தாங்கிச்சென்றாள். தண்ணீரில் வந்த அந்த பெண்ணை, பார்த்தார் கவுதம முனிவர். ஆற்றில் நீராட வந்த அவர், அவளது தலைமுடியை பிடித்து இழுத்தார். கண்விழித்த அந்தப் பெண், நான் இன்னும் சாகவில்லையா, என்றாள். உடனே கவுதமர், அம்மா, நீ தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும், என்றார். வேதனை விரக்தியில் சிரித்தாள் மதிவாணி. கணவனை இழந்த நான் தீர்க்க சுமங்கலியா? என்றாள். நிடந்த கதையை தன் ஞான திருஷ்டியால் அறிந்திருந்த அவர், அம்மா! இதெல்லாம் காரணத்துடன் நிடக்கிறது. உன் கணவன், பிறவியே வேண்டாம் என வேண்டினான். இறைவன் அனவது சித்தம் போலவே செய்தார். உன் கழுத்தில் இருக்கும் இந்த மாங்கல்யம் கழற்ற முடியாதது. அடுத்த பிறவி வரை இது உன் கழுத்திலேயே இருக்கும். அதனால் தான், நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய், என வாழ்த்தினேன். இப்போது உன் கணவன், அரிச்சந்திரன் என்ற பெயரில் பிறவி எடுத்துள்ளான். நீ இங்கே தவமிருந்து, உயிரைப் போக்குவாய். அடுத்த பிறவியில், நீ சந்திரமதி என்ற பெயரில் பிறந்து, அவனை அடைவாய். உன் கழுத்தில் கிடக்கும் தாலியை அரிச்சந்திரனால் மட்டுமே பார்க்க இயலும். அடுத்த பிறவியில், உனக்கு ஏற்படப்போகும் துன்பங்களை இலகுவாக்கும் ஒத்திகையே இந்தப்பிறவியில் நீ அனுபவித்தது. பெரும் துன்பம் அனுபவித்தாலும், நீ தெய்வப் பெண்ணாய், என்றும் இந்நாட்டில் வணங்கப்படுவாய், என்றார். ஒருவாறாக மனம் தேறிய மதிவாணி, தவமிருந்து உயிர் நீத்தாள். அடுத்த பிறவியில் அவள் சந்திரமதியாய் பிறந்து, உலகம் போற்றும் உத்தமி ஆனாள்.